Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தந்தைக்கு ரத்தக் கசிவு.. அமெரிக்கா பறந்த சிம்பு.. நடிகர் டி ராஜேந்தரின் பயணம் எப்போது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தந்தை டி ராஜேந்தருக்கு சிகிச்சைக்கான ஏற்பாடுகளை செய்வதற்காக அவரது மகன் சிம்பு அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார்.

Recommended Video

    T Rajendar Speech | America போறேன்; Simbu மாதிரி யாரும் இல்ல- T Rajendar Health Update | #TamilNadu

    1980 களில் தனக்கென ஒரு பாணியை கொண்டு படங்களை இயக்கி நடித்தவர் டி ராஜேந்தர். எத்தனையோ நடிகர் நடிகைகளை இவர் அறிமுகப்படுத்தியுள்ளார். இவரது படங்கள் பெரும்பாலும் உணர்ச்சிபூர்வமாகவே இருக்கும்.

    இயக்குநர், நடிகர், பாடகர், இசையமைப்பாளர், அடுக்குமொழி வித்தகர், இசைக் கருவிகளை வாசிப்பவர் உள்ளிட்ட பன்முக திறமைகளை கொண்டவர். இவருக்கு கடந்த மாதம் 19ஆம் தேதி உடல்நலக் குறைவு ஏற்பட்டது.

    இதையடுத்து சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இதயத்தில் பிரச்சினை இருப்பதாகவும் வயிற்று வலி காரணமாகவும் அனுமதிக்கப்பட்டிருந்ததாக சொல்லப்பட்டது. இதையடுத்து சிம்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

    ரத்தக் கசிவு

    ரத்தக் கசிவு

    அந்த அறிக்கையில் எனது தந்தைக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்ட நிலையில் அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தோம். அங்கு பரிசோதனையில் அவருக்கு வயிற்றில் சிறிய ரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளதாகவும் அவருக்கு உயர் சிகிச்சை தர வேண்டும் எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்தியதால் அவர் உடல்நலன் கருதியும் உயர் சிகிச்சைக்காகவும் தற்போது வெளிநாட்டுக்கு அழைத்து செல்கிறோம்.

    முழு சுயநினைவு

    முழு சுயநினைவு

    அவர் முழு சுயநினைவுடன், நலமாக இருக்கிறார். கூடிய விரைவில் சிகிச்சை முடிந்து உங்கள் அனைவரையும் சந்திப்பார். உங்கள் பிரார்த்தனைகளுக்கும் அனைவரின் அன்புக்கும் நன்றி என சிம்பு தனது அறிக்கையில் தெரிவித்திருந்தார். இதையடுத்து டி ராஜேந்தர் உடல்நலம் பெற ரசிகர்கள் பிரார்த்தனை செய்தனர்.

    அமெரிக்கா

    அமெரிக்கா

    இந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட டி ராஜேந்தரை முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறியிருந்தார். இந்த நிலையில் உயர் சிகிச்சைக்காக அவரை அமெரிக்கா அழைத்து செல்வதற்கு தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலையில் அவரது மகன் சிம்பு முன்கூட்டியே அமெரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார்.

     டி ராஜேந்தருக்கு சிகிச்சை

    டி ராஜேந்தருக்கு சிகிச்சை

    அங்கு அவர் டி ராஜேந்தரின் சிகிச்சைக்கான ஏற்பாடுகளை கவனித்து வருகிறார். சென்னையில் இருந்து நாளை மறுதினம் டி ராஜேந்தர் அமெரிக்க புறப்பட்டு செல்கிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் அங்கு சென்றதும் உடனடியாக சிகிச்சை நடைபெறும் என தெரிகிறது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+