Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மழைக்கால நோய்களில் இருந்து மக்களை காக்க சிறப்பு மருத்துவ முகாம் - மருந்து, மாத்திரை இலவசம்

வடகிழக்கு பருவமழை தொடங்கியதை ஒட்டி சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 200 வார்டுகளில் மக்களுக்கான சிறப்பு மருத்துவ முகாமை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 200 வார்டுகளில் மக்களுக்கான சிறப்பு மருத்துவ முகாமை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்துள்ளார். இந்த மருத்துவ முகாம்களில் காய்ச்சல், தலைவலி, சளி உள்ளிட்ட பரிசோதனைகளுடன் கொரோனா பரிசோதனையும் செய்யப்படுகிறது.

வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் காய்ச்சல் உள்ளிட்ட நோய் பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிறப்பு மருத்துவ முகாம் தொடங்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 200 வார்டுகளிலும் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது. மக்களுக்கான சிறப்பு மருத்துவ முகாமை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்துள்ளார். தேனாம்பேட்டையில் நடைபெற்று வரக்கூடிய மருத்துவ முகாமில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.

மருத்துவ முகாம் தொடக்கம்

மருத்துவ முகாம் தொடக்கம்

200 வார்டுகளில் தனியார் பங்களிப்புடன் தனியார் மருத்துவமனைகள் சார்பாக 200 முகாம்களும் சென்னை மாநகராட்சி மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் 200 முகாம்கள் என மொத்தம் 400 மருத்துவ முகாம்கள் சென்னை முழுவதும் அமைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் அனைவருக்கும் வரும்முன் காப்போம் திட்டத்தின் மூலமாக மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன.

சென்னையில் உயர் சிகிக்சை

சென்னையில் உயர் சிகிக்சை

மேலும் உயர் சிகிச்சைக்கு மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகின்ற நபர்கள் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் சென்னையில் உள்ள சிறப்பு மருத்துவ முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். இந்த மருத்துவ முகாம் மழைக்காலம் முடியும் வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நிவாரண பொருட்கள்

நிவாரண பொருட்கள்

இந்த மருத்துவ முகாம்களில் காய்ச்சல், தலைவலி, சளி உள்ளிட்ட பரிசோதனைகளுடன் கொரோனா பரிசோதனையும் செய்யப்படுகிறது. சித்த மருத்துவத்துறையின் சார்பாக கபசுர குடிநீர் வழங்கப்படுகிறது. சிறப்பு மருத்துவ முகாமை திறந்து வைத்த முதல்வர் பிறகு பொதுமக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.

Recommended Video

    5 நாட்களாக வழியாக மழை நீர்.. சைதாப்பேட்டை மக்கள் வேதனை
    சென்னையில் 500 முகாம்கள்

    சென்னையில் 500 முகாம்கள்

    சென்னை சைதாப்பேட்டை மாந்தோப்பு சாலையில் உள்ள சட்டமன்ற தொகுதிக்கான அலுவலகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நடமாடும் மருத்துவ முகாம்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், சுகாதாரத் துறை சார்பில் ஆங்காங்கே உள்ளாட்சி அமைப்புகளின் மூலம் 4 ஆயிரத்து 55 இடங்களில் மருத்துவ பருவ மழைக்கான சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகிறது. இந்த முகாம்களில் ஒரு லட்சத்து 53 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரே நாளில் 398 இடங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்ட நிலையில், இன்று சென்னையில் 500 மருத்துவ முகாம்கள் நடைபெறுகிறது.

    மழைக்கால நோய்கள்

    மழைக்கால நோய்கள்

    மழைக் காலங்களில் ஏற்படும் நோய் தொடர்பான காய்ச்சல், இருமல், வயிற்றுப் போக்கு உள்ளிட்ட நோய்களில் இருந்து பொதுமக்கள் தங்களை தற்காத்துக் கொள்ளவே இந்த முகாம்கள் நடத்தப்படுகிறது. சென்னையில் ஸ்டான்லி, கேஎம்சி போன்ற மருத்துவமனைகளில் உள்ள 100 மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மூலம் சென்னையில் வெள்ள பாதிப்பு பகுதிகளில் மருத்துவ சேவை வழங்கி வருகின்றனர். மருத்துவர்கள் ,செவிலியர்கள் ,மருத்துவம் சார்ந்த பணியாளர்கள் என ஒன்றரை லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர். 2000ற்கும் மேற்பட்ட மருத்துவர்கள், 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவ களப்பணியாளர்கள் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் சுகாதாரத் துறை சார்ந்த பணிகளை செய்து வருகின்றனர்.

    தமிழகம் முழுவதும் நடமாடும் முகாம்

    தமிழகம் முழுவதும் நடமாடும் முகாம்

    தமிழ்நாடு முழுவதும் 1,500 நடமாடும் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் இயங்கி வருகிறது. சென்னையில் மட்டும் 50க்கும் மேற்பட்ட வாகனங்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது" என்றார். தொடர்ந்து பேசிய அவர் , மருத்துவமனைகள், பள்ளிகளில் சூழ்ந்துள்ள மழைநீரை 24மணி நேரமும் வெளியேற்ற மாநகராட்சி ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+