Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சர்ச்சையான ‘நட்சத்திர’ மகள்களின் திருமணம்! நிஜத்தில் கண்ணீர் விட்டு கதறிய நாயகர்கள்! யார் யார் ?

Subscribe to Oneindia Tamil

சென்னை : தமிழ் திரை உலகின் பிரபல நடிகர் ராஜ்கிரனின் வளர்ப்பு மகள் நடிகர் ஒருவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் அவர் தனது மகளே கிடையாது என காரசார அறிக்கையை வெளியிட்டார். தற்போது இந்த விவகாரத்தில் கடந்த ஆண்டுகளில் மகள்களின் காதல் திருமணத்தால் கண்ணீர் விட்டு கதறிய நாயகர்களின் பட்டியல் சமூக வலைதளங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது.

1980 காலகட்டங்களில் தமிழ் சினிமாவில் முக்கிய நாயகர்களில் ஒருவராக வலம் வந்த நடிகர் ராஜ்கிரண். நடிகர் மட்டுமல்லாது இயக்குனர், தயாரிப்பாளர் என பல முகங்களை கொண்ட இவர் நடிகர் வடிவேலுவை அறிமுகப்படுத்தியவர் ஆவார்.

நாயகனாக நடிப்பதை நிறுத்திக் கொண்ட அவர் தற்போது தந்தை தாத்தா உள்ளிட்ட குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். தற்போது இவர் நடிப்பில் வெளியான விருமன் திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக அதில் நடிகர் ராஜ்கிரனின் நடிப்பிற்கு பாராட்டுக்கள் குவிந்தது.

 நடிகர் ராஜ்கிரண்

நடிகர் ராஜ்கிரண்

நடிகர் ராஜ்கிரண் ஜோதி தம்பதியினருக்கு நைனார் முஹம்மது என்ற மகனும் ஜீனத் பிரியா என்ற மகளும் இருக்கின்றனர். இந்த நிலையில் பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நாதஸ்வரம் சீரியல் மற்றும் சில திரைப்படங்களில் துணை ரோல்களில் நடித்த முனீஸ் ராஜுடன் காதல் திருமணம் நடைபெற்றதாக இணையதளங்களில் செய்திகள் உலா வந்தன. முனீஸ் ராஜின் அண்ணன் சண்முகராஜா விருமாண்டி, அந்நியன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

முனீஸ் ராஜா

முனீஸ் ராஜா

இந்நிலையில் முனீஸ் ராஜாவும் நடிகர் ராஜ்கிரனின் மகள் ஜீனத் பிரியாவும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் திருமணம் செய்து கொண்டதாக முனீஸ் ராஜா அறிவித்தார். இவர்களது திருமணத்திற்கு நடிகர் ராஜ்கிரன் சம்மதம் தெரிவிக்கவில்லை எனவும் மதப் பிரச்சினை காரணமாக அவர்களது காதலை ஏற்றுக் கொள்ளவில்லை எனவும் சமூக வலைதளங்களில் விவாதங்கள் கிளம்பின. இந்த நிலையில் ஜீனத் பிரியா தனது மகளே இல்லை எனவும் அவர் வளர்ப்பு மகள் தான் என ராஜ்கிரன் நேற்று தனது முகநூல் கடுமையாக விமர்சித்து இருந்தார்.

மகளே இல்லை

மகளே இல்லை

தனக்கு நயினார் முஹம்மது என்ற ஒரே மகனைத் தவிர வேறு பிள்ளைகள் கிடையாது என்றும் ஒரு வளர்ப்பு மகள் இருந்தார் அவரை சீரியல நடிகர் வசப்படுத்தி திருமணம் செய்து கொண்டார். அவர் மகா மட்டரகமான புத்தியும் பணத்துக்காக எதையும் செய்யும் ஈனத்தனமும் கொண்டவர் என்பது எனக்கு தெரிய வந்தது என கடுமையாக விமர்சித்தார். மேலும் தன் பெயரை பயன்படுத்து யாரை அவர்கள் அணுகினாலும் தனக்கும் அதற்கும் தொடர்பில்லை எனவும் கூறியிருக்கிறார். இந்த விவகாரம் தற்போது சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் கடந்த சில ஆண்டுகளில் மகள்களின் காதல் திருமணங்களால் கண்ணீர் விட்டு கதறிய நாயகர்கள் யார் யார் என்பது குறித்து மேலும் ஒரு விவாதம் கிளம்பி இருக்கிறது.

