சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பாஜகவில்.. காயத்ரி ரகுராம் என்னென்ன அட்டகாசம் செய்தார் தெரியுமா.. பரபர லிஸ்ட் போட்ட கட்சி நிர்வாகி

Google Oneindia Tamil News

சென்னை: பாஜகவிலிருந்து 6 மாதகாலம் நீக்கப்பட்ட நடிகை காயத்ரி ரகுராமால் கட்சிக்கு ஏகப்பட்ட கெட்ட பெயர்கள் ஏற்பட்டதாக, தமிழ்நாடு பாஜக தொழிற்பிரிவு துணைத் தலைவர் செல்வகுமார் ஒரு பெரிய லிஸ்ட்டை போட்டு விமர்சனம் செய்திருக்கிறார்.

தமிழ்நாடு பாஜக ஓபிசி பிரிவு மாநில தலைவர் திருச்சி சூர்யா சிவா, பாஜக மாநில சிறுபான்மை பிரிவு தலைவர் டெய்சியை செல்போனில் தரக்குறைவாக விமர்சித்து கொலை மிரட்டல் விடுத்த ஆடியோ சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டது.

இந்த ஆடியோவை பகிர்ந்த பாஜகவை சேர்ந்த நடிகை காயத்ரி ரகுராம், "பெண்களை குறிவைத்து தவறாக பேசினால் நாக்கு வெட்டப்படும் என உறுதியளித்துள்ளார். இப்படிப்பட்ட சமயங்களில் சொந்த கட்சிப் பெண்களை ஏன் தாக்க வேண்டும்?

 புண்படுத்திட்டாங்க..பாஜக சூர்யா சிவா மீது போலீசில் புகார்! அண்ணாமலை மீதும் நடவடிக்கை எடுக்க கோரிக்கை புண்படுத்திட்டாங்க..பாஜக சூர்யா சிவா மீது போலீசில் புகார்! அண்ணாமலை மீதும் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

ஹைனாக்கள்

ஹைனாக்கள்

இந்த ஹைனாக்களுக்கு அழகு பார்க்க கட்சியில் மாநில பதவி கொடுத்தது மிகப்பெரிய தவறு. பொது இடத்தில் அழுக்குத் துணிகளை துவைக்கிறோம் என்று சொல்கிறார்கள் செ & கோ ட்ரோல்ஸ். ஆனால் சில மற்ற கட்சிகளில் இருந்து புதிதாக இணைந்தவர்களும், சில ஜல்ட்ரா ஆதரவாளர்களும் ஆபத்தானவர்கள் என்பதை உணரவில்லை. எல்லாவற்றையும் விட்டுவிட்டு நம்மை ட்ரோல் செய்கிறார்கள் வார் ரூம், செல்வா & கோ. புகார் எழுந்தபோது என்ன நடந்தது? நான் கோபமாக இருக்கிறேன். களப்பணி இல்லாமல் சிலர் ஜல்ட்ரா மட்டும் செய்தால் இதுதான் நடக்கும். திருச்சி சூர்யா & கோ அல்லது செல்வா & கோ மீண்டும் எங்களை ட்ரோல் செய்தால் நான் ஆச்சரியப்பட மாட்டேன். சைக்கோ மூளையால் மட்டுமே முடியும். என் இரத்தம் கொதிக்கிறது.

 திமுக ஸ்லீப்பர் செல்கள்

திமுக ஸ்லீப்பர் செல்கள்

கட்சியை குறை சொல்ல வேண்டாம் என அனைவரையும் தாழ்மையான வேண்டுகோள். திமுக ஸ்லீப்பர் செல்கள்தான் நம்மை சேதப்படுத்துகின்றன. அவர்கள் தங்கள் திராவிட மாடலை இங்கே காட்டுகிறார்கள். இதை நான் கண்டிக்கிறேன். இந்த நபர்களை போலீசார் கைது செய்ய வேண்டும். மற்றும் கட்சி அவரை உடனடியாக நீக்க வேண்டும். குரல் அச்சுறுத்தலைக் கேட்டு இதயம் உடைந்தது. டெய்சிக்கு வலிமை. என் ஆறுதல் மற்றும் ஆதரவு." என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

