சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தமிழக பள்ளிகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு.. நச் அறிவிப்பு.. அமைச்சர் அன்பில் மகேஷ் அதிரடி

தமிழக பள்ளி கணக்கு ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள் எடுக்கப்படுகின்றன

Google Oneindia Tamil News

சென்னை: முக்கிய அறிவிப்பு ஒன்றை பள்ளிக்கல்வி துறை வெளியிட்டுள்ளது.. இதையடுத்து தமிழகத்தின் பள்ளி ஆசிரியர்களுக்கு அதற்கான உத்தரவும் பறந்துள்ளது..!

திமுக அரசின் தமிழக பள்ளிக்கல்வி துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது.. மாணவர்களின் நலனில் அளவுக்கு அதிகமான அக்கறையும் எடுத்து வருகிறது..

சுகாதார கட்டமைப்புகளுக்காக தமிழகத்துக்கு 5 ஆண்டுகளில் ரூ3,000 கோடி நிதி- பிரதமர் மோடியின் முழு உரை! சுகாதார கட்டமைப்புகளுக்காக தமிழகத்துக்கு 5 ஆண்டுகளில் ரூ3,000 கோடி நிதி- பிரதமர் மோடியின் முழு உரை!

அதற்கான திட்டங்கள், அறிவிப்புகள், சலுகைகளை ஒவ்வொன்றாக வெளியிட்டு, அதை நடைமுறைப்படுத்தியும் வருகிறது.

 மகிழ் கணிதம்

மகிழ் கணிதம்

தொற்று தீவிரமாக பரவி வரும் சூழலிலும், முடிந்த அளவுக்கு மாணவர்களின் படிப்பு வீணாகிவிடாமல், அதேசமயம், அனைவரும் தேர்ச்சி பெறும் விதத்தில் புதுப்புது அதிரடிகளை கையில் எடுத்து வருகிறது.. அந்த வகையில் இப்போதும் ஒரு திட்டத்தை கொண்டுவந்துள்ளது.. அதற்கு பெயர் மகிழ் கணிதம்.. பொதுவாக, தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் திறன் மேம்பட அவ்வப்போது சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன...

ஆசிரியர்கள்

ஆசிரியர்கள்

ஆசிரியர்களுக்கு பயிற்சி தருவதன்மூலம் மாணவர்களுக்கு கற்பிக்கும் ஆற்றலை மேம்படுத்தவே இப்படியான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படுகின்றன. இந்த மகிழ் கணிதம் என்பதும் அப்படித்தான்... சில தினங்களுக்கு முன்பு, அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களிடம் நிறைய ஆய்வுகள் நடத்தப்பட்டன.. அதில் பலருக்கும் கடினமாக இருப்பது கணக்கு பாடம்தான் என்பது தெரியவந்தது..

 கணித பாடம்

கணித பாடம்

கணிதப் பாடங்களை படிப்பதிலும், தேர்வு எழுதி மதிப்பெண் பெறுவதிலும் ஆர்வமின்றி இருப்பதும் கண்டறியப்பட்டது.. இதற்கான காரணமும் ஆராயப்பட்டதில், கணித ஆசிரியர்கள் சரியான முறையில் நடத்தாமல் இருக்கிறார்கள் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது... அதனால் முதலில் டீச்சர்களுக்கு ட்ரெயினிங் தந்துவிட்டு, அதன்மூலம் மாணவர்களுக்கு சொல்லித்தருவதற்காகவே மகிழ் கணிதம் என்ற திட்டம் கொண்டு வரப்படுகிறது. கணித ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் அளிக்க திட்டமிடப்பட்டது..

வகுப்புகள்

வகுப்புகள்

இதற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைந்த கல்வி திட்ட இயக்குநர் சுதன் மேற்கொண்டு வருகிறார்... இவர் பிறப்பித்த உத்தரவில், வரும் 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் அரசு பள்ளிகளில் பணியாற்றும் கணித ஆசிரியர்களுக்கு "மகிழ் கணிதம்" என்ற பெயரில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன... இதன்மூலம் கணிதப் பாடத்தை பயமின்றி, மிகவும் எளிதாக, மகிழ்ச்சியாக மாணவர்கள் படிக்க முடியும்.

 பயிற்சி வகுப்பு

பயிற்சி வகுப்பு

பாடம் நடத்தும் சூழல் மகிழ்ச்சியாக மாறும். இதுதொடர்பான வழிகாட்டுதல்களை ஆசிரியர்களுக்கு துறை சார்ந்த வல்லுநர்கள் கற்று தர உள்ளனர். இதையொட்டி ஆன்லைன் பயிற்சி வகுப்புகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த வகுப்பில் அரசு பள்ளிகளை சேர்ந்த கணித ஆசிரியர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் வைரஸ் பரவல் வேகமாக அதிகரித்து வருகிறது.

 பொங்கல்

பொங்கல்

இதனைக் கருத்தில் கொண்டு ஒன்று முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அனைவரும் பள்ளிக்கு வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. வீட்டிலிருந்த படியே ஆன்லைன் வாயிலாக கல்வி கற்க உத்தரவிடப்பட்டுள்ளது. இப்போது பொங்கல் விடுமுறை விடப்பட்டிருப்பதால், இந்த விடுமுறை முடிந்தவுடன் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் 10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கு மட்டும் பொதுத்தேர்வை கருத்தில் கொண்டு நேரடி வகுப்புகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Special maths coaching for Tamilnadu Government Teachers
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X