என்னணே இப்படி ஆயிருச்சு! முட்டை ஊர்க்காரரை சீண்டும் ‘சவுத்’! உசுப்பேற்றிய ர.ர.கள்! கோபத்தில் கொங்கு?
சென்னை : அதிமுகவில் இடைக்கால பொதுச் செயலாளராக பொறுப்பேற்றுள்ள எடப்பாடி பழனிச்சாமி ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியிலிருந்து நீக்கியதாக அறிவித்த நிலையில், அவர் சார்ந்த முக்குலத்தோர் சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க நினைத்து அதிகளவில் முக்கிய பதவிகளை அளித்து வரும் நிலையில் முட்டைக்கு பேர் போன மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஒருவரும், சில கொங்கு மண்டல நிர்வாகிகளும் கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் சூடு பிடித்த நிலையில் கட்சி மாவட்ட செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், தலைமைக்கழக நிர்வாகிகள் என 99 சதவீத நிர்வாகிகளின் ஆதரவை பெற்ற எடப்பாடி பழனிச்சாமி கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
பதவி ஏற்ற வேகத்திலேயே அதே மேடையில் கட்சியில் தனக்கு எதிராக செயல்பட்ட முக்கிய ஆளுமையான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியிலிருந்து நீக்கும் தீர்மானத்தையும் நிறைவேற்றிக் காட்டினார்.

நத்தம் விஸ்வநாதன்
கடந்த காலங்களில் ஓ.பன்னீர் செல்வத்தின் வலது இடது கரங்கள் போல செயல்பட்ட கே.பி.முனுசாமி மற்றும் நத்தம் விஸ்வநாதன் ஆகியோரே இந்த தீர்மானத்தை முன்மொழிந்து பேசியது கவனிக்கத்தக்கது. இந்த நிலையில் தான் பொருளாளர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் பதவியில் தொடர்வதாகவும் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியிலிருந்து நீக்கியதாக ஓ பன்னீர்செல்வம் அதிரடியாக அறிவித்தார். இப்படி நாளுக்கு நாள் அறிக்கை வாயிலாக எடப்பாடி பழனிச்சாமி தரப்பும் ஓபிஎஸ் தரப்பும் தங்களுக்கு எதிராக செயல்பட்டு வருபவர்களை கட்சியில் இருந்து நீக்கி வரும் நிலையில் ஒருபுறம் புதிய புதிய நியமனங்கள் நாளுக்கு நாள் அதிமுகவில் அரங்கேறி வருகிறது.

எடப்பாடி பழனிச்சாமி
முதன்முதலாக அதிமுகவின் பொதுச் செயலாளருக்கு அடுத்தபடியாக அதிகாரமிக்க பதவியான பொருளாளர் பதவியை திண்டுக்கல் சீனிவாசனுக்கு வழங்கினார் எடப்பாடி பழனிச்சாமி. முன்னதாக பொருளாளர் பதவி எடப்பாடி பழனிச்சாமி தீவிர ஆதரவாளர்களான ஜெயக்குமார், சிவி சண்முகம், அல்லது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த பொன்னையின் செங்கோட்டையன் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகளுக்கு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பொருளாளராக ஓபிஎஸ் நீக்கப்பட்ட நிலையில் அவர் சார்ந்த முக்குலத்தோர் சமூகம் தென் மாவட்டங்களில் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக பெரிய அளவில் போராட்டங்களையும் எதிர்ப்பையும் பதிவு செய்தது. இதன் காரணமாக அந்த சமுதாயத்தைச் சார்ந்த ஒருவருக்கே வழங்கலாம் என்ற அடிப்படையில் திண்டுக்கல் சீனிவாசன் பொருளாளர் வாய்ப்பை பெற்றார்.

முக்குலத்தோர் சமூகம்
அடுத்ததாக முக்குலத்தோர் சமூகத்தை மேலும் தன் பக்கம் கவரும் வகையில் அந்த சமூகத்தைச் சார்ந்தவர்களுக்கு அதிக அளவில் பதவிகள் வழங்கப்பட்டது. குறிப்பாக துணை பொதுச்செயலாளர் பதவி நத்தம் விஸ்வநாதன், கேபி.முனுசாமி ஆகியோருக்கு வழங்கப்பட்டது. தலைமை நிலைய செயலாளர் பதவி எடப்பாடி பழனிச்சாமி தீவிர ஆதரவாளரான கோவையைச் சேர்ந்த எஸ்.பி.வேலுமணிக்கு வழங்கப்பட்ட நிலையில் அடுத்ததாக எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவி யாருக்கு வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.

மூத்த நிர்வாகி அதிர்ச்சி
கடந்த முறை தலைமை நிலைய செயலாளர், துணை பொதுச்செயலாளர் பதவி தமிழகத்தில் முட்டைக்குப் பெயர் போன ஒரு மாவட்டத்தைச் சேர்ந்த மூத்த நிர்வாகி ஒருவருக்கு வழங்கப்படும் என அடித்து கூறினர் சில ரத்தத்தின் ரத்தங்கள். ஆனால் அந்தப் பட்டியலில் அவர் பெயர் இடம் பெறவில்லை. அடுத்ததாக எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவி யாருக்கு வழங்கப்படும் என மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியது. அந்த பட்டியலிலும் முட்டை மாவட்ட முன்னாள் அமைச்சர் பெயர் அடிபட்டது. இதேபோல திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு மூத்த முன்னாள் அமைச்சரின் பெயரும் அடிபட்டது. ஆனால் அவருக்கு ஏற்கனவே துணைப் பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டதால் அவருக்கு வாய்ப்பில்லை எனவும் சொல்லப்பட்டது.

