200 பக்கம்.. ஸ்டாலின் கைக்குச் சென்ற 'ரிப்போர்ட்'.. அடுத்து என்ன? ‘அதிரடி’ - கலக்கத்தில் மாஜிக்கள்!
சென்னை : முதல்வர் ஸ்டாலினிடம், ஸ்மார்ட் சிட்டி ஊழல் தொடர்பான டேவிதார் கமிஷன் ரிப்போர்ட் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த அறிக்கையின்படி விரைவில் அதிரடி நடவடிக்கைகள் தொடங்கும் எனக் கூறப்படுகிறது.
Recommended Video
கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த முக்கியமான துறையின் அமைச்சராக இருந்த புள்ளி, உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் பலர் கலக்கத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
2015ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்காக தமிழகத்தில் இருந்து 11 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டு, ஒவ்வொரு நகரத்தையும் சீரமைக்க ரூ.1,000 கோடி ஒதுக்கப்பட்டது.
இந்தத் திட்டத்தில் பெரும் முறைகேடுகள் நடந்ததாக எதிர்க்கட்சியாக இருந்த திமுக குற்றம்சாட்டியது. பின்னர் ஆளுங்கட்சியான பிறகு முதல்வர் ஸ்டாலின், இதனை விசாரிக்க ஆணையம் அமைத்தார்.

ஸ்மார்ட் சிட்டி ஊழல்
மத்திய மற்றும் மாநில அரசுகளின் நிதி பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு தமிழகத்தின் சென்னை, கோவை, மதுரை, தஞ்சாவூர், சேலம், வேலூர், திருப்பூர், தூத்துக்குடி, நெல்லை, திருச்சி, ஈரோடு ஆகிய 11 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. சென்னையில் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணியால் பல இடங்களில் மழைநீர் வெளியேறாமல் தேங்கியிருந்தது சர்ச்சையானது. இந்தத் திட்டங்களில் பல கோடி ஊழல் நடைபெற்றதாகக் குற்றம்சாட்டப்பட்டது.

டேவிதார் கமிஷன்
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, ஸ்மார்ட் சிட்டி முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி டேவிதார் தலைமையில் ஒரு நபர் ஆணையத்தை அமைத்து உத்தரவிட்டார் முதல்வர் ஸ்டாலின். டேவிதார் ஒரு நபர் ஆணையம் ஸ்மார் சிட்டி முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தி 3 மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது.

தீவிர விசாரணை
சென்னை, கோவை, சேலம் உள்ளிட்ட 11 மாநகராட்சிகளில் நடைபெற்று வந்த ஸ்மார்ட் சிட்டி பணிகளை விசாரணை ஆணையத் தலைவர் டேவிதார் பார்வையிட்டு தீவிரமாக ஆய்வு செய்தார். ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கான பணிகள் சரியான முறையில் செயல்படுத்தப்பட்டதா? இதற்காக மத்திய மற்றும் மாநில அரசுகளின் நிதி வழிகாட்டு நெறிமுறைப்படி செலவழிக்கப்பட்டதா? திட்டப்பணிகளுக்கான ஒப்பந்தங்கள் வழங்கும்போது அதற்கான நடைமுறை பின்பற்றப்பட்டதா? என ஆய்வு செய்தார் டேவிதார்.

அறிக்கை ரெடி
தவறுகள் நடந்திருந்தால் அதற்கு யார் பொறுப்பு என்றும் இந்த ஆணையம் விசாரணை நடத்தி வந்தது. திட்டப் பணிகளில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக அதிகாரிகளிடம் விளக்கங்கள் கேட்கப்பட்டது. இந்த நிலையில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நடைபெற்ற முறைகேடு தொடர்பான அறிக்கை தயார் செய்யப்பட்டு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் இன்று சமர்ப்பிக்கப்பட்டது.

யாருக்கெல்லாம் தொடர்பு?
ஒரு நபர் விசாரணை ஆணைய தலைவர் டேவிதார் இன்று சுமார் 200 பக்கங்கள் கொண்ட விசாரணை அறிக்கையையும், தொடர்புடைய ஆவணங்களையும் தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் அளித்தார். மேலும், தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் ஸ்மார்ட் சிட்டி பணிகளில் எங்கெல்லாம் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்துள்ளன, யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது என்பது குறித்தும் முதல்வர் ஸ்டாலினிடம் எடுத்துரைத்துள்ளார் டேவிதார்.

அடுத்து என்ன?
இந்த அறிக்கையின் அடிப்படையில் ஸ்மார்ட் சிட்டி பணிகளில் நடைபெற்றுள்ள ஊழல் குறித்து விசாரிக்க லஞ்ச ஒழிப்பு துறையினருக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. லஞ்ச ஒழிப்புத்துறையினர் இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் விரைவில் அதிரடி ரெய்டைத் தொடங்குவார்கள் என்றும் கூறப்படுகிறது.

கலக்கம்
ஸ்மார்ட் சிட்டி ஊழல் தொடர்பான ரிப்போர்ட் முதல்வர் ஸ்டாலினின் கைக்குச் சென்றுள்ளதால், எப்போது வேண்டுமானாலும் நடவடிக்கை பாயலாம் என்பதால், முக்கியமான துறைக்கு அமைச்சராக இருந்த கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த புள்ளி, ஸ்மார்ட் சிட்டி விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள் என அனைவரும் கலக்கத்தில் இருக்கின்றனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications