மாஸ்டர்மைண்ட் "ரோலக்ஸ்" யார்? சென்னைக்கு வந்த பல கிலோ கொகைன்.. அடேங்கப்பா மதிப்பு இத்தனை கோடியா?
சென்னை: எத்தியோப்பியாவிலிருந்து நூதன முறையில் சென்னைக்கு கடத்தி வரப்பட்ட கொகைன் போதை பொருட்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
இதை கடத்தி வந்த நபரையும் கைது செய்துள்ளனர். இந்த போதைப்பொருளின் சர்வதேச மதிப்பு ரூ.100 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெனிசுலாவிலிருந்து வந்த பெண் ஒருவர் இதேபோல போதை பொருட்களை கடத்தி இருந்த நிலையில் கைது செய்யப்பட்டார். தற்போது இதனைத் தொடர்ந்து மற்றொரு கடத்தல் முயற்சி அரங்கேறியுள்ளது.
உலக அளவில் மிகவும் ஆபத்து நிறைந்த போதைப்பொருளாக கொகைன் கருதப்படுகிறது. பொதுவாக இது தென் அமெரிக்க நாடுகளான கொலம்பியா, பிரேசில், வெனிசுலா ஆகிய நாடுகளில் பயிரிடப்பட்டு போதை பவுடராக தயாரிக்கப்படுகிறது. அமெரிக்காவின் உலக போதைப்பொருள் ஆய்வறிக்கையின்படி, கடந்த 2021ம் ஆண்டு மட்டும் சுமார் 21 மில்லியன் மக்கள் கொகைனை பயன்படுத்துகின்றனர். அதேபோல, இது வட அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டாலும் சட்டத்திற்கு புறம்பாக பல்வேறு நாடுகளுக்கு கடத்தப்படுகிறது.
இந்நிலையில், தற்போது எத்தியோப்பியாவிலிருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட சுமார் ரூ.100 கோடி மதிப்பிலான கொகைன் விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதை கடத்த வந்த நபரையும் சுங்க இலாக அதிகாரிகள் கைது செய்துள்ளனர். எத்தியோப்பியாவிலிருந்து பெருமளவு போதை பொருட்கள் கடத்தி வரப்படுவதாக கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து, விமான பயணிகளை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, எத்தியோப்பியாவிலிருந்து சென்னை வந்த இக்பால் பாஷா என்பரை சந்தேகத்தின் அடிப்படையில் விசாரித்தனர். அவரது உடைமைகளை பரிசோதித்து பார்த்ததில், சுமார் ரூ.100 கோடி மதிப்பிலான 9.590கி.கி கொகைன் போதைபொருட்கள் மறைத்து வைத்து கடத்தி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். அவரிடம், யாருக்காக கொகைன் கடத்தப்பட்டது? இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார்? சர்வதேச கடத்தல் கும்பலுக்கும் இந்த கடத்தலுக்கும் தொடர்பு இருக்கிறதா? என விசாரித்து வருகின்றனர்.
மைக்ரோசாப்ட், மெக் டொனால்ட், கெல்லாக்ஸ் போன்றவற்றின் வருட வருமானத்தை காட்டிலும், அதிக வருமானம் கொகைன் பயன்பாட்டின் மூலம் வருகிறது. இது உலகளவில் விற்கப்படும் கொகைனை கொண்டு அறியப்படும் தகவலாகும். கொகைன் பயன்படுத்துவது, ஒரு மணிநேரத்திற்குள் 2,400% மாரடைப்பு ஏற்பட காரணியாக அமைகிறது என மருத்துவர்கள் கூறுகிறார்கள். மேலும், ஆரம்பக் காலத்தில் கொகைனை மருந்தாக பயனடுத்தி வந்த முறையும் இருந்தது. பிறகு இதன் தாக்கத்தை அறிந்து தடை செய்தனர்.
-
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
தஞ்சை அருகே ஷாக்.. கணவர் - சொந்த அக்காவுக்கு நள்ளிரவில் நேர்ந்த கொடூரம்.. சிக்கிய மனைவி அமுதா -
திருச்சியில் கார் ஓட்டுநரால் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. மது கொடுத்து பாலியல் தொல்லை! -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications