சென்னையில் புறநகர் ரயில்கள் இயக்கம் - எந்தெந்த நேரத்தில் யார் யார் பயணம் செய்யலாம் தெரியுமா
கொரோனா கட்டுப்பாட்டு விதிகளுடன் இன்று முதல் சென்னை புறநகர் ரயிலில் அனைவரும் பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளதை இன்று காலை முதல் ரயில் சேவை தொடங்கியுள்ளது.
சென்னை: கொரோனா கட்டுப்பாட்டு விதிகளுடன் சென்னையில் புறநகர் ரயில் சேவை இயக்கப்படுகிறது. பெண்களுடன் பயணிக்கும் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் எப்போதும் பயணிக்கலாம் எனவும் ஆண்கள் பீக் ஹவர்ஸ் நேரங்கள் தவிர பிற நேரங்களில் மட்டுமே பயணிக்கலாம் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
கொரோனா பரவல் காரணமாக சென்னையில் புறநகர்களின் சேவை குறைக்கப்பட்டது. முன்களப்பணியாளர்கள், வேலைக்கு செல்பவர்கள் மட்டுமே பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
தற்போது சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்துக்கு அரசு அனுமதித்துள்ள நிலையில் மெட்ரோ ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கொரோனா கட்டுப்பாட்டு விதிகளுடன் இன்று முதல் சென்னை புறநகர் ரயிலில் பயணிக்கலாம் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

பெண்கள் எப்போது பயணிக்கலாம்
பெண்கள் , பெண்களுடன் பயணிக்கக்கூடிய 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் எப்போது வேண்டுமானாலும் பயணிக்கலாம் என்றும் , ஆண்கள் பீக்ஹவர்ஸ் என்று சொல்லப் படும் முக்கிய நேரத்தைத் தவிர்த்து பிற நேரங்களில் பயணிக்கலாம் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

குறிப்பிட்ட நேரத்தில் பயணிக்க அனுமதி
காலை 7 மணி முதல் 9.30 மணி வரையிலும மாலை 4.30 மணி முதல் 7 மணி வரையிலும் ஆண்கள் பயணிக்க அனுமதியில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை 9.30 மணி முதல் மாலை 4 மணி வரையும் , இரவு 7 மணி முதல் கடைசி நேரம் வரையிலும் ஆண்கள் பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்கள்
அதேபோல் ரயில்கள் இயக்கத்தில் எந்த மாற்றமும் இல்லை என அறிவித்துள்ள தெற்கு ரயில்வே மத்திய, மாநில அரசுப் பணியாளர்கள், நீதிமன்றப் பணியாளர்கள்,அத்தியாவசிய பணியாளர்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் ரயிலில் பயணிக்கலாம் என அனுமதி அளித்துள்ளது.

ரிட்டன் டிக்கெட்
தொலைதூரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்களை பொருத்தவரை ஒரு வழிப்பயணம் மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது. அவர்களுக்கு ரிட்டன் டிக்கெட் அளிக்கப்படுவதில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி?












Click it and Unblock the Notifications