சாவர்க்கர் வழியில் வந்தவங்களுக்கு நாங்கள் குறைச்சல் இல்லை.. ஆளுநர் ரவிக்கு அவையிலேயே அப்பாவு பதிலடி!
சென்னை: சாவர்க்கர் வழியில் வந்தவர்களுக்கு நாங்கள் குறைந்தவர்கள் இல்லை என்று சபாநாயகர் அப்பாவு ஆளுநர் ஆர். என் ரவிக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
இன்று சட்டசபை ஆளுநர் ரவி உரையுடன் தொடங்கியது. ஆளுநர் ரவி தனது உரையில் தொடக்கத்தில் திருக்குறளை வாசித்தார். அதன்பின் பட்ஜெட் கூட்ட தொடரின் அறிமுகத்தை வாசித்தார். அதன்பின் உரையை பாதியில் நிறைவு செய்தார். 2 நிமிடங்கள் மட்டுமே மொத்தமாக பட்ஜெட் கூட்டத்தில் ஆர். என் ரவி உரை நிகழ்த்தினார்.
சட்டப்பேரவை தொடங்கியதும் தேசிய கீதம் புறக்கணிக்கப்பட்டுள்ளது என்று ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றச்சாட்டு வைத்தார். சட்டசபை நிகழ்விற்கு முன் மற்றும் பின் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன். அதை ஏற்கவில்லை. உரையில் இருக்கும் சில கருத்துக்களுடன் முரண்படுகிறேன். அதனால் உரையை முடிக்கிறேன் என்று கூறி 2 நிமிடத்தில் உரையை நிறைவு செய்தார்.
அதாவது சட்டசபை நிகழ்விற்கு முன் மற்றும் பின் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன். அதை ஏற்கவில்லை. உரையில் இருக்கும் சில கருத்துக்களுடன் முரண்படுகிறேன். அதனால் உரையை முடிக்கிறேன் என்று கூறி 2 நிமிடத்தில் உரையை நிறைவு செய்தார்.

தமிழ்நாடு அரசின் நீண்ட கால மரபை ஆளுநர் ஆர். என் ரவி மாற்றும்படி கோரிக்கை வைத்துள்ளார். அதை அரசு ஏற்றுக்கொள்ளவில்லை என்று தகவல்கள் வருகின்றன. இதுவே இன்று சட்டசபையில் இந்த களேபரங்கள் நடக்க காரணம் ஆகும்.
அப்பாவு பதிலடி: தேசிய கீதத்தை இசைக்கவில்லை என்ற ஆளுநர் ரவி குற்றச்சாட்டுக்கு சபாநாயகர் அப்பாவு மறுப்பு வைத்துள்ளார். அதில், ஆளுநர் குறைவாக வாசித்ததை குறையாக சொல்லவில்லை, உங்கள் மனதில் உள்ளதை சொன்னீர்கள். எங்கள் மனதில் உள்ளதை நாங்களும் சொல்கிறோம்.
இந்த அவையில் அவரவர் தங்களுக்கு விருப்பமானதை, மனதில் தோன்றியதை எல்லாம் பேச முடியாது. 1 பைசாவையும் மத்திய அரசு தரவில்லை. சாவர்க்கர, கோட்ஸே வழியில் வந்தவர்களுக்கு நாங்கள் குறைந்தவர்கள் இல்லை. இவ்வளவு பெரிய வெள்ளம், புயல் ஏற்பட்டிருக்கிறது ஒரு பைசா கூட தரவில்லை, பல லட்சம் கோடி ரூபாய் PM CARE FUND-ல் உள்ளது. இந்திய மக்களால் கணக்கிடப்படாத, கணக்கு கேட்க முடியாத பணத்தில் இருந்தாவது ₹50,000 கோடி ரூபாயை ஆளுநர் வாங்கி தந்தால் நன்றாக இருக்கும்.
ஆளுநர் ரவியிடம் முழு உரையும் முன்பே கொடுக்கப்பட்டது. அவரின் ஒப்புதல் பெற்றுத்தான் உரை அவைக்கு கொண்டு வரப்பட்டது. ஆனால் அதை அவர் முழுமையாக படிக்கவில்லை. இங்கே ஆளுநரை மாண்புடன் நடத்த வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.
ஆளுநரை மாண்புடன் நடத்த வேண்டும் என்பதில் முதல்வர் ஸ்டாலினும் உத்தரவிட்டு இருக்கிறார். இதையடுத்து ஆளுநர் உரையை நான் வாசித்தேன். சட்டசபையில் தேசிய கீதம் ஆளுநர் உரைக்கு பின் பாடப்படும் என்பதே மரபு. அதை மாற்றும்படி ஆளுநர் ரவி கூறினார். அதை ஏற்றுக்கொள்ள முடியாது, என்று சபாநாயகர் அப்பாவு ஆளுநர் ஆர். என் ரவிக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
அப்பாவு வாசித்தார்; இதையடுத்து, சட்டப்பேரவையில் ஆளுநர் ரவி வாசிக்க வேண்டிய உரையை சபாநாயகர் அப்பாவு வாசித்து வருகிறார். அதில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அயராத முயற்சியால் குறிப்பிடத்தக்க பொருளாதார வளர்ச்சியை தமிழ்நாடு கண்டுள்ளது. வலுவான பொருளாதாரம், சமூக நல்லிணக்கமுமே தமிழ்நாடு முதல் மாநிலமாக திகழ காரணம்
மின்னணு பொருட்கள் உற்பத்தியில் ஏற்பட்டுள்ள பெரும் முன்னேற்றத்தினால், 2021- 22ல் 4ம் இடத்தில் இருந்த தமிழ்நாடு 2022 -23ம் ஆண்டில் நாட்டிலேயே முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது., தமிழ்நாட்டின் பண வீக்கம் 5.97ஆக உள்ளது;
தமிழ்நாடு அரசு பணவீக்கத்தை கட்டுப்படுவதில் சிறப்பாக செயல்பட்டுள்ளது; கேலோ இந்தியா விளையாட்டு போட்டியில் இந்தியாவிலேயே தமிழ்நாடு அணி 2ம் இடம் பிடித்துள்ளது.
தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது. நிதி ஆயோக்கின் 2024 ஏற்றுமதி தயார் நிலை குறியீட்டின்படி, மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களை மிஞ்சி நாட்டிலேயே முதல் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது., என்று கூறியுள்ளார் .












Click it and Unblock the Notifications