 காயத்ரி நீக்கம்

காயத்ரி நீக்கம்

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்ட அண்ணாமலை, காயத்ரி ரகுராம் கட்சிக் கட்டுப்பாட்டை மீறி செயல்படுவதால், கட்சியின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் ஆறு மாத காலத்திற்கு நீக்கப்படுவதாக அறிவித்தார். இந்த நிலையில் 8 ஆண்டுகளாக கட்சியில் தனது உழைப்பு மரியாதை கிடைக்கவில்லை என காயத்ரி ரகுராம் விமர்சித்து இருந்தார்.

 பாஜக செல்வகுமார் விளக்கம்

பாஜக செல்வகுமார் விளக்கம்

இதற்கு பதிலளிக்கும் வகையில் தமிழ்நாடு பாஜகவின் தொழிற்பிரிவு துணைத் தலைவர் செல்வகுமார் ட்விட்டரில் பதிவிட்டு உல்ளார். அதில், "ஒரு அரசியல் அனாதை சொல்வது போல் நான் கட்சியில் சேர்ந்தது 3 மாதம் முன்பு அல்ல. 6.5 வருடங்களுக்கு முன்பு இணைந்த நாள் : 18.05.2016; உறுப்பினர் எண் : 1111679042. என்னைப்பற்றி உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

 8 ஆண்டுகால நற்பணி

8 ஆண்டுகால நற்பணி

ஆக, நீங்க ஷட் அப் பண்ணுங்க. தற்போது கிடைத்திருக்கும் இடைவெளியில் நல்ல சிகிச்சை எடுத்து கொண்டு மன நலம் + உடல் நலம் பெற வாழ்த்துக்கள். மேலும், கடந்த 8 வருடங்களாக நீங்கள் கட்சிக்காக ஆற்றிய நற்பணிகளை மறந்து விட்டீர்கள். ஞாபகபடுத்த வேண்டியது நம் கடமை. உங்கள் நற்பணிகளில் சில..

 குடித்துவிட்டு விபத்து

குடித்துவிட்டு விபத்து

குடித்து கும்மாளமடித்து விட்டு போதையில் காரோட்டி வந்து காவல்துறையிடம் பிடிபட்டு வாக்கு வாதம் செய்து, காவல்துறை கைது செய்த போது. தப்பிக்க அடையார் சத்யா ஸ்டூடியாஸ் அருகே கூவத்தில் குதித்தது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கெட்ட வார்த்தைகளில் அருவருப்பாய், காது கூசும் அளவிற்கு ஆபாசமாய் பேசி தமிழ் பெண்கள் அனைவரும் காரி துப்பும் அளவிற்கு புகழ் பெற்றது.

 தமிழிசை மீது விமர்சனம்

தமிழிசை மீது விமர்சனம்

கட்சியை வளர்க்க பல்வேறு உருவ கேலியையும் ஏளன பேச்சுகளையும் தாங்கி சுறுசுறுப்பாக இயங்கி வந்த முன்னாள் பாஜக தலைவர் இந்நாள் மேதகு ஆளுநராய் இரண்டு மாநிலங்களை நிர்வாகிக்கும் அக்கா தமிழிசையை ட்வட்டரில் தரக்குறைவாய் விமர்சித்து அதற்காக கட்சியை விட்டு நீக்கபட்டது மறந்துவிட்டதா?" என்று அவர் பதிவிட்டு இருக்கிறார்.

English summary
Actress Gayatri Raghuram, who was expelled from the BJP for 6 months, has been criticized by Tamil Nadu BJP trade union vice-president Selvakumar as she criticized former Tamil Nadu BJP president Tamilisai and was expelled from the party.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X