“தமிழ் அழிவதற்கு காரணம் சேர சோழ பாண்டிய மன்னர்கள்தான்” - திருமாவளவன் பேச்சு!
சென்னை: விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி, "சேர, சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்கள் எப்பேர்ப்பட்ட மன்னாதி மன்னர்களாக இருந்தாலும், தமிழ் அழிவதற்கும், கலாச்சாரம் அழிவதற்கும் வழிவகுத்தவர்கள். அவர்களின் காலத்தில் தான் இந்த நாடு குட்டிச்சுவர் ஆனது." எனப் பேசியுள்ளார்.
ஈழத்தமிழர்களுக்காகப் போராடி உயிர் நீத்த முத்துக்குமார் நினைவு நாள் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி, "எனக்கு எந்த அரசன் மீதும் மதிப்பு கிடையாது. எவனையும் பெரிய சக்தியாகப் பார்க்கவில்லை. அந்த மன்னர்கள் காலத்தில்தான் இந்த நாடு குட்டிச்சுவர் ஆனது. சமஸ்கிருத மயமானது, இந்துத்துவமயமானது.

கோயிலின் கருவறைக்குள்ளே இருந்த தமிழ் தூக்கி வெளியே வீசப்பட்டதெல்லாம் இந்த பாண்டிய மன்னர்கள், சோழ மன்னர்கள், சேர மன்னர்கள், பல்லவ மன்னர்கள் ஆண்ட காலத்தில்தான். வேள்வி நடத்தியவன் யாகம் நடத்தியவன் எல்லாம், தமிழ் பெயர்களை மாற்றி வடமொழிப் பெயர்களை தங்கள் பெயருக்குப் பின்னால் சூட்டிக்கொண்டார்கள். ராஜ ராஜன் என்பது தமிழ்ப் பெயரா? ராஜேந்திரன் என்பது தமிழ்ப் பெயரா?
எல்லாரும் வடமொழிப் பெயர்களைச் சூட்டிக் கொண்டவர்கள். வடமொழியிலேயே மயங்கிக் கிடந்தவர்கள். பார்ப்பனர்களின் வேள்வி, யாகங்களில் மயங்கிக் கிடந்தவர்கள். அவர்கள் எப்பேர்ப்பட்ட மன்னாதி மன்னர்களாக இருந்தாலும், என் தமிழ் அழிவதற்கும், கலாச்சாரம் அழிவதற்கும் வழிவகுத்தவர்கள் அவர்கள் என்பதை உணர்ந்தவன் நான். எனவே எனக்கு ஆண்ட பரம்பரை என்று சொல்வதில் எந்த பெருமையும் இல்லை. அதில் உடன்பாடும் இல்லை.
வெறும் மொழிப்பற்று எனக் கிடையாது. வெறும் இனப்பற்று, இன உணர்வு எனக்குத் தேவையில்லை என்று கருதக்கூடியவன் நான். அதுதான் பெரியாரின் பார்வை. சாதியை ஒழிக்காமல் இங்கே சமத்துவத்தை நிலைநாட்ட முடியாது என உறுதியாக நின்றவர் தந்தை பெரியார்" என்று பேசினார் திருமாவளவன்.
-
அக்கா எனும் அம்மா! பானுமதி இறப்பால் சுக்குநூறான திருமாவளவன்! கள்ளக்குறிச்சி வேட்பாளர் யார் தெரியுமா? -
காட்டுமன்னார்கோவிலுக்கு கிளம்பும் திருமாவளவன்.. டெல்லி துறப்பு முடிவின் பின்னணி இதுதானா? விசிக பலே -
விஜய் செல்வாக்கு + பதவி.. திருமாவளவன் மாநில அரசியலுக்கு திரும்புவதற்கு பின்னணியில் 2 காரணங்கள்! -
திமுகவுக்கு மெஜாரிட்டி கிடைக்காதுன்னு திருமாவே நினைக்கிறாரா? வருத்தப்பட்ட ஸ்டாலின்.. என்னாச்சு? -
அசுர பலம்.. சட்டசபையில் நான் இருக்கணும்! திருமா முடிவு.. சட்டமன்ற தேர்தலில் போட்டியிட ரியல் காரணம் -
2026 தேர்தலுக்கு பின்.. அரசியலே மாறும்.. புதிர் போட்ட திருமா.. மாநில அரசியலுக்கு திரும்புவது ஏன்? -
Thirumavalavan: சிதம்பரம் இடைத்தேர்தல் செலவை திருமாவளவன் ஏற்பாரா? சீமான் கேள்வி -
பாஜக சிம்ப்ளி வேஸ்ட்.. திருமாவளவன் பெஸ்ட்.. புயலை கிளப்பிய வால்பாறை அதிமுக வேட்பாளர் ஆடியோ -
திருமாவளவனின் புது கணக்கு.. விசிகவுக்கு பிரச்சனை! அங்கீகாரத்தை இழக்கும் கட்சி? என்ன நடக்குது? -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம்












Click it and Unblock the Notifications