தமிழ்நாட்டில் அதிக வாக்காளர்களை கொண்ட தொகுதி, குறைந்த வாக்காளர்களை கொண்ட தொகுதி.. எது தெரியுமா?
சென்னை: தமிழ்நாட்டின் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் மொத்தமாக 6.20 கோடி வாக்காளர்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் 3.15 கோடி பெண் வாக்காளர்களும், 3.04 கோடி ஆண் வாக்காளர்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிக வாக்காளர்களை கொண்ட தொகுதியாக சோழிங்கநல்லூர் தொகுதியும், குறைந்த வாக்காளர்களை கொண்ட தொகுதியாக துறைமுகம் தொகுதியும் உள்ளது.
தமிழ்நாட்டின் இறுதி வாக்காளர் பட்டியல் மாநில தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹூ வெளியிட்டுள்ளார். இறுதி வாக்காளர் பட்டியல் அடிப்படையில் தமிழ்நாட்டில் 6 கோடியே 20 லட்சத்து 41 ஆயிரத்து 179 வாக்காளர்கள் உள்ளனர்.
அதில் அதிகபட்சமாக பெண்களில் 3 கோடியே 15 லட்சத்து 43 ஆயிரத்து 286 வாக்காளர்களும், ஆண்களில் 3 கோடியே 4 லட்சத்து 89 ஆயிரத்து 866 வாக்காளர்களும் இருக்கின்றனர். அதேபோல் மூன்றாம் பாலினத்தவர்களில் 8 ஆயிரத்து 27 வாக்காளர்கள் இருக்கின்றனர்.

புதிய வாக்காளர்கள் எவ்வளவு?
அதேபோல் வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்த்தலுக்காக 10 லட்சத்து 54 ஆயிரத்து 566 விண்ணப்பங்கள் பெற்றுள்ளன. அதில் 10 லட்சத்து 17 ஆயிரத்து 141 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளன. அதிலும் பெண் வாக்காளர்களே அதிகமாக இருக்கின்றனர். புதிதாக 5 லட்சத்து 46 ஆயிரத்து 255 பெண்கள் வாக்காளர் பட்டியலில் இணைந்துள்ளனர்.

நீக்கப்பட்ட வாக்காளர்கள்
அதேபோல் 4 லட்சத்து 70 ஆயிரத்து 291 ஆண் வாக்காளர்கள் புதிதாக வாக்காளர் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளனர். மூன்றாம் பாலினத்தவர்களில் 625 பேர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமல்லாமல் பெயர் நீக்கலுக்காக 8,43,007 விண்ணப்பங்கள் பெறப்பட்டு அவற்றில் 8,02,136 வாக்காளர்களின் பெயர்கள் இடப்பெயர்ச்சி என்று 5 லட்சத்து 32 ஆயிரத்து 526 வாக்காளர்களும், இரட்டை பதிவு என்று 21 ஆயிரத்து 946 வாக்காளர்களும், இறப்பு என்று 2 லட்சத்து 47 ஆயிரத்து 664 பெயர்களும் நீக்கப்பட்டுள்ளனர்.

சோழிங்கநல்லூர் முதலிடம்
இறுதி வாக்காளர் பட்டியலின்படி செங்கல்பட்டு மாவட்டத்திற்குட்பட்ட சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதி தமிழ்நாட்டிலேயே அதிக வாக்காளர்களைக் கொண்டுள்ள தொகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. சோழிங்கநல்லூர் தொகுதியில் மொத்தம் 6 லட்சத்து 66 ஆயிரத்து 295 வாக்காளர்கள் உள்ளனர். அதில் ஆண்கள் 3 லட்சத்து 34 ஆயிரத்து 081 பேரும், பெண்கள் 3 லட்சத்து 32 ஆயிரத்து 096 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 118 பேரும் உள்ளனர்.

கவுண்டம்பாளையம் தொகுதி
அதேபோல் அதிக வாக்காளர்களை கொண்ட தொகுதிகளின் பட்டியலில் கோவை மாவட்டத்தின் கவுண்டம்பாளையம் தொகுதி இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்தத் தொகுதியில் மொத்தம் 4 லட்சத்து 57 ஆயிரத்து 408 வாக்காளர்கள் உள்ளனர். அதில் ஆண்கள் 2 லட்சத்து 27 ஆயிரத்து 835 பேரும், பெண்கள் 2 லட்சத்து 29 ஆயிரத்து 454 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 119 பேரும் உள்ளனர்.

குறைந்த வாக்காளர்கள் தொகுதி
அதேபோல் தமிழ்நாட்டிலேயே குறைந்த வாக்காளர்கள் கொண்ட தொகுதியாக சென்னை மாவட்டத்திற்குட்பட்ட துறைமுகம் தொகுதி உள்ளது. இத்தொகுதியின் மொத்த வாக்காளர்களாக 1 லட்சத்து 70 ஆயிரத்து 125 பேர் உள்ளனர். அதில் ஆண்கள் 88 ஆயிரத்து 396 பேரும், பெண்கள் 81 லட்சத்து 670 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 59 பேரும் உள்ளனர்.

2ம் இடத்தில் கீழ்வேளூர்
துறைமுகம் தொகுதிக்கு அடுத்தபடியாக 2ம் இடத்தில் நாகை மாவட்டத்தின் கீழ்வேளூர் தொகுதி உள்ளது. இத்தொகுதியின் மொத்த வாக்காளர்களாக 1 லட்சத்து 75 ஆயிரத்து 128 பேர் உள்ளனர். அதில் ஆண்கள் 85 ஆயிரத்து 652 பேரும், பெண்கள் 89 ஆயிரத்து 474 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 2 பேரும் உள்ளனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications