Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

''மொழியினும் சிறந்தது மெளனம்; மெளனத்தினும் சிறந்தது செயல்'' .. கவிஞர் வைரமுத்து ட்வீட்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மொழியினும் சிறந்தது மெளனம்;மெளனத்தினும் சிறந்தது செயல் என்று கவிஞர் வைரமுத்து டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளார். கவிஞர் வைரமுத்து டுவிட்டரில் மக்களுக்கு பயனுள்ள நல்ல கருத்துகளை கூறுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

இந்த நிலையில் இன்று அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் கூறி இருப்பதாவது:-

 Silence is better than language; action is better than silence says Poet Vairamuthu

நெற்றித்தீ - 14

கொக்கு - எறும்பு - தேனீ
மூன்றும் போதிக்கும்
நீதிமொழி போல்
மனித மொழிகள்
போதிப்பதில்லை

ஆனால்,
மூன்றும் பேசுவதில்லை

மொழியினும் சிறந்தது
மெளனம்;
மெளனத்தினும் சிறந்தது
செயல்

 Silence is better than language; action is better than silence says Poet Vairamuthu

கவிஞர் வைரமுத்துவின் இந்த கருத்துக்கு நெட்டிசன்கள் பல்வேறு கமெண்ட்கள் செய்து வருகின்றனர். ''வாயில்லா சில்லரைகள் சத்தமிட்டாலும் வாயிருந்தும் பேசாத சுருக்குப் பை போல மௌனியாக இரு இது கவிஞரின் வரிகள் மௌனத்தை ஒரு ஹைக்குவில் இத்தனை அழகாக யாரும் சொல்லிவிட முடியுமா?????'' என்று ஒரு நெட்டிசன் கருத்து கூறியுள்ளார். ''கவிப்பேரரசரின் ஒவ்வொரு கருத்தும் அறிவாற்றலை தூண்டுவதாக இருக்கும் செறிவானது'' என்று மற்றொருவர் கூறி இருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+