எல்லை தாண்டி மீன் பிடித்ததாக மேலும் 32 மீனவர்கள் கைது! இலங்கை கடற்படையினர் மீண்டும் அட்டூழியம்
சென்னை: பாம்பன் பகுதியிலிருந்து 4 நாட்டு படகுகளில் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க சென்ற நிலையில், எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 32 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்திருக்கிறது.
கடந்த மாதம் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 13 மீனவர்கள் வங்கக்கடலில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, காங்கேசன்துறை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. புதுக்கோட்டை மீனவர்கள் இந்திய கடல் எல்லைக்குள்தான் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர் என்றாலும் அவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்திருந்தனர்.

ஜூலை மாதத்தில் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது இது இரண்டாவது முறையாகும். கடந்த ஒன்றாம் தேதி தனுஷ்கோடி மீனவர்கள் 25 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது. அதனால் ஏற்பட்ட அதிர்ச்சி விலகும் முன்பே மேலும் 13 மீனவர்களை ஒரே மாதத்தில் கைது செய்தது.
மீன்பிடித்தடைக் காலம் முடிந்து தமிழக மீனவர்கள் மீண்டும் மீன் பிடிக்கச் சென்று இன்னும் ஒரு மாதம் கூட நிறைவடையாத நிலையில், இதுவரை 74 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் பெரும்பான்மையினர் இன்னும் விடுதலை செய்யப்படவில்லை. அதுமட்டுமின்றி, தமிழக மீனவர்களுக்கு சொந்தமான 169 விசைபடகுகள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதால், அவற்றை நம்பியுள்ள மீனவக் குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றன.
இப்படி இருக்கையில் தற்போது மேலும் 32 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாம்பன் பகுதியை சேர்ந்த மீனவர்கள் நாட்டு படகு மூலம் மீன்பிடிக்க சென்றிருக்கின்றனர். மன்னார் தென்கடல் பகுதியில் இவர்கள் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது அவர்களை, இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
ஏற்கெனவே மீனவர்கள் கைது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான துணை சொலிசிட்டர் ஜெனரல் ராஜேஷ் விவேகானந்தன், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் மீனவர்கள் மத்திய அரசின் நடவடிக்கையால் அவ்வப்போதைக்கு விடுவிக்கப்படுவதாகவும், மீனவர் பிரச்னைக்கு தீர்வு காண, இரு நாட்டு செயலாளர்கள் மட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்தியா - இலங்கை கூட்டு நடவடிக்கை குழு, விரைவில் கூட்டம் கூட்டி இதுசம்பந்தமாக விவாதிக்க உள்ளதாகவும் விளக்கமளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
மீன்பிடி துறைமுகங்கள் இனி சிஐஎஸ்எஃப் வசம்? மத்திய அரசின் முடிவுக்கு எஸ்டிபிஐ கடும் எதிர்ப்பு! -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல்












Click it and Unblock the Notifications