சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

யாருங்க இவர்.. "அந்தி மல்லி பூத்திருக்கு ஐலேசா".. சும்மா வளைந்து நெளிந்து.. செம்ம அப்ளாஸ்.. வாவ்

அரசு பள்ளி ஆசிரியையின் நடனம் இணையத்தில் ஷேர் ஆகி கொண்டிருக்கிறது

Google Oneindia Tamil News

சென்னை: பள்ளிக் கல்வித் துறையால் நடத்தப்படும் "எண்ணும் எழுத்தும்" பயிற்சியில் ஒரு அரசுப் பள்ளி ஆசிரியரின் நடனம் காண்போரை திகைக்க வைத்து வருகிறது.. என்ன காரணம்?

கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 வருடங்களாகவே, பள்ளி மாணவர்கள் நிறைய சிக்கலை சந்தித்தனர்... ஆன்லைன் மூலமாகவே அதிக நாள்கள் கல்வி பயிலவேண்டிய சூழலும் பிள்ளைகளுக்கு ஏற்பட்டது.

அதனால், போதிய அளவில் எழுத படிக்க பயிற்சி கிடைக்காத மாணவர்கள் நலன் கருதி தமிழக அரசு புதிய திட்டம் ஒன்றை துவக்கியது. கொரோனா பெருந்தொற்றின் காரணமாக ஏற்பட்டுள்ள கற்றல் இடைவெளியை போக்க எண்ணும் எழுத்தும் என்ற மாபெரும் இயக்கம் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது..

 எண்ணும் + எழுத்தும்

எண்ணும் + எழுத்தும்

எண்ணும் எழுத்தும் நோக்கம் என்பது 2025 கல்வியாண்டிற்குள் 1 முதல் 3ம் வகுப்பு பயிலும் 8 வயதிற்குட்பட்ட அனைத்து மாணவர்களும் அடிப்படை கணிதத் திறனுடன், பிழையின்றி எழுதுவதையும், படிப்பதையும் உறுதிசெய்யும் விதமாக 'எண்ணும், எழுத்தும்' என்ற திட்டத்தை செயல்படுத்த பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டுள்ளது. இந்த திட்டம் நடப்பு கல்வியாண்டில் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில் 1, 2, 3 வகுப்புகளுக்கு நடைமுறைக்கு கொண்டு வரப்படவுள்ளது.

ஸ்போர்ட்ஸ்

ஸ்போர்ட்ஸ்

அதன்படி, 'ஒவ்வொரு நாளும் மகிழ்வுடன் கற்பித்தல்' என்ற கருத்தின் அடிப்படையிலான எண்ணும் எழுத்தும் வகுப்பறையானது, மாணவர்களிடம் தன்னம்பிக்கை மற்றும் ஆர்வத்தை ஊட்டும் வகையில் அமையும்.. கணித பாடம், பல்வேறு விளையாட்டு, பாடல் மற்றும் உடல் இயக்க செயல்பாடுகள் வாயிலாக கற்பிக்கப்படும்... இதற்காக அரசு மற்றும் அரசு உதவி பள்ளிகளில் 1 முதல் 3ம் வகுப்பு வரை பயிற்றுவிக்கும் ஆசிரியா்களுக்கு 'எண்ணும் எழுத்தும்' திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்பட்டு இதற்கான கையேடு, பாடப்புத்தகம் வடிவமைப்பு உள்ளிட்ட முன்னேற்பாடுகள் முடிக்கப்பட்டு பயிற்சி வகுப்புகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுவிட்டன.

 அரும்பு மொட்டு மலர்

அரும்பு மொட்டு மலர்

இந்த வகுப்புகளுக்கு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான எண்ணும் எழுத்தும் திட்ட பயிற்சி கடந்த 6-ந் தேதி முதல் தொடர்ந்து 5 நாட்கள் வட்டார அளவிலும் நடைபெற்று முடிந்தது. இந்த முகாமில் மாணவர்களின் கற்றல் திறனுக்கேற்ப, 'அரும்பு - மொட்டு - மலர்' என்ற பெயரில், கற்றல் வகைப்படுத்தி துணைக்கருவிகளுடன் திறன் மேம்படும் வகையில் ஆசிரியர்களுக்கு கருத்தாளர்கள் பொம்மலாட்டம், கோலாட்டம், நடித்தல், கதை கூறுதல் பேசுதல், விளையாடுதல், பாடுதல், வரைதல் ஆகிய செயல்பாடுகள் மூலம் பயிற்சி அளித்தனர்.

 Ist STD

Ist STD

அந்தவகையில், "எண்ணும் எழுத்தும்" பயிற்சியில் ஒரு அரசுப் பள்ளி ஆசிரியர் நடனமாடியது, அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.. முதலாம் வகுப்பு (1ST STD) மாணவர்களுக்கு பாடப்புத்தகத்தில் வரும் "அந்தி மல்லி பூத்திருக்கு ஐலேசா ஐலேசா" என்ற பாடலுக்கு நடனமாடினார்.. வளைந்து நெளிந்து இந்த டீச்சர் ஆடியது, அங்கிருந்த ஆசிரியைகளுக்கே புல்லரித்து விட்டது.. இந்த டீச்சருக்கு எப்படியும் கிட்டத்தட்ட 50 வயதிருக்கலாம்.. ஆனால், நளினமாகவும், மென்மையாகவும், சுறுசுறுப்பாகவும் இவர் ஆடியது, முறைப்படி டான்ஸ் கற்றவர் போலவே தெரிகிறது..

 சந்தோஷம்

சந்தோஷம்

இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது.. இதை பார்த்ததுமே பொதுமக்கள் வாழ்த்துக்களை பதிவிட ஆரம்பித்துவிட்டனர்.."இந்த மாதிரி கத்து கொடுத்தால் ஆர்வமாக குழந்தைகள் படிப்பார்கள்... உற்சாகமாய் சந்தோஷமாய் பாடத்தை கற்றுக் கொடுத்தால் சீக்கிரத்தில் மனதில் பதியும்.. ஆசிரியர் வகுப்புக்கு, மாணவர்கள் யாரும் லீவு போட மாட்டாங்க.. இவரிடம் பயிலும் பிள்ளைகள் நல்ல குழந்தைகளாக உருவெடுப்பார்கள்" என்றெல்லாம் பாராட்டி தள்ளி கொண்டிருக்கிறார்கள்.

 கூத்து + டென்ஷன்

கூத்து + டென்ஷன்

ஆனால், ஒருசில ட்விட்டர்வாசிகள் மட்டும், "என்ன கூத்து இதெல்லாம்? கூத்து நடத்தறீங்களா? இல்ல பாடம் நடத்தறீங்களா? உனக்கு ஏன் இந்த வேலை? வேற வேலை இல்லையா? பசங்களுக்கு போய் பாடம் நடத்து.. பாடம் நடத்துறதை தவிர எல்லாம் செய்வாங்க" என்று டென்ஷனாக பதிவிட்டுள்ளனர்.. ஆனாலும், பள்ளிக்கல்வித்துறையின் இந்த எண்ணும் எழுத்தும் பயிற்சி, மாணவர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.. அத்துடன், இந்த டீச்சரின் நடனமும் தமிழக மக்களின் பாராட்டை பெற்று வருகிறது.

English summary
Super performance by govt School teacher in the Ennum Ezhuthum Scheme Training class
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X