சொந்த தொகுதியில் அடிக்கடி விசிட் அடிக்கும் ஸ்டாலின்.. மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்!
சென்னை: தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தி.மு.க தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் கடந்த தேர்தலில் கொளத்தூர் சட்டசபை தொகுதியில் இருந்து தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக வெற்றி பெற்றுள்ளார்.
|
கொளத்தூரை மறக்காத ஸ்டாலின்
எதிர்க்கட்சி தலைவராக இருக்கும்போதும் கொளத்தூர் சட்டசபை தொகுதியில் தொடர்ந்து நலத்திட்ட உதவிகளை செயல்படுத்தி வந்தார் மு.க.ஸ்டாலின். தற்போது ஆட்சி பொறுப்பேற்று முதல்வராக உள்ள நிலையிலும் தன்னை வெற்றி பெற செய்த கொளத்தூர் தொகுதியை அடிக்கடி விசிட் செய்வதை ஸ்டாலின் வழக்கமாக வைத்துள்ளார்.

அடிக்கடி விசிட்
கொளத்தூர் தொகுதிக்கு அடிக்கடி செல்லும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏழை, எளிய மாணவர்களுக்கு நோட்டு, புத்தகங்கள் வழங்குதல், பொதுமக்களுக்கு கொரோனா நிவாரண பொருட்கள் வழங்குவதல் உள்பட பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். மேலும் அந்த தொகுதியில் பொதுமக்களிடம் உள்ள குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்து வருகிறார்.

மாணவர்களுக்கு உதவி
இந்த நிலையில் இன்று கொளத்தூர் பகுதிக்கு சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் பந்தர் கார்டன் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு மேல்நிலைப்பள்ளிகளில் படிக்கும் ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும், கொளத்தூர் சட்டமன்ற தொகுதி அலுவலகம் முன்பு பெண்கள், முதியோர்கள் உள்ளிட்ட பலருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
Recommended Video

ஸ்டாலின் ட்வீட்
இது தொடர்பாக டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், '' கல்வி மட்டுமே அத்தனை இழிவுகளில் இருந்தும் விடுவித்து மனித சமுதாயத்தை முன்னேற்றும் என தமிழ்நாட்டின் கல்வி உட்கட்டமைப்பை வளப்படுத்தியவர் தலைவர் கலைஞர்! என்றென்றும் கலைஞர் புகழ் போற்றும் வகையில், இன்று கொளத்தூர் சென்றபோது 1330 மாணவச் செல்வங்களுக்கு உதவிகளை வழங்கினேன் என்று கூறியுள்ளார்.
-
115 ஆக உயரும் திமுக மா.செ-க்கள் எண்ணிக்கை.. கட்சிக்குள் ‘இளம் ரத்தம்’ பாய்ச்ச ஸ்டாலின் விதித்த கெடு! -
திமுகவின் கோட்டையை சிதறடித்த தவெக.. சென்னை அதிமுக நிர்வாகிகளை தூக்கும் அறிவாலயம்.. பின்னணி! -
தாறுமாறாக சரிந்த தங்கம்.. தொடர்ந்து இன்னும் சரியுமா? விலை வீழ்ச்சிக்கு காரணம் என்ன? -
வேளச்சேரி ஷாக்.. பாட்டியுடன் சென்ற 4 வயது குழந்தை பட்டப்பகலில் காரில் கடத்தல்.. இறுதியில் ட்விஸ்ட்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்! திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் பெஞ்சமின்! -
பெங்களூரு, மும்பை எல்லாம் ஓரம் போ.. சம்பள உயர்வு அதிகம் கொடுப்பதில் இந்த சிட்டிதான் டாப்! -
சென்னையில் சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்து.. தாம்பரம் அருகே பரபரப்பு -
1 BHK வீடு கட்டும் செலவில் கட்டிமுடிக்கப்பட்ட எழும்பூர் ரயில் நிலையம்.. இப்போ புத்தம் புதுசா மாறப்போகுது! -
சென்னை மக்களே! ரேஷன் அட்டையில் திருத்தம் செய்யணுமா? செம சான்ஸ்.. இன்னைக்கு மிஸ் பண்ணாதீங்க! -
4 மணி நேர மின்வெட்டு.. சென்னை ஆவடியில் கொந்தளித்த மக்கள்! சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு! -
பெங்களூருக்கு வேட்டு! இந்தியாவிலேயே அதிக சம்பள உயர்வு கிடைக்கும் நகரம் எது தெரியுமா? -
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications