ஜனவரி 13 வரை சட்டசபை கூட்டம்.. அலுவல் ஆய்வு கூட்டத்தில் முடிவு.. சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!
சென்னை: நடப்பாண்டுக்கான முதல் சட்டசபை கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ள நிலையில், ஜனவரி 13ம் தேதி நடத்த அலுவல் ஆய்வு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. நாளைய கூட்டத்தில் மறைந்த எம்எல்ஏ திருமகன் ஈவெரா மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, சட்டசபை நாள் முழுவதும் தள்ளிவைக்கப்பட உள்ளது. கூட்டத்தின் கடைசி நாளில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பாண்டில் தமிழ்நாடு சட்டசபையின் முதல் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. பொதுவாக சட்டசபை கூட்டத்தொடரின் முதல் நாள் ஆளுநர் உரையுடன் தொடங்கும். இன்று 2023ம் ஆண்டின் முதல் சட்டசபை கூட்டத் தொடர் என்பதால் தமிழ்நாட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றினார்.

ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றிய போது, சமூகநீதி, சுயமரியாதை, திராவிட மாடல், அண்ணா, பெரியார் உள்ளிட்ட வார்த்தைகளை வாசிக்காமல் முழுமையாக கடந்து சென்றார். வழக்கமாக சட்டசபையில் ஆளுநர் வாசிக்கும் உரைகள், ஆளுநர் படித்தாலும் அது தமிழ்நாடு அரசு தயாரித்து தரக் கூடிய உரைதான்.
இதை ஆளுநர்கள் அப்படியே வாசிப்பது மட்டுமே வழக்கமாக இருந்து வந்திருக்கிறது. ஆனால், இன்று தமிழ்நாடு அரசு தயாரித்து கொடுத்த உரையை ஆளுநர் ஆர். என் ரவி வாசிக்காமல் அவர் சில பாகங்களை தவிர்த்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையிலேயே குற்றம் சாட்டினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், தமிழ்நாடு அரசு தயாரித்து கொடுத்த உரையை ஆளுநர் ஆர்.என்.ரவி முழுமையாக படிக்கவில்லை. உரையில் சில வார்த்தைகளை படிக்காமல் தவிர்த்து விட்டுவிட்டார். இதனால் அவரின் உரையை அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று தீர்மானம் தாக்கல் செய்கிறேன். ஆளுநர் உரையை முழுமையாக படிக்காதது வருத்தம் அளிக்கிறது என்று பேசினார்.

இதையடுத்து ஆளுநர் படித்த உரை வாக்கெடுப்பு மூலம் அவைகுறிப்பில் இருந்து நீக்கப்பட்டது. மாறாக அரசு தயாரித்த மொத்த உரையும் அவை குறிப்பில் இடம்பெற்றது. இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் கண்டனம் தெரிவித்ததால், ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டசபையில் இருந்து பாதியிலேயே வெளியேறினார்.
இதன் பின்னர் சட்டசபைக் கூட்டத்தொடரை எவ்வளவு நாட்கள் நடத்தலாம் என்பது குறித்த அலுவல் ஆய்வு குழு கூட்டம் சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், ஜனவரி 13ம் தேதி வரை சட்டசபைக் கூட்டத்தொடரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. நாளைய சட்டசபை கூட்டத்தில் மறைந்த எம்எல்ஏ திருமகன் ஈவெரா மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, சட்டசபை நாள் முழுவதும் தள்ளிவைக்கப்பட உள்ளது. கூட்டத்தின் கடைசி நாளில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-
தமிழ்நாட்டின் முதல் சட்டமன்ற பெண் செயலாளராக சாந்தி நியமனம்.. யார் இவர்? இவருடைய பவர் என்ன? -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications