நயன்தாரா-விக்னேஷ் சிவன் வாடகை தாய் சர்ச்சை.. ஒரு வாரத்தில் அறிக்கை.. அடுத்து விசாரணை? அமைச்சர் பதில்
சென்னை: வாடகை தாய் முறையில் இரட்டை குழந்தைகள் பெற்றெடுத்ததாக கூறப்படும் விவகாரத்தில் தேவையென்றால் நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்படும் எனவும், விசாரணை குழு அறிக்கை ஒரு வாரத்தில் கிடைக்கும் எனவும் சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் கூறினார்.
தமிழ் திரையுலக நட்சத்திர தம்பதியாக நடிகை நயன்தாரா-இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகியோர் உள்ளனர். இவர்கள் 2 பேரும் பல ஆண்டுகள் காதலித்து சமீபத்தில் திருமணம் செய்து கொண்டனர்.
இவர்கள் 2 பேரும் கடந்த ஜூன் 9 ம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் தான் கடந்த 9ம் தேதி விக்னேஷ் சிவன் ட்விட்டரில் பதிவு ஒன்றை செய்தார். அதில் தங்களுக்கு குழந்தை பிறந்துள்ளதாக தெரிவித்து இருந்தார்.

பெற்றோர்களான நயன்தாரா-விக்னேஷ் சிவன்
விக்னேஷ் சிவன் வெளியிட்ட பதிவில்ல, ‛‛நயனும் நானும் அம்மா, அப்பா ஆகிவிட்டோம். இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளன. முன்னோர்களின் ஆசீர்வாதங்களும், பிரார்த்தனைகளும் ஒருங்கிணைந்து இரட்டை குழந்தைகளின் வடிவத்தில் எங்களுக்கு கிடைத்துள்ளன. உங்கள் அனைவரின் ஆசீர்வாதமும் எங்களுக்கு வேண்டும். உயிர் மற்றும் உலகம்'' என இயக்குனர் விக்னேஷ் சிவன் பதிவிட்டிருந்தார்.

சர்ச்சையான விவகாரம்
திருமணம் ஆகி 4 மாதங்களில் குழந்தைகள் பிறந்தது பெரும் விவாதமானது. மேலும் அவர்கள் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்று கொண்டிருக்கலாம் என்ற தகவல்கள் பரவி வருகிறது. நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதி வாடகைத் தாய் முறை மூலம் குழந்தை பெற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது. இதில் இவர்கள் விதிகளை மீறிவிட்டதாகவும் கூறப்படுகிறது. நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதி வாடகைத் தாய் முறை மூலம் குழந்தை பெற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது. இதில் இவர்கள் விதிகளை மீறிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இது பெரும் விவாதத்தை ஏற்படுத்தி சர்ச்சையாகி உள்ளது.

மா சுப்பிரமணியன் பேட்டி
வாடகைத்தாய் மூலம் நயன்தாரா - விக்னேஷ் சிவன் குழந்தை பெற்ற விவகாரத்தில் சுகாதாரத்துறை இணை இயக்குனர் தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் நயன்தாரா-விக்னேஷ் சிவன் விவகாரம் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டது. அப்போது அவர் கூறியதாவது:

நயன்தாரா-விக்னேஷ் சிவனிடம் விசாரணை
நயன்தாரா-விக்னேஷ் சிவன் விவகாரத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த விவகாரம் சட்டத்துக்கு உட்பட்டு நடந்ததா? இல்லையா? என்பது பற்றி ஆய்வு செய்யும் பணியினை இந்த குழு விசாரணை நடத்தி வருகிறது. தமிழக சுகாதாரத்துறை சார்பில் இணை இயக்குனர் தலைமையில் 2 மகப்பேரு மருத்துவர்கள் என 3 பேர் கொண்ட குழு விசாரணைக்காக அமைக்கப்பட்டு உள்ளது. அலுவலக உதவியாளர் ஒருவரும் குழுவில் உள்ளார். விசாரணை நடக்கிறது. தேவையென்றால் நயன்தாரா-விக்னேஷ் சிவனை நேரில் அழைத்து விசாரணை நடத்துவோம்

ஒரு வாரத்தில் அறிக்கை
இந்த விசாரணை பணி ஒருவாரம் நடக்கும். அதன்பிறகு சட்டம், விதிமீறல்கள் பற்றியும், விசாரணை நடத்தியவர்களின் விபரங்கள் பற்றியும் அறிக்கையாக அளிப்பார்கள். அதன்பிறகு உரிய விவரங்கள், தகவல்கள் வெளியிடப்படும். இந்த விசாரணை அறிக்கை வந்த பிறகே ஏதேனும் சட்டவிதிமீறல்கள் உள்ளதா? என்பது பற்றிய தகவல் தெரியவரும். நயன்தாரா-விக்னேஷ் சிவன் சிகிச்சை பெற்ற மருத்துவமனை விவகாரம் குறித்த விபரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளது'' என்றார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications