கமல்ஹாசனின் ‘கணீர்’ குரல்.. செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் புல்லரிக்க வைத்த சம்பவம்.. பிரம்மிப்பு!
சென்னை : செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில், சுதந்திர போரில் தமிழர்களின் பங்கை பறைசாற்றும் ஒலி - ஒளி நிகழ்ச்சி நடிகர் கமல்ஹாசன் குரலில் உருவாக்கப்பட்டு அரங்கேற்றப்பட்டது.
Recommended Video
செஸ் ஒலிம்பியாட் தொடக்க நிகழ்வில், கமல்ஹாசன் குரலில் நடத்தப்பட்ட நிகழ்ச்சி பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், இன்றும் அதன் தொடர்ச்சியாக 'தமிழ் மண்' கண்கவர் நிகழ்ச்சி அரங்கேற்றப்பட்டது.
சுதந்திரப் போராட்ட வீரர்களின் வீரமும், தீரமும் கமல்ஹாசனின் குரலில் கேட்க மயிர்க்கூச்செறியச் செய்தது. வெளிநாட்டவர்களும் இந்த நிகழ்ச்சியை வியந்து பார்த்தனர்.

வியக்க வைத்த நிகழ்ச்சி
கடந்த ஜூலை 28ஆம் தேதி நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் தொடக்க நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் குரலில் தமிழர்களின் பல நூறு ஆண்டுகால வரலாற்றை பின்னணியாக கொண்ட ஒளி - ஒலி நிகழ்வு அனைவரையும் வியக்க வைத்தது. 1,200 ஆண்டுகளுக்கு முன் மயிலாடும்பாறையில் தமிழர் கலை, கலாசாரம் செழித்து இருந்ததற்கான சான்று தொடங்கி பல்வேறு பெருமைகளும் முப்பரிமாண படத்துடன் விளக்கப்பட்டது.

தமிழர்களின் பெருமை
அகழ்வாய்வு தொடங்கி தமிழகர்களின் நாட்டுபுற நடனம், ஜல்லிக்கட்டு, கல்லணை, திருக்குறள், மாமல்லபுரம் உள்ளிட்ட தமிழகம் கலை, இலக்கியம், வரலாறு, நீர் பாசனம், வீர விளையாட்டு போன்றவற்றை கண் முன்னே கொண்டு வரும் வகையில் ஒளிபரப்பானது ஆவணப்படம். அதோடு இணைந்த நிகழ்த்து கலை நிகழ்ச்சி அனைவரையும் வியக்க வைத்தது.

இன்றும் அரங்கேற்றப்பட்டது
செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் கமல்ஹாசன் குரலில் ஒலித்து பலரது கவனத்தை ஈர்த்த 'தமிழ் மண்' நிகழ்த்து கலையின் தொடர்ச்சி இன்றைய நிறைவு விழாவில் இடம்பெற்றது. விடுதலைப் போராட்ட வரலாற்றையும், சுதந்திரப் போராட்ட வீரர்களின் பெருமையையும் பறைசாற்றும் இந்த நிகழ்வு பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

பிரம்மிப்பு
கமல்ஹாசனின் கணீர் குரலில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் சொல்லப்பட்ட தமிழக சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாழக்கையும், வரலாறும், அரங்கில் கூடியிருந்த ஒட்டுமொத்த பார்வையாளர்களையும் சிலிர்க்கவும், பிரம்மிக்கவும் வைத்தது. இந்த நிகழ்வை கண்டு ரசித்த முதல்வர் ஸ்டாலின், இறுதியில் தலைக்கு மேலே கையை உயர்த்தி கைதட்டினார்.
-
பரந்தூர்-க்கு சொன்ன நோ.. சென்னை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! சீட்டுக்கட்டுப்போல் சரியும் மெகா திட்டங்கள்! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்!












Click it and Unblock the Notifications