ஆர்.பி.உதயகுமார்
இதே நேரத்தில் கடந்த சில மணி நேரங்களுக்கு முன்பு அதிமுகவின் எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவி குறித்தான அறிவிப்பினை எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டார். அதில் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் தென்மாவட்டத்தைச் சேர்ந்த குறிப்பாக முக்குலத்தோர் சமுதாயத்தைச் சேர்ந்த ஆர்.பி.உதயகுமாரின் பெயர் வெளிவந்தது . இதனால் தென் மாவட்ட நிர்வாகிகள் பலரே அதிர்ந்து போயினர் காரணம் துணை பொதுச்செயலாளர் பொருளாளர் உள்ளிட்ட முக்கிய பதவிகள் தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு குறிப்பாக முக்குலத்தோர் சமுதாயத்திற்கு வழங்கப்பட்டுள்ள நிலையில் தற்போது எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியும் தென் மாவட்டத்தைச் சேர்ந்த குறிப்பாக முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்த ஆர்பி உதயகுமாருக்கு வழங்கப்பட்டுள்ளது.

திடீர் அறிவிப்பால் அதிர்ச்சி
ஓபிஎஸ் மீது எடுத்த நடவடிக்கைகளால் அதிருப்தியில் இருக்கும் முக்குலத்தோர் சமுதாயத்தை திருப்திப்படுத்தும் வகையில் எடப்பாடி பழனிச்சாமியின் இந்த அதிரடி நகர்வு இருக்கும் என கூறப்பட்டாலும் இதனால் அவருக்கு மீண்டும் ஒரு புது சிக்கல் உருவாகியுள்ளது. கடந்த காலங்களில் எடப்பாடி பழனிச்சாமிக்கு பக்கபலமாக நின்று பல்வேறு சோதனையான காலகட்டங்களில் இருந்த மூத்த முன்னாள் அமைச்சரும் சில கொங்கு மண்டல நிர்வாகிகளும் இவரது திடீர் அறிவிப்பால் அதிர்ச்சியில் உள்ளனர் என கூறுகின்றனர்.

சமாதான தூது
பொருளாளர் பதவி துணை பொதுச்செயலாளர் பதவி தலைமை நிலைய செயலாளர் பதவி எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவி என தனக்கு ஏதாவது ஒரு பதவி கிடைக்கும் என எதிர்பார்த்து இருந்த அந்த மாவட்ட முன்னாள் அமைச்சர் தற்போது அதிர்ச்சியில் இருப்பதாக பலரும் அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, 'என்னணே இப்படி ஆயிடுச்சு' என கேட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதே நேரத்தில் உட்கட்சி விவகாரங்கள் நிறைவடைந்த பின்னர் அவருக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கும் பதவியை வழங்க எடப்பாடி தரப்பு முடிவு செய்திருப்பதாகவும் அதுவரை யார் சொல்வதையும் கேட்க வேண்டாம் என சமாதான தூது அனுப்பியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. தற்போது அதிமுகவில் மீண்டும் முக்குலத்தோர் சமுதாயத்தின் கைகள் ஓங்கி உள்ளதால் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சில நிர்வாகிகள் அதிருப்தி அடைந்ததாகவும் கூறப்படுகிறது.
-
சிதறும் கிறிஸ்தவ வாக்குகள்? தமிழகத்தில் இதுவரை நடக்காத சைலண்ட் மாற்றம்! கள நிலவரம் என்ன? -
உசிலம்பட்டி ஐயப்பன் சசிகலா கட்சியில் இணைந்தார்.. அதே தொகுதியில் வேட்பாளராக அறிவிப்பு! -
திமுக, அதிமுக, தவெக தேர்தல் வாக்குறுதிகள்.. தமிழ்நாட்டின் வருமானம் என்ன.. நிறைவேற்ற முடியுமா? -
இது தமிழ்நாடு ப்ரோ.. பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி! கை கொடுக்காத ஷாவின் ’அறுபடை வீடு’ பாலிடிக்ஸ் -
யாரு? எங்க? பாஜகவில் பரபர பஞ்சாயத்து! அதிமுகவால் கடுப்பான டெல்லி! மொடக்குறிச்சியில் அண்ணாமலை போட்டி? -
ஆதவ் அர்ஜுனா மாமியாரிடம் ரூ.300 கோடி வாங்கிய எடப்பாடி.. பகீர் கிளப்பிய கேசி பழனிசாமி -
முடியவே முடியாது.. டெல்லியை எதிர்த்து நிற்கும் அண்ணாமலை! பாஜக பட்டியல் தாமதம்! இது தான் காரணம்! -
லீமா ரோஸ் எனும் விஷ விதை.. பாஜக கண்ணை காட்டுனா போதும்! அதிமுக அவர் கையில்.. குண்டை போட்ட அதிமுக மாஜி -
ஓஎஸ் மணியன் ஏமாற்றிவிட்டார்.. சீட் தராததால் அதிமுக சீர்காழி முன்னாள் எம்.எல்.ஏ கட்சி பதவி ராஜினாமா! -
அதிமுகவுக்கு ஆப்பு வைக்கப் போறாரு விஜய்! இப்பவே உஷாராவது நல்லது! அடித்துச் சொல்லும் ஜெ.வின் நிழல்! -
எடப்பாடி முதல்வராக கூடாது.. ஓ.எஸ்.மணியன் டார்கெட் அதுதான்.. அதிமுக நிர்வாகியின் பகீர் குற்றச்சாட்டு! -
அதிமுகவை நம்பி சாத்தூரில் களமிறங்கும் நயினார் நாகேந்திரன்.. கைகொடுக்குமா முக்குலத்தோர் வாக்குகள்?












Click it and Unblock the Notifications