பொது மக்களுக்கு இன்ப அதிர்ச்சி தந்த மின்வாரிய ஊழியர்கள்.. தங்கம் தென்னரசு சார் நம்ப முடியாத மாற்றம்!
சென்னை: புதிய வீடு கட்டும் நபர் போர்வெல் அமைத்து அந்த தண்ணீரை பயன்படுத்த மின்சார இணைப்பு வேண்டும். அதற்கு போஸ்ட் மரங்களை எடுத்து வந்து அந்த பகுதியில் அமைக்கும் போது, அனைத்து செலவையும் அவர் தான் ஏற்க வேண்டியதிருக்கும். இந்நிலையில் அந்த கட்டணங்களை இனி கொடுக்க வேண்டாம் என கூறி மின் வாரிய ஊழியர்கள் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.
பொதுவாக ஒருவர் புதிதாக வீடு கட்டும் போது, அந்த பகுதியில் மின் கம்பங்கள் இருந்தால் பிரச்சனை இல்லை. மாறாக அவருக்காகத்தான் மின் கம்பங்கள் அமைக்க வேண்டும் என்றால் ஆயிரக்கணக்கில் செலவு செய்ய வேண்டும்.

புதிய வீடு கட்டுபவர் போர்வெல் அமைத்து அதிலிருந்து தண்ணீரை பயன்படுத்த மின்வாரிய அலுவலகத்தை அணுகி, தற்காலிக வணிக பயன்பாட்டுக் கட்டணம் மற்றும் முன்வைப்புத் தொகை செலுத்த வேண்டியதிருக்கும். இது நிர்வாக ரீதியான கட்டணம். இதில், மின் கம்பம் ஏற்றிவர வாகன செலவு, கம்பம் நடுதல் மற்றும் மின் இணைப்பு வழங்கி கணக்கீடு மீட்டர் பொருத்துதல் உள்ளிட்ட பணிகளுக்கு சேர்த்த கட்டணம் செலுத்துவார்கள்.
ஆனால் நடைமுறையில் உள்ள சிக்கல் என்னவென்றால், மின் கம்பம் ஏற்றி வரும் வாகன வாடகை முதல், குழி தோண்ட பொக்லைன் செலவு, மின் இணைப்பு வழங்க வரும் