Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாமகவுக்கு ஜாக்பாட்..அமைச்சராக போறாங்க செளமியா?! வாரணாசியில் கிடைத்த ஆசி..டெல்லிக்கு பறந்த அன்புமணி

Subscribe to Oneindia Tamil

சென்னை: மக்களவைத் தேர்தல் 2024 தற்போது நடைபெற்று வரும் நிலையில் தேர்தல் நிறைவடைந்ததும் தங்கள் அணி வெற்றி பெற்றால் ஆட்சி அமைக்க தேவையான நடவடிக்கைகளை பாஜகவும் காங்கிரசும் மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் மத்தியில் பாஜக ஆட்சி அமைத்தால் தமிழகத்தில் இருந்து பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸின் மனைவி சௌமியா அன்புமணி அமைச்சரவையில் இடம் பெற வாய்ப்பு இருப்பதாக கூறுகின்றனர் பாமகவினர்.

பதினெட்டாவது மக்களவைக்கான 543 உறுப்பினர்களை நேரடியாக தேர்ந்தெடுக்கும் லோக்சபா தேர்தல் ஆனது தற்போது நடைபெற்று வருகிறது. 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது நான்கு கட்ட தேர்தல்கள் நிறைவடைந்து இருக்கின்றன.

Sowmiya Anbumani wife of PMK leader Anbumani Ramadoss will be a Union minister

இன்னும் மூன்று மூன்று கட்ட தேர்தல்கள் நடைபெற இருக்கும் நிலையில் ஜூன் ஒன்றாம் தேதி இறுதிக்கட்ட வாக்குப்பதிவு ஜூன் நான்காம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெற இருக்கிறது. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் போது காலை 11 மணிக்கே முன்னணி நிலவரங்கள் தெரிய வந்துவிடும்.

பிரதமர் யார்?: இந்தியாவின் அடுத்த பிரதமர் யார் என்பதை மக்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கும் நிலையில் மூன்றாவது முறையாக பாஜக நிச்சயம் ஆட்சி அமைக்கும் என பாஜகவினர் நம்பிக்கையுடன் இருக்கின்றனர். 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிப்பதே தங்கள் இலக்கு என பிரதமர் நரேந்திர மோடியும், மத்திய அமைச்சர் அமித்ஷாவும் கூறி வருகின்றனர். அதே நேரத்தில் நாடு முழுவதும் பாஜக எதிர்ப்பு அலை வீசுகிறது காங்கிரஸ் வெற்றி முகத்தை நோக்கி பயணித்து வருகிறது.. இந்தியா கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என காங்கிரஸ் கட்சியினர் சூளுரைத்து வருகின்றனர்.

நரேந்திர மோடி: இந்த நிலையில் பாஜக வெற்றி பெற்றால் பிரதமர் நரேந்திர மோடி தான் மீண்டும் பிரதமராக வருவார் என அமித்ஷா அடித்து கூறி இருக்கிறார். 75 வயது என்ற உச்சவரம்பு தற்போது பாஜகவில் இருந்தாலும் பிரதமராக நரேந்திர மோடி தான் தொடர்வார் என பாஜகவினர் உறுதியாக கூறி வருகின்றனர். இந்த நிலையில் காங்கிரஸ் ஆக இருந்தாலும் பாஜகவாக இருந்தாலும் தேர்தல் முடிவடைந்ததும் ஆட்சி அமைக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக கூறப்படுகிறது. இந்த வேலைகள் அனைத்தும் திரை மறைவில் தான் நடைபெற்று வருகின்றன.

எதிர்பார்ப்பு: இந்த நிலையில் தமிழகத்திலிருந்து பாஜகவைப் பொறுத்தவரை ஏற்கனவே மத்திய அமைச்சராக எல்.முருகன் இருக்கிறார். அவர் நாடாளுமன்ற தேர்தலிலும் களமிறங்கி இருக்கிறார். பாஜக தலைவர் அண்ணாமலை, முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன், பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அனுபவம் வாய்ந்த தலைவர்கள் தற்போது தேர்தலில் களம் காண்கின்றனர். இதனால் தமிழகத்தில் இருந்து இவர்களில் ஒருவர் நிச்சயமாக மத்திய அமைச்சரவையில் இடம் பெறப்போவது உறுதி என்கின்றனர் பாஜகவினர். இந்த நிலையில் பாஜக கூட்டணியில் உள்ள முக்கிய கட்சியான பாமகவுக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

அன்புமணி ராமதாஸ்: ஏற்கனவே காங்கிரஸ் ஆட்சி காலத்தில் மத்திய அமைச்சராக இருந்த அன்புமணி ராமதாஸ் தற்போது மாநிலங்களவை உறுப்பினராக இருக்கிறார். அதிமுக கூட்டணியில் தான் பாமக இணையும் என கடைசி நேரம் வரை அதிமுகவினர் காத்திருந்த நிலையில் திடீரென அவர் பாஜக கூட்டணியில் இணைந்தார். மேலும் எதிர்பாராத விதமாக அவரது மனைவி சௌமியா அன்புமணியும் தேர்தல் அரசியலில் குதித்தார். இதற்கு முன்பாக பசுமைத்தாயகம் அமைப்பின் மூலமாக சுற்றுச்சூழல் விழிப்புணர்வு உள்ளிட்ட சமூக பிரச்சனைகளை களம் கண்டு வந்த சௌமியா முதன்முறையாக தேர்தல் களத்தில் இறங்கி இருக்கிறார்.

சௌமியா அன்புமணி: தேர்தலின் போது அவருக்கு ஆதரவாக அன்புமணி ராமதாஸ் மற்றும் சௌமியா அன்புமணியின் மகள்கள் களத்தில் இறங்கி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டனர் . மேலும் கூட்டணி கட்சித் தலைவர்களும் சௌமியா அன்புமணிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வந்தனர். தற்போது தர்மபுரி தொகுதியில் அவருக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக பாஜகவினரும் பாமகவினரும் நம்புகின்றனர் இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் போட்டியிடும் வாரணாசி தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்தார் பிரதமர் நரேந்திர மோடி.

வெற்றி நிச்சயம்: அப்போது கூட்டணி கட்சித் தலைவர்களும் அவருடன் சென்றிருந்தனர். தமிழகத்திலிருந்து ஜிகே வாசன் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரும் பிரதமர் நரேந்திர மோடி வேட்பு மனு தாக்கல் நிகழ்ச்சியில் பங்கெடுத்தனர். இந்த நிலையில் தான் பிரதமர் நரேந்திர மோடி உடனடியாக சந்திப்பு குறித்து பாமகவினர் தற்போது சில தகவல்களை நம்மிடம் தெரிவித்தனர். அந்த வகையில் தமிழகத்தில் பாஜக கூட்டணிக்கு ஒன்று முதல் நான்கு இடங்கள் வரை கிடைக்கும் எனவும் அதில் பாமகவுக்கு தர்மபுரியிடம் நிச்சயம் என தெரிவித்ததாக கூறப்படுகிறது.

தேர்தல் ஒப்பந்தம்: இந்த நிலையில் ஏற்கனவே செய்து கொண்ட தேர்தல் ஒப்பந்தத்தின்படி மீண்டும் அன்புமணி ராமதாஸ் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார். மக்களவை தொகுதியில் சௌமியா அன்புமணி வெற்றி பெற்றால் அவருக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என நம்புகின்றனர் பாமகவினர். அதற்கு பாஜக பச்சைக்கொடி காட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது. சுற்றுச்சூழல் துறை அல்லது சமூக நலன், மகளிர் நலன், இளைஞர் மேம்பாடு உள்ளிட்ட ஏற்கனவே சௌமியா அன்புமணிக்கு பரிட்சயமான துறைகள் ஒதுக்கப்படலாம் என கூறுகின்றனர்.

அமைச்சர் வாய்ப்பு: தமிழகத்தை பொறுத்தவரை பாஜக கூட்டணியில் பாமக, தமிழ் மாநில காங்கிரஸ், ஐஜேகே, தமமுக உள்ளிட்ட கட்சிகள் இருந்தாலும் அவற்றில் பெரியதாக பாமகவே இருக்கிறது. எனவே கூட்டணி பேச்சு வார்த்தையின் போதே பாமகவுக்கு மத்திய அமைச்சரவையில் இடம் ஒதுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்ததாகவும் அதன் காரணமாகத்தான் கடைசி நேரத்தில் தர்மபுரி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த அரசாங்கம் திரும்ப பெறப்பட்டு சௌமியா களமிறக்கப்பட்டதாக கூறுகின்றனர். எனவே தமிழகத்தில் இருந்து டெல்லிக்கு சௌமியா அன்புமணி அமைச்சராக செல்வது உறுதி என கூறி வருகின்றனர் பாட்டாளி மக்கள் கட்சியினர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+