நடிகர் இயக்குனர் சேரன்

நடிகர் இயக்குனர் சேரன்

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராகவும் நடிகருமான சேரன் இந்த விவகாரத்தில் ஊடகங்கள் முன் கண்ணீர் விட்டு கதறியதை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறந்துவிட முடியாது. சேரனின் மகள் தாமினியின் காதல் விவகாரம் கடந்த 2013 காலகட்டங்களில் பெரிய அளவில் பேசுபொருளாக இருந்தது. தனது காதலை இருப்பதாகவும் தனது காதலனை மிரட்டுவதாகவும் தந்தை மீது அவரது மகள் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் எனது மகளின் காதலை நான் முதலில் ஆதரித்தேன். ஆனால், ஒரு தகப்பன் என்ற முறையில் எனது மகளுக்கு கணவனாக வருபவரையும், எனக்கு மருமகனாக வருபவரையும் நல்லவரா, கெட்டவரா என்று பார்க்கக்கூடாதா? ஒரு தவறான பையனை எப்படி எனது மகளின் கணவனாக ஏற்றுக் கொள்ள முடியும் என சேரன் கூறினார். பின்னர் இவர்கள் இணைந்தது தனிக் கதை.

நடிகர் விஜயகுமார்

நடிகர் விஜயகுமார்


நீண்ட ஆண்டு காலமாக குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வரும் நடிகர் விஜயகுமார் தனது மகள் வனிதாவால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார். சிறுவயதிலேயே சினிமாவில் நாயகியான வனிதா தனது சர்ச்சையான பேச்சுக்கள் மற்றும் அடுத்தடுத்த திருமணங்கள் காரணமாக விஜயகுமார் குடும்பத்தை விட்டு விலகி இருந்தார். இந்த நிலையில் நடிகர் விஜயகுமாருக்கும் அவரது மகள் வனிதா விஜயகுமாருக்கும் மோதல் முற்றிய நிலையில் தனது வீட்டை காலி செய்ய மறுப்பதாக காவல் நிலையத்தில் மகள் மீது நடிகர் விஜயகுமார் புகார் அளித்தார். அப்போது மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட இந்த விவகாரம் மீண்டும் அடங்கிப் போனது. ஆனால் வனிதா குறித்த சர்ச்சுகள் தற்போது வரை வனிதா விஜயகுமார் என்று சமூக வலைதளங்களில் உலாவி வருகிறது.

நடிகர் ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த்

மகளுக்காக மன உளைச்சலுக்கு ஆளான நாயகர்கள் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நடிகர் ரஜினிகாந்த் இருக்கிறார். ஐஸ்வர்யா சௌந்தர்யா என தனது இரு மகள்களது திருமண வாழ்வு முறிந்து போன போது கடும் மன உளைச்சலில் இருந்தார். சௌந்தர்யாவின் முதல் மணம் முடிவுக்கு வந்து அவர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ள நிலையில் ஐஸ்வர்யா தனுஷ் தம்பதிகள் பிரிவின்போது மிக மன உளைச்சலில் இருந்தார் ரஜினிகாந்த் எனக் கூறப்படுகிறது. மேலும் இந்த விவகாரத்திற்கு பின் மேடையில் பேசியவர் பணம் இருந்தும் நிம்மதி இல்லை என தனது மகளின் திருமண வாழ்வை குறிப்பிட்டு பேசியதாகவே கூறுகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+