Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சுபகிருது தமிழ் வருட பலன்கள் 2022: கடக ராசியில் பிறந்தவர்களே கஷ்டங்கள் நீங்கும் காலம் வந்து விட்டது

சுபகிருது தமிழ் புத்தாண்டு பிறக்கப் போகிறது. நவகிரகங்களின் சஞ்சாரம் கூட்டணியால் தமிழ் புதுவருடத்தில் மிதுனம், கடக ராசிக்காரர்களுக்கு என்னமாதிரியான பலன்கள் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் புத்தாண்டு சுபகிருது புது வருடம் ஏப்ரல் 14ஆம் தேதி பிறக்க உள்ளது. தமிழ் புத்தாண்டு சுபகிருது வருடம் பிறக்கப்போகிறது. 60 தமிழ் வருடங்களில் சுபகிருது வருடம் 36வது ஆண்டாகும். புத்தாண்டில் நவ கிரகங்களின் சஞ்சாரம் இடப்பெயர்ச்சியால் கடக ராசியில் பிறந்தவர்களுக்கு என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும், பரிகாரம் என்ன செய்யலாம் என்று பார்க்கலாம்.

தமிழ் புத்தாண்டில் ஆண்டு கோள்களில் சுப கிரகமான குரு பகவான் மீன ராசியில் பயணம் செய்ய உள்ளார். சனிபகவான் மகரம், கும்பம் ராசியிலும் பயணம் செய்வார். ராகு மேஷ ராசியிலும் கேது துலாம் ராசியிலும் பயணம் செய்வார்கள். சனிபகவான் சித்திரை மாதம் 16ஆம் தேதி ஏப்ரல் 29ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று காலை 7.54 மணிக்கு அதிசாரமாக மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடப்பெயர்ச்சி ஆகிறார். ஆனி 28ஆம் தேதி ஜூலை 27ஆம் தேதியன்று செவ்வாய்கிழமை வக்ர கதியில் மீண்டும் மகர ராசிக்கு திரும்புகிறார்.

திருக்கணித பஞ்சாங்கப்படி 2023ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் தேதி நேர்கதியில் சனிபகவான் கும்ப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். மாத கோள்களின் சஞ்சாரத்தை பார்த்தால் ஏப்ரல் 14ஆம் தேதி சூரியன் மேஷ ராசியில் தனது பயணத்தை தொடங்க, கூடவே, புதன், ராகு இணைந்திருக்கின்றனர். சிம்ம ராசியில் சந்திரன், செவ்வாய் சுக்கிரன் கும்ப ராசியிலும் பயணம் செய்கின்றனர். இந்த கிரகங்களின் பயணத்தால் கடக ராசியில் பிறந்தவர்களுக்கு பலன்கள் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

 கடக ராசி சுபகிருது வருட பலன்கள்

கடக ராசி சுபகிருது வருட பலன்கள்

கடக ராசியில் புனர்பூசம், பூசம், ஆயில்யம், நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு கிரகங்களின் சஞ்சாரத்தைப் பார்த்தால் ராகு பத்தாம் வீட்டிலும் கேது நான்காம் வீட்டிலும் பயணம் செய்வார்கள். இந்த பயணத்தால் வேலையில் பதவி உயர்வு கிடைக்கும். வீடு கட்ட முயற்சி செய்யலாம் தடைகள் இன்றி வெற்றிகரமாக வேலைகள் மளமளவென நடைபெறும். பத்தில் ராகு உத்யோக உயர்வை தருவார் என்பது நிச்சயம். இந்த ஆண்டு குரு 9ஆம் இடத்தில் இருப்பது அற்புதமான பலன்களை தரப்போகிறது.

குரு பார்வையால் லாபம்

குரு பார்வையால் லாபம்

குருவின் பார்வை உங்கள் ராசிக்கு கிடைப்பதால் நன்மைகள் அதிகரிக்கும் பாக்கிய ஸ்தானத்தில் உள்ள குரு நிறைய நன்மைகளை செய்யப்போகிறார். வேலையில் புதிய மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. பதவி உயர்வும் சம்பள உயர்வும் கிடைக்க வாய்ப்பு உள்ளது. சிலர் பழைய வாகனத்தை விற்றுவிட்டு புதிய வண்டி வாகனம் வாங்கலாம். வீடு கட்டவும் முயற்சி செய்யலாம் பாரம்பரியமிக்க பூர்வீக சொத்துக்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. ஏற்றுமதி இறக்குமதி வியாபாரம் செய்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். ரியல் எஸ்டேட் துறை கட்டிட தொழில் செய்பவர்களுக்கு நல்ல கணிசமான லாபம் கிடைக்கும். இரட்டிப்பு மகிழ்ச்சியில் சந்தோசமும் நிறைந்த வருடமாக உள்ளது.

கண்டச்சனியால் கவலை

கண்டச்சனியால் கவலை

சனிபகவான் ஏழாம் வீட்டில் பயணம் செய்கிறார். கண்டச்சனி காலம் என்பதால் வண்டி வாகனங்களில் செல்லும் போது கவனமும் நிதானமும் தேவை. பெண்கள் வீட்டில் உள்ள விலை உயர்ந்த பொருட்களையும் பணத்தையும் பத்திரமாக வைத்துக் கொள்வது நல்லது. ஆலய திருப்பணிகளில் இறங்கி வேலை செய்வதன் மூலம் பாதிப்புகள் குறைய வாய்ப்புள்ளது. புதிய வியாபாரத்தில் பொருளாதார வளர்ச்சி ஏற்படும் நிதி நெருக்கடிகள் நீங்கி நன்மைகள் அதிகரிக்கும்.

அஷ்டமத்து சனியால் கஷ்டம்

அஷ்டமத்து சனியால் கஷ்டம்

சனிபகவான் வரும் சித்திரை மாதம் அதிசாரமாக கும்ப ராசிக்கு இடம் பெயர்கிறார் எட்டாமிடம் அஷ்டமத்து சனி காலம் என்பதால் நீங்கள் கவனமாகவும் நிதானமாகவும் அடி எடுத்து வைப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. அகலக்கால் வைக்க வேண்டாம். அதிக கடன் பிரச்சினையில் சிக்க நேரிடும். கடன்களில் இருந்து தப்பிக்க செலவுகளைக் கட்டுப்படுத்துவது அவசியம். புதிய சொத்துக்கள் வாங்கும் போது கவனமாக தாய் பத்திரங்களை நன்றாக பார்த்து வாங்குவது நல்லது.

பரிகாரம் பலன்தரும்

பரிகாரம் பலன்தரும்

புதிய வியாபாரத்தில் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும் நிதி. நெருக்கடிகள் நீங்கும் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது பணத்தை பத்திரமாக வைத்திருப்பது அவசியம். அரசு சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனமாக செயல்படுவது நல்லது. தேய்பிறை அஷ்டமி திதிகளில் கால பைரவருக்கு பாலபிஷேகம் சந்தன அபிஷேகம் செய்து வணங்குவது நல்லது. சங்கடஹர சதுர்த்தி அன்று விநாயகருக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடலாம் பசுவிற்கு வாழைப்பழம் தானமாகக் கொடுப்பது நல்லது. கால பைரவரை வணங்க கவலைகளும் கஷ்டங்களும் நீங்கும்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+