செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா! கூண்டோடு புறக்கணிக்கும் தமிழக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்! பின்னணி என்ன?
சென்னை: செஸ் ஒலிம்பியாட் போட்டியின் பிரம்மாண்ட தொடக்க விழாவை தமிழக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் புறக்கணிக்க திட்டமிட்டுள்ளனர்.
சோனியா காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வரும் நிலையில், பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சியில் தாங்கள் பங்கேற்பது சரியாக இருக்காது என்பதால் இந்த முடிவாம்.
இதனிடையே அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களும் செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் பங்கேற்பது சந்தேகமே எனத் தெரிவிக்கப்படுகிறது.

செஸ் ஒலிம்பியாட்
சென்னையை அடுத்துள்ள மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுகிறது. இதற்கான தொடக்க விழா சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் இன்று மாலை பிரம்மாண்டமாக நடைபெறும் நிலையில் அதில் பிரதமர் மோடி மற்றும் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் உட்பட பல முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த விழாவுக்கான அழைப்பிதழ்கள் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன.

காங்கிரஸ் புறக்கணிப்பு
இதனிடையே இந்த விழாவுக்கு பிரதமர் மோடி தலைமை தாங்குவதால் அதை முற்றிலும் புறக்கணிக்க முடிவெடுத்துள்ளது தமிழக காங்கிரஸ். அதன்படி 18 காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களும் செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவில் பங்கேற்கப் போவதில்லை என அறிவித்து பரபரப்பை பற்ற வைத்துள்ளார் தமிழக காங்கிரஸ் சட்டசபைக் குழுத் தலைவர் செல்வப்பெருந்தகை. செஸ் ஒலிம்பியாட் போட்டியை புறக்கணிப்பதாக யாரும் எண்ணத் தேவையில்லை என்றும் தங்கள் புறக்கணிப்பு மோடிக்கு எதிரானது மட்டுமே எனவும் விளக்கம் அளித்துள்ளார்.

முதல்வருக்கு வாழ்த்து
மற்ற மாநிலங்கள் எல்லாம் செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னெடுத்து நடத்துவதற்கு தயங்கி நின்ற நிலையில் மிகவும் துணிச்சலாக தமிழகத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்திக் காட்ட முன்வந்த முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தமிழக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சார்பில் வாழ்த்துகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்வதாக செல்வப்பெருந்தகை கூறியிருக்கிறார்.
Recommended Video

அதிமுக நிலைப்பாடு
பிரதமரை காரணம் கூறி செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழா நிகழ்ச்சியை புறக்கணிக்க காங்கிரஸ் முடிவு செய்தது போல் திமுக அரசை காரணம் கூறி, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களும் செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவை புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications