தமிழகத்தில் ஒரேநாளில் 2,316 பேருக்கு கொரோனா பாதிப்பு.. பல மாதத்துக்கு பின் ஒருவர் பலி.. அதிர்ச்சி
சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 2,316 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு கொரோனாவால் ஒருவர் பலியாகி உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் மக்களுக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தற்போது தினசரி பாதிப்பு 2000யை கடந்துள்ளது.
இதனால் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முகக்கவசம் அணியாதவர்களிடம் ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

இன்றைய கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த விபரங்களை தமிழக சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி இன்றும் கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை கடந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் தமிழகத்தில் கெரோனாவால் 2,316 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை பாதிப்பு எவ்வளவு?
இதில் சென்னையில் மட்டும் 596 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு அடுத்தப்படியாக செங்கல்பட்டில் 354 பேர், கோவையில் 164 பேர், திருவள்ளூரில் 114 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மற்ற மாவட்டங்களில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 100க்கு கீழ் உள்ளது. இருப்பினும் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு பதிவாகி உள்ளது. இன்றைய பாதிப்போடு சேர்த்து தமிழகத்தில் மொத்த பாதிப்பு என்பது 35 லட்சத்து 17 ஆயிரத்து 777 ஆக அதிகரித்துள்ளது.

சிகிச்சை பெறுவோர் எவ்வளவு?
அதேநேரத்தில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா தொற்று குணமாகி 2,458 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதுவரை மொத்தம் 34 லட்சத்து 62 ஆயிரத்து 662 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். மேலும் தமிழகத்தில் தற்போது வரை 17,085 பேர் கொரோனா சிகிச்சையில் உள்ளனர். இதில் தனிமையில் இருப்போரின் எண்ணிக்கையும் அடங்கும்.

ஒருவர் பலி
இருப்பினும் இன்று கொரோனாவால் ஒருவர் பலியாகி உள்ளார். அதாவது விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் பலியாகி உள்ளார். இதன்மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை என்பது 38 ஆயிரத்து 30 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனாவால் பலி ஏற்படாத நிலையில் தான் இன்று ஒருவர் பலியாகி உள்ளார். இதனால் பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டியது அவசியாகும்.
-
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர்












Click it and Unblock the Notifications