சு.வெங்கடேசன் Vs பாலபாரதி - சிபிஎம் மாநில செயலாளர் பதவி யாருக்கு? களைகட்டும் சமூக வலைதள விவாதங்கள்!
சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (சி.பி.எம், சிபிஎம்) மாநில செயலாளர் பதவிக்கு சு.வெங்கடேசன் எம்.பி. பொருத்தமானவர் என்றும் முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதிதான் சரியான தேர்வாக இருப்பார் என்றும் சமூக வலைதளங்களில் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
சி.பி.எம். கட்சியின் தமிழ் மாநில குழு செயலாளராக கே.பாலகிருஷ்ணன் இருந்து வருகிறார். சி.பி.எம். கட்சியின் 23-வது மாநில மாநாடு வரும் மார்ச் 30 முதல் ஏப்ரல் 1-ந் தேதி வரை மதுரையில் நடைபெற உள்ளது. இந்த மூன்று நாள் மாநாட்டில், சிபிஎம் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் பிரகாஷ் காரத், ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.

சிபிஎம் அடுத்த செயலாளர்?
இதற்கு முன்னதாக 23-வது மாவட்ட மாநாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் சி.பி.எம். கட்சியின் புதிய மாநில செயலாளர் யார் என்பது தொடர்பான விவாதங்கள் சமூக வலைதளங்களில் நடைபெற்று வருகின்றன.

விவாதம் தொடங்கியது
கடந்த சில தினங்களுக்கு முன்னதாக தோழர்கள் என்ற ஃபேஸ்புக் குழுமத்தில் கம்யூனிச பற்றுள்ள யாரோ ஒருவன் என்ற அடைமொழியுடன் ஒரு செய்தி பகிரப்பட்டது. அதில், இதுவரை மார்க்சிஸ்டு கட்சியில் இருந்த தலைவர்களை அந்த கட்சி உறுப்பினர்களுக்கே தெரியாது. அந்த அளவுக்கு மக்களை கவர்ந்த தலைவர்களாக இருந்தனர். அதாவது சங்கரையா, பாலகிருஷ்ணன் வரதராசன் போன்ற மாநில தலைவர்கள் படத்தை பார்த்தால் தமிழக மக்களுக்கு அடையாளம் தெரியாது. முதலில் மக்கள் மத்தியில் அறிமுகமான பிரபலமான ஒரு முகம் உங்கள் கட்சிக்கு தேவை.

வெங்கடேசன் எம்.பி.
அப்படி ஒரு பிரபலமான தலைவர் இருந்தால்தான் உங்கள் கட்சி கொள்கை மற்றும் உங்கள் நேர்மையான செயல்பாடுகள் மக்களுக்கு தெரியும். இப்பொழுது ஊடகங்களில் பரவலாக அறியப்படும் ஒரு தலைவராக மதுரை பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் இருக்கிறார். இவரை மாநில செயலாளர் ஆக்கினால் உங்கள் கட்சி வளருவதற்கு ஒரு வேளை வாய்ப்பு உள்ளது. முகமே தெரியாத தலைவர்களை செயலாளர் ஆக்கினால் உங்கள் கட்சி வளராது என பதிவிட்டிருந்தார். இதுதான் இப்போது விவாதத்தை கிளப்பி இருக்கிறது.

பாலபாரதிக்கு ஆதரவு
இதற்கு திண்டுக்கல்லை சேர்ந்த தமிழ் கணிணி வல்லுநர் முனைவர் துரைப்பாண்டி, நான் கீழ்வருமாறு பின்னூட்டம் இட்டேன். ஏன் தோழர் பாலபாரதிக்கு அப்பதவி தரக்கூடாது. பெண்ணுக்கான உரிமையும் சென்றடையும் அல்லவா? என கேள்வி எழுப்பி இருந்தார். முனைவர் துரைப்பாண்டியின் இந்த பதிவில் பாலபாரதி, எதாவது வம்பை இழுக்காமல் தூக்கம்வராதுபோல என்று மட்டும் பதிலளித்துள்ளார். மேலும் மூத்த பத்திரிகையாளரும் பிரண்ட்லைன் ஆசிரியருமான Vijayasankar Ramachandran "இதை நான் வழிமொழிகிறேன்" என குறிப்பிட்டுள்ளார். மதுரையில் நடைபெறும் சிபிஎம் மாநில மாநாட்டில் மாநில செயலாளர் பதவி மதுரைக்கா? திண்டுக்கல்லுக்கா? என்பது தெரிந்துவிடும்.
-
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
அஷ்டமத்து சனி ஓவர்! இனிதான் விஜய் ஆட்டம் ஆரம்பம்! ஆட்சியை இழக்கவும் தயங்க மாட்டார்! ஷெல்வி கணிப்பு -
பங்குச்சந்தை வீழ்ச்சி அடையப்போகிறது! தங்கம், வெள்ளி விலை பல மடங்கு உயரும்.. பிரபல எக்ஸ்பர்ட் -
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு












Click it and Unblock the Notifications