Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பழைய வரி முறை.. சென்னை தாம்பரம் சாலையில் சுட்ட கருப்பு தோசைகள்! திமுகவை தாக்கிய அதிமுக கவுன்சிலர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தாம்பரம் மாநகராட்சியில் நிலவும் குறைகள் இதுவரை களையப்படவில்லை, புகார் அளித்தும் பிரயோஜனம் இல்லை.. இந்த ஆட்சி அதிகாரம் முடிய இன்னும் இரண்டு அமாவாசைகள் தான் உள்ளன என்று அதிமுக கவுன்சிலர்கள் கொந்தளித்து கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. என்ன நடக்கிறது தாம்பரத்தில்?

தாம்பரம் மாநகராட்சியை பொறுத்தவரை, மழை வெள்ளம் பெரும் பிரச்சனையாக உள்ளது.. சாதாரண மழை வந்தாலும், இங்கு நீர் தேங்கிவிடும்.

Tambaram chennai Old Taxes

பெருங்களத்தூர், சிடிஓ காலனி, கன்னடபாளையம், டிடிகே நகர், சமத்துவ பெரியார் நகர், லட்சுமி நகர், முடிச்சூர் சாலை, செம்பாக்கம், சிட்லபாக்கம், பம்மல், அனகபுத்தூர், ராதா நகர், கீழ்கட்டளை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை காலத்தின்போது குடியிருப்புகள் மற்றும் சாலைகளில் வெள்ளம் சூழ்வதால், உடமைகளை இழந்து மக்கள் அவதிக்கு ஆளாவார்கள்.

தாம்பரம் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட 5 மண்டலங்களிலும் அரசு பல்வேறு தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், நிரந்தரமாக இப்பிரச்சனை தீரவில்லை.. வெள்ளத்தால் கடும் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகள் 24 கண்டறியப்பட்டுள்ள நிலையில், அந்த இடத்திலும் வெள்ள தடுப்பு பணிகள் இன்னும் நிறைவு பெறவில்லை என்ற குற்றச்சாட்டை எதிர்க்கட்சிகள் முன்வைத்து வருகின்றன..

மாடு நாய் பொம்மைகள், கொசு வலை

அதிலும் சமீப காலமாகவே தெருநாய்கள் கடிப்பதும், சாலைகளில் மாடுகள் அலைந்து திரிவதும் அதிகரித்தபடி உள்ளது.. மற்றொருபுறம் கொசு தொல்லையும் உள்ளது.. இதற்கும் மாநகராட்சி நடவடிக்கை எடுக்காததால், கடந்த அக்டோபர் மாதம் அதிமுக உறுப்பினர்கள் கறுப்புச்சட்டை அணிந்தபடி, கொசுவலையை போர்த்திக் கொண்டு, மாடு, நாய் பொம்மைகளுடன் மாமன்ற கூட்டத்தில் கலந்து கொண்டனர்..

இதை பார்த்ததுமே திமுக கவுன்சிலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அதிமுக உறுப்பினர்களுடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.. அப்போதும் அதிமுக கூட்டணி கவுன்சிலர்கள் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்து, மாநகராட்சி நுழைவு வாயிலில் உட்கார்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது நினைவிருக்கலாம்.

கடைசி மாமன்ற கூட்டம்

இந்நிலையில், தாம்பரம் மாநகராட்சியில் இந்த வருடத்துக்கான கடைசி மாமன்ற கூட்டம் தற்போது, மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன் தலைமையில் நடந்துள்ளது..

இதில் நகராட்சியின் 70 வார்டுகளில் இருந்து மாமன்ற உறுப்பினர்கள், மண்டல தலைவர்கள், பல அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதில், அதிமுக சங்கர் பேசும்போது, "அதிமுக வார்டுகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படாமல், மக்கள் வாழ்வில் அச்சுறுத்தல்கள் தொடர்கின்றன. நீண்ட காலமாகவே இவர்கள் பட்டாக்களுடன் வாழ்கின்றனர். மாநகராட்சி அதிகாரிகளை தொடர்பு கொண்டாலும் எந்த பதிலும் கிடைக்கவில்லை.

பழைய தாம்பரம் - பட்டா

அதிகாரிகள் அலட்சியமாக செயல்படுகிறார்கள். இதனால் மக்கள் மிகவும் சோகமான நிலைமையில் இருக்கிறார்கள்" எனக் குற்றச்சாட்டை எழுப்பினார். இதனால் கூட்டத்தில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. பின்னர் அதிமுக மாமன்ற உறுப்பினர்களுக்கு பேச வாய்ப்பு கிடைக்கவில்லை" என்று குற்றஞ்சாட்டி சங்கர் வெளியே வந்தார்.

பிறகு செய்தியாளர்களிடம் பேசும்போது, "சேலையூர், சிட்லபாக்கம், கடப்பேரி, பழைய தாம்பரம் பகுதிகளில் மக்கள் பல ஆண்டுகளாக பட்டாக்களுடன் வசித்து வருகின்றனர். கடந்த 3 வருடங்களாக வரி செலுத்த நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால் மாநகராட்சி அதிகாரிகள் இதற்காக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

பழைய வரிகள் - மெத்தனம்

சில வார்டுகளில் கட்டுப்பாடின்றி புதிய வரிகளை விதிப்பதும், பழைய வரிகளை சரி செய்வதும் மிகவும் மெத்தனமாக நடக்கிறது. இது மக்களுக்கு பல தொந்தரவையும், நெருக்கடியையும் உருவாக்கியுள்ளது.

சட்டசபையில் தாம்பரம் மாநகராட்சியின் பாதாள சாக்கடை திட்டத்திற்கு 750 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்தாலும், ஒதுக்கப்பட்ட பணத்தில் ஒரு வருடம் கழித்தும் எந்த முன்னேற்றமும் இல்லை. இந்த 3 வருஷத்தில் அதிமுக வார்டுகளில் அடிப்படை வசதிகள் மேம்படவில்லை. மக்கள் புகார்களை தொடர்ந்து வழங்கினாலும், அதிகாரிகள் கவனிக்கவில்லை... இதனால் மக்கள் பெரும் கோபத்தில் உள்ளனர்.

சாலையில் கருப்பு தோசை

நாங்கள் கொடுத்த புகார் கடிதத்திற்கு பதில் தர வேண்டும் என்று இன்றைய தினமும் வலியுறுத்தினோம்.. அப்போதும் எந்த பதிலும் கிடைக்கவில்லை.. அதிமுக ஆட்சியில் தாம்பரத்தில் தரமான சாலைகள் அமைக்கப்பட்டன.. ஆனால், இப்போது இவர்கள் கருப்பு தோசை சுடுவது போல் சாலைகளை போட்டிருக்கிறார்கள்.. ஒரே மழைக்கு சாலைகள் அடித்து சென்று விட்டன.. மக்களின் வரிப்பணம்தான் கோடிக்கணக்கில் வீணாகிறது.

மாநகராட்சியில் குறைபாடுகள் அதிகம். மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள். இன்னும் இரண்டு அமாவாசைகள் மாத்திரம் இப்போதைய ஆட்சியின் காலம் உள்ளது. இப்பகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றால், அவர் கண்டிப்பாக அமைச்சராகி பகுதிக்கான சேவைகளை மேம்படுத்துவார்" என்று நம்பிக்கை தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+