சோதனைகளை சாதனைகளாக மாற்றிய ஷ்ரேயாஸ் ஐயர்.. 50 ஓவர் உலகக் கோப்பைக்கான மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ரெடி!
சென்னை: ஷார்ட் பால்களுக்கு எதிரான இந்திய வீரர் ஷ்ரேயாஸ் ஐயரின் ஆட்ட நுணுக்கம் மாறியுள்ளது. இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டுக்கான இந்திய அணியின் சிறந்த மிடில் ஆர்டர் வீரராக இருப்பார் என்று பார்க்கப்படுகிறது.
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இந்தத் தொடரில் முதல் போட்டியை தென் ஆப்பிரிக்கா அணி வென்றது.
இந்த நிலையில் இரண்டாவது ஒருநாள் போட்டி ராஞ்சி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணி முதலில் பேட் செய்து 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 278 ரன்கள் எடுத்தது. 279 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இந்தியா விரட்டியது.

இந்திய அணி வெற்றி
அப்போது இந்திய அணி 48 ரன்கள் எடுத்து போது 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய போது இஷான் கிஷன் - ஷ்ரேயாஸ் ஐயர் இணைந்து 161 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இஷான் கிஷன் 93 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனைத்தொடர்ந்து ஷ்ரேயாஸ் ஐயர் ஒருநாள் கிரிக்கெட்டில் தனது இரண்டாவது சதத்தை பதிவு செய்தார். அவர் 113 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்ததோடு, இந்திய அணியை 45.5 ஓவர்களில் வெற்றிப்பாதைக்கும் அழைத்து சென்றார்.

ஷ்ரேயாஸ் ஐயர் பிரச்சினை
ஐபிஎல் தொடருக்கு பின் தொடர்ந்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷ்ரேயாஸ் ஐயர், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் மீண்டும் பழைய ஃபார்முக்கு வந்துள்ளார். பழைய ஃபார்ம் என்பதைவிட தனது பிரச்சினைகளை சரிசெய்து வந்துள்ளார் என்று கூறுவதே சரியாக இருக்கும். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்க இந்திய அணி சென்றிருந்த போது, ஷ்ரேயாஸ் ஐயர் களமிறங்கியதும், அவருக்கு ஷார்ட் பால்களை வீசுமாறு பயிற்சியாளர் மெக்கல்லம் அறிவுறுத்தி இருப்பார்.

வேகப்பந்துவீச்சில் தடுமாற்றம்
அதற்கேற்ப இங்கிலாந்து வீரர்களும் ஷாட் பால்களை வீசி ஷ்ரேயாஸ் விக்கெட்டை வீழ்த்தி இருப்பர். அதேபோல் சுழற்பந்துவீச்சை இறங்கி வந்து அடிக்கும் பலம் கொண்ட ஷ்ரேயாஸ் ஐயருக்கு, வேகப்பந்துவீச்சு எதிர்கொள்ள முடியாத பலவீனமும் இருந்தது. மணிக்கு 140 கிமீ வேகத்தில் வீசும் பந்துகள் ஷ்ரேயாஸ் ஐயரை தொடர்ந்து அச்சுறுத்தி வந்தது. அதனாலேயே அவர் இந்திய மெயின் அணியில் இருந்து கழற்றிவிடப்பட்டார்.

பிரச்சினைகளை சரிசெய்த ஷ்ரேயாஸ்
ஆனால் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான தொடரில் வேகப்பந்துவீச்சிற்கு எதிரான பிரச்சினையை சரிசெய்து ஷ்ரேயாஸ் விளையாடி வருகிறார். அது தென் ஆப்பிரிக்கா தொடர்களில் நன்றாக பலனை கொடுத்துள்ளது. ஷார்ட் பால் ஆடுவதில் பிரச்சினை இருந்தால், ஆடுவதை விட, விட்டுவிடுவது மட்டுமே மிகச் சிறந்த தீர்வு. ஆடுவது என்று முடிவு செய்தால், வலை பயிற்சியில் ஷார்ட் பால்களை ஆடி சலித்துவிட வேண்டும். ஏனென்றால் களத்தில் ஷார்ட் பால், அடிப்பதா வேண்டாமா என்கின்ற குழப்பத்தை உருவாக்கி தடுமாற வைக்கும். அதனை பயிற்சியின் மூலம் ஷ்ரேயாஸ் ஐயர் சரிசெய்து வருகிறார்.

ஒருநாள் போட்டிகளில் ஷ்ரேயாஸ்
அதுமட்டுமல்லாமல் ஷ்ரேயாஸ் ஐயரை ரன்கள் எடுக்கவிடாமல் களத்தில் வைத்திருப்பது அவ்வளவு சுலபம் அல்ல. இதனால் ஷ்ரேயாஸ் ஐயருக்கு ஒருநாள் கிரிக்கெட் வேகமாக கைகூடியுள்ளது. முதல் ஒருநாள் போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் அடித்த அரைசதமும் சாதாரணமல்ல. கடினமான ஆடுகளத்தில் ஷ்ரேயாஸ் ஐயர் அடித்த அரைசதமே, சஞ்சு சாம்சன் நிதானமாக விளையாட காரணமாக அமைந்தது.

50 ஓவர் உலகக்கோப்பை
இதன்மூலம் ஷ்ரேயாஸ் ஐயர் இந்திய ஒருநாள் அணிக்கான மெயின் அணியில் விரைவில் இடம்பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த ஆண்டு இந்தியாவில் உலகக்கோப்பை தொடர் நடக்கவுள்ள நிலையில், சரியான மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக ஷ்ரேயாஸ் ஐயர் இருப்பார் என்றே கணிக்கப்படுகிறது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications