Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"டேவிட் ஆசீர்வாதம்".. சட்டென மாறும் கிளைமேட்.. பாஜக சொன்ன 2 ஸ்பெஷல் தகவல்கள்.. குஷியில் திமுக..?

Subscribe to Oneindia Tamil

சென்னை: டேவிட்சன் தேவாசீர்வாதம் குறித்து முக்கிய குற்றச்சாட்டை தமிழக பாஜக கையில் எடுத்தாலும், 2 விஷயங்களில் திமுக தரப்பில் நிம்மதி பெருமூச்சு எழுந்துள்ளதாம்.. என்ன காரணம்?

திமுக ஆட்சிக்கு வந்தது முதல் பாஜக திமுக அரசை கடுமையாக சாடி வருகிறது.. அதிமுக செய்ய வேண்டிய போராட்டங்களை, ஆர்ப்பாட்டங்களை பாஜக செய்து வருகிறது.

ஏற்கனவே திமுகவின் ஊழல் புகார்களை மாநில தலைவர் அண்ணாமலை பொதுவெளியில் பகிரங்கப்படுத்தி வருகிறார்...

லிஸ்ட்கள்

லிஸ்ட்கள்

கடந்த மாதம் கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இனி மாதந்தோறும் திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியல் வெளியிடப்படும் என்றும் கூறியிருந்தார்.. இது திமுக தரப்புக்கு எரிச்சலை தந்து வரும் நிலையில், அவர் இந்த மாதம் எந்த அமைச்சர் பெயரை அவர் வெளியிட போகிறார் என்ற கலக்கம் அக்கட்சியில் சூழ்ந்து வருகிறது.. அதிமுகவை சிக்க வைக்க திமுக அரசு நடவடிக்கை எடுத்தால், திமுகவுக்கே செக் வைக்க பாஜக முனைப்பு காட்டி வருவதால், தமிழக அரசியலில் டென்ஷனும் தொற்றி கொண்டு வருகிறது!

 டேவிட்சன் தேவாசீர்வாதம்

டேவிட்சன் தேவாசீர்வாதம்

இதனிடையே, ஆளுநரை அடிக்கடி சந்தித்து பாஜக மாநில தலைவர்கள் புகார் கொடுத்த வண்ணம் உள்ளனர். அந்தவகையில், நேற்றுகூட, சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் அண்ணாமலை ஆளுநரை சந்தித்து, திமுக அரசு பற்றி புகார் தந்தார்.. அதில் முக்கியமாக குற்றம்சாட்டப்பட்டவர், உளவுத்துறை கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் என்பதையும் வெளிப்படையாகவே சொன்னார்.. போலி பாஸ்போர்ட் விவகாரம் தொடர்பாக, அவரை உடனடியாக பணி நீக்கம் செய்து, உரிய முறையில் விசாரிக்க வேண்டும் என்று தற்போது தமிழக பாஜக போர்க்கொடி உயர்த்தி வருகிறது.

வீரவசனம்

வீரவசனம்

தொடர்ந்து அண்ணாமலை பேசியபோது, திமுக அமைச்சர்கள் ஏதோ வண்டி ஓட்டு கொண்டு உள்ளனர்.. சொந்த ஊருக்கு கூட அமைச்சர்கள் செல்ல முடியாத நிலை உள்ளனர்.. தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆளுநருக்கு எதிராக மேடையில் வீர வசனம் பேசுகிறார்... ஆனால் பொன்முடியை சொந்த ஊர் மக்கள் ஊருக்குள் கூட விட மாட்டேன் என்கிறார்கள். இப்படி மோசமான நிலையில் தான் தமிழக ஆட்சி உள்ளது.. இப்படிப்பட்ட சூழலில், திமுக அரசின் அடுத்த ஊழல் பட்டியலை வெளியிட்டால் ஆட்சி கவிழ்ந்து விடும்.. அதனால், எனவே பொறுமையாக இருப்போம்.. 4 வருஷம் திமுக ஆட்சியில் இருக்க வேண்டும்.. அதனால், அதை பார்த்து முடிவு செய்வோம்" என்றார் அண்ணாமலை.

 2 விஷயங்கள்

2 விஷயங்கள்

அண்ணாமலையின் இந்த பேட்டியில் இருந்து, 2 விதமான விஷயங்கள் உற்றுநோக்கப்படுகிறது.. பொதுத்தேர்தலுடன் சேர்ந்து விரைவில் சட்டமன்ற தேர்தலும் வரலாம், இந்த ஆட்சி நிலைக்காது, நீடிக்காது, எல்லாரும் வீட்டுக்கு போக வேண்டியதுதான் என்று பாஜக கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து சொல்லி வருகிறது.. பாஜக சீனியர்கள் முதல், எடப்பாடி பழனிசாமி, விஜயபாஸ்கர் வரை மேடைகளில், விரைவில் சட்டமன்ற தேர்தல் நடக்கக்கூடும் என்றே சொல்லி வந்தனர்.. ஆனால், இன்று 4 வருஷம் திமுக ஆட்சி இருக்க வேண்டும், அதை பார்த்து முடிவு செய்வோம் என்று அண்ணாமலையே சொல்லி உள்ளது கவனிக்கத்தக்க விஷயமாக உள்ளது.

Recommended Video

    அடுத்த ஊழல் பட்டியலை வெளியே விட்டால்.. தமிழக அரசே கவிழ்ந்து விடும் - அண்ணாமலை
     15 தாமரைகள்

    15 தாமரைகள்

    அதேபோல, மாதமாதம் திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வெளியிடுவோம் என்று சொல்லி வந்தார்.. இப்போது, ஊழல் பட்டியலை வெளியிட்டால் ஆட்சி கலைந்துவிடும், அதனால் பொறுமையாக இருப்போம் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளதும், திமுகவினரின் கவனத்தை ஈர்த்து வருகிறது.. இந்த 2 விஷயங்களிலுமே அண்ணாமலையின் நிலைப்பாடு ஓரளவு தளர்ந்துள்ளதும், திமுகவில் நிம்மதியை ஏற்படுத்தி வருவதாகவே தெரிகிறது. ஆனால், விரைவில் எம்பி தேர்தல் வர உள்ள நிலையில், 15 தாமரைகளை தமிழகத்தில் இருந்து டெல்லிக்கு அனுப்பும் முயற்சியில் தமிழக பாஜக ஈடுபட்டு வரும் சூழலில், அரசியலில் எதுவும் மாறலாம் என்பதையும் எதிர்நோக்க வேண்டி உள்ளது.. பார்ப்போம்..!

    ஆளுநருக்கு கடிதம்

    ஆளுநருக்கு கடிதம்


    தமிழ்நாடு உளவுத்துறை ஏடிஜிபி-யாக உள்ள டேவிட்சன், கடந்த 2018-ல் மதுரை கமிஷனராக இருந்தபோதே, காவல்துறை அதிகாரிகள் உதவியுடன் 200-க்கும் மேற்பட்ட போலி பாஸ்போர்ட்டுகள் வழங்கப்பட்டுள்ளன என்று பாஜக தலைவர் அண்ணாமலை ஏற்கனவே குற்றம் சாட்டியிருந்தார்.. சில நாட்களுக்கு முன்புகூட, இந்த பிரச்சனை தொடர்பாக ஆளுநர் ரவிக்கும் கடிதம் எழுதியிருந்த நிலையில், இப்போது நேரயாகவே ஆளுநரை சந்தித்து புகார் தந்திருப்பது கவனிக்கத்தக்கது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+