SIR: கவனிச்சீங்களா.. எடப்பாடி, நயினார் தொகுதியில் கம்மி.. ஸ்டாலின், உதயநிதி தொகுதியில் அதிகம்
சென்னை: பீகாரைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் சார் பணிகள் மேற்கொள்ளப்பட்டனர். சார் பணிகள் முடிந்துள்ள நிலையில், வரைவு வாக்காளர் பட்டியல் இன்று மாவட்டம் வாரியாக வெளியிடப்பட்டது. அதில் எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிசாமி தொகுதியில் 26,375 மட்டுமே நீக்கப்பட்டுள்ளனர். மறுபுறம் முதல்வர் மற்றும் துணை முதல்வர் தொகுதிகளில் 35%க்கு அதிகமான வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
பீகாரில் கடந்த மாதம் தேர்தல் நடந்த நிலையில், அதற்கு முன்பு அங்கு எஸ்ஐஆர் பணிகள் நடத்தப்பட்டன. அதேபோல மற்ற தேர்தல் நடக்கும் மாநிலங்களிலும் எஸ்ஐஆர் பணிகளை மேற்கொள்ளத் தேர்தல் ஆணையம் திட்டமிட்டது. அதன்படி தமிழ்நாட்டிலும் எஸ்ஐஆர் பணிகள் நடத்தப்பட்டன. கடந்த டிசம்பர் 14 வரை எஸ்ஐஆர் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்தச் சூழலில் தான் இன்றைய தினம் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று மாவட்டம் வாரியாக வெளியிடப்பட்டது. அதில் எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி மற்றும் நயினார் நாகேந்திரனின் தொகுதிகளில் வாக்காளர் நீக்கம் குறைவாகவே இருக்கிறது.
சேலம்
சேலம் மாவட்டத்தைப் பொறுத்தவரை அங்கு மொத்தம் 11 தொகுதிகள் உள்ளனர். அதில் மொத்தமாக 3,62,429 பேர் நீக்கப்பட்டுள்ளனர். இறந்தவர்கள் என ஒரு லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ள நிலையில், முகவரி மாற்றம் அல்லது குடியிருப்பில் இல்லாதவர்கள் என்று 2.41 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர். அதேபோல இரட்டை பதிவுகள் என்ற அடிப்படையில் சுமார் 20 ஆயிரம் பேர் நீக்கப்பட்டுள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியலில் எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிசாமியின் எடப்பாடி தொகுதியில் சார் பணிகளுக்குப் பிறகு ஆண்கள் 1,35,654 பேரும், பெண்கள் 1,31,693 பேரும், இதரர் 27 பேரும் என மொத்தம் 2,67,374 பேரும் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எடப்பாடி தொகுதி
எடப்பாடி தொகுதியைப் பொறுத்தவரை உயிரிழந்தவர்கள் என்ற அடிப்படையில் 9323 பேர் நீக்கப்பட்டுள்ளனர். குடியிருப்பில் இல்லாதவர்கள் அல்லது முகவரி மாற்றம் செய்தவர்கள் என்ற அடிப்படையில் 14,950 பேர் நீக்கப்பட்டுள்ளனர். மேலும், இரட்டை பதிவுகள் என 2102 பேர் நீக்கப்பட்டுள்ளனர். அதாவது மொத்தம் 26,375 பேர் நீக்கப்பட்டுள்ளது.
சேலத்தில் வாக்குச்சாவடி விவரத்தைப் பொறுத்தவரை சீரமைப்புக்கு முன்பு 3264 வாக்குச்சாவடிகள் இருந்தனர். இப்போது சீரமைப்பிற்கு பிறகு அது 3468ஆக உயர்ந்துள்ளது. அதாவது கூடுதலாக 204 வாக்குச்சாவடிகள் சேர்க்கப்பட்டுள்ளனர். எடப்பாடி தொகுதியில் 325 வாக்குச்சாவடிகள் இருந்த நிலையில், இப்போது 17 வாக்குச்சாவடிகள் கூடுதலாகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.
நயினார் நாகேந்திரன்
அதேபோல திருநெல்வேலி மாவட்டத்தில் 5 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளது. அதில் நயினார் நாகேந்திரன் போட்டியிட்ட நெல்லை சட்டமன்றத் தொகுதி எஸ்.ஐ.ஆர்க்கு முன் 3,05,804 வாக்காளர்கள் இருந்தனர். எஸ்ஐஆர் பணிகளில் 42,119 பேர் மட்டுமே நீக்கப்பட்டுள்ளனர். எஸ்.ஐ.ஆர் பணிகளுக்குப் பிறகு அங்கு 2,63,685 வாக்காளர்கள் உள்ளனர். அதாவது அங்கு 13.77% சதவீதம் பேர் மட்டுமே நீக்கப்பட்டுள்ளனர்.
முதல்வர் ஸ்டாலின் தொகுதி
மறுபுறம் முதல்வர் ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில் சுமார் 1,03,812 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். கொளத்தூரில் எஸ்ஐஆர் பணிகளுக்கு முன்பு 2,90,653 வாக்காளர்கள் இருந்தனர். இப்போது அங்கு 1,86,841 வாக்காளர்கள் மட்டுமே உள்ளனர். அதாவது அங்குச் சார் பணிகளில் சுமார் 35.71% வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
உதயநிதி தொகுதி
அதேபோல துணை முதல்வரான உதயநிதி தொகுதியில் SIR பணிகளுக்கு முன்பு 2,40,087 வாக்காளர்கள் இருந்தனர். SIR பணிகளில் 89,241 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இப்போது அங்கு 1,50,846 வாக்காளர்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். அதாவது SIR பணிகளால் அங்கு 37.17% வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
-
இது தமிழ்நாடு ப்ரோ.. பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி! கை கொடுக்காத ஷாவின் ’அறுபடை வீடு’ பாலிடிக்ஸ் -
ஐசியூவில் இருந்த தேதிமுக.. உயிர் கொடுத்ததே அதிமுக தான்! புதுக்கோட்டையில் பொரிந்து தள்ளிய எடப்பாடி! -
லீமா ரோஸ் எனும் விஷ விதை.. பாஜக கண்ணை காட்டுனா போதும்! அதிமுக அவர் கையில்.. குண்டை போட்ட அதிமுக மாஜி -
Land Rover Defender கான்வாயில் வரும் ஸ்டாலின் பெயரில் ஒரு வாகனம் கூட இல்லை! சீமான் சொத்து எவ்வளவு? -
Election Exclusive: அந்த பக்கம் சசிகலா..இந்த பக்கம் ராமதாஸ்! எடப்பாடிக்கு எல்லா பக்கமும் சிக்கல் தான்! 2026 ரொம்ப கஷ்டம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது












Click it and Unblock the Notifications