தமிழ் உமது முரசம்.. அண்ணா பேச்சை சுட்டிக்காட்டி பட்டமளிப்பு விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின்
சென்னை: ‛‛தமிழ் உமது முரசம், பண்பாடு நமது கவசம். அறிவு உமது படைக்கலம். அறநெறி உங்கள் வழித்துணை. உறுதியுடன் செல்வீர். உறுதியுடன் செல்வீர். ஊக்கமுடன் வெற்றி பெறுவீர்'' என பேரறிஞர் அண்ணாவின் பேச்சை சுட்டிக்காட்டி அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் முதல் அமைச்சர் ஸ்டாலின் பேசினார்.
Recommended Video
பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் சுற்றுப்பயணமாக தமிழகம் வந்தார். நேற்று செஸ் ஒலிம்பியாட் போட்டியை பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார்.
அதனை தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழகத்தின் 42வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றுள்ளார். இங்கு 69 மாணவர்களுக்கு பதக்கங்களை வழங்கி பாராட்டு தெரிவிக்க உள்ளார்..

முதல்வர் ஸ்டாலின் சிறப்புரை
பட்டமளிப்பு விழாவானது இன்று காலை 10 மணிக்கு துவங்கியது. பிரதமர் நரேந்திர மோடி, முதல் அமைச்சர் முக ஸ்டாலின், ஆளுநர் ஆர்என்ரவி, மத்திய அமைச்சர் முருகன், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உள்பட பலர் பங்கேற்றுள்ளனர். விழாவில் முதல்வர் ஸ்டாலின் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

பிரதமருக்கு நன்றி
உலகளவில் செஸ் ஒலிம்பியாட் போட்டியை பிரதமர் நரேந்தரி மோடி துவக்கி வைத்தார். இந்த போட்டி இந்தியாவில் நடப்பது முதல் முறை, ஆசியாவில் நடப்பது 3வது முறை என்ற பெருமை கிடைத்துள்ளது. உலக சதுரங்க அரங்கில் இந்தியாவில் மதிப்பு வானளவிய அளவில் முன்னேற்றம் கண்டுள்ளது. தமிழ்நாட்டுக்கும், இந்தியாவுக்கும் பெருமை சேர்க்கும் செஸ் ஒலிம்பியாட் போட்டியை துவக்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடிக்கு மீண்டும் ஒரு முறை நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

பெருமைவாய்ந்த தமிழ்நாடு
தமிழ்நாட்டின் அடுத்த பெருமையை சொல்ல வேண்டிய தருணம். மத்திய கல்வி அமைச்சகம் அண்மையில் வெளியிட்ட தேசிய உயர்கல்வி நிறுவனங்களுக்கான என்ஐஆர்எப் தரவரிசை பட்டியலில் இடம்பெற்றிருந்த நிறுவனங்களில் மிகப்பெருவாரியானது தமிழ்நாட்டை சேர்ந்தது என்பது அனைவருக்கும் தெரியும். இத்தகைய உயர்கல்வியில் மேன்மை பெற்றுள்ள தமிழ்நாட்டுக்கு வந்துள்ள பிரதமர் மோடியை வரவேற்கிறேன்.

அண்ணா பேச்சை மேற்கொள் காட்டிய முதல்வர்
கையில் பட்டத்துடனும் கண்களில் கனவுகளுடன் அமர்ந்திருக்க கூடிய மாணவ-மாணவிகளுக்கு மனமார்ந்த் வாழ்த்துகள். காஞ்சியில் பிறந்த வள்ளுவன் பேரறிஞர் அண்ணா பெயரில் அமைந்துள்ள பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா இது. மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் அண்ணா பேசியதை சுட்டிக்காட்டி சுருக்கமாக எடுத்து கூற விரும்புகிறேன். இது எனது கடமையாக கருதுகிறேன்.

ஸ்டாலின் கூறியது என்ன?
இந்த பட்டம் யாருக்காக. உங்களுக்காக.. உங்களுக்காக மட்டுமல்ல நாட்டுக்காக.. பட்டம் பெற்ற நீங்கள் தான் இந்த நாட்டின் திருவிளக்கு. நாட்டை செழிக்க செய்யக்கூடிய வல்லுனர்கள் நீங்கள் தான். தமிழ் உமது முரசம், பண்பாடு நமது கவசம். அறிவு உமது படைக்கலம். அறநெறி உங்கள் வழித்துணை. உறுதியுடன் செல்வீர். ஊக்கமுடன் வெற்றி பெறுவீர். ஏற்றம் மிகு வெற்றியினை எட்டுவீர்கள் என அண்ணா கூறியதை தான் உங்கள் அனைவருக்கும் எடுத்துக்காட்ட விரும்புகிறேன்'' என்றார்.
-
அட.. இதை கவனிச்சீங்களா? தமிழகத்திலேயே 2 குடும்பம் மட்டும்தான்! திமுகவில் களமிறங்கும் தந்தை - மகன்கள் -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
DMK: 3 அமைச்சர்களுக்கு சீட் இல்லை.. ஸ்டாலின் அறிவித்த திமுக வேட்பாளர் பட்டியலில் ஷாக்! -
பெண்கள், படித்தவர்களுக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்..டாக்டர் பட்டம் பெற்றவர்கள் மட்டும் இத்தனை பேரா? -
ஸ்டாலின் கவுன்டவுன் ஸ்டார்ட்.. முன் கூட்டியே தொடங்கும் பிரச்சாரம்.. ஏவப்போகும் அஸ்திரம் -
தொடரும் ஈரான் போர்! கச்சா எண்ணெய் – கேஸ் அபாயம் பற்றி மாநில முதலமைச்சர்களுடன் மோடி தீவிர ஆலோசனை -
Election Exclusive: வரம் கொடுத்த சாமி தலையில் கை வைத்த பிரேமலதா.. திமுக தொகுதிகளை கேட்டு அடம்! குட்டையைக் குழப்பு காங்.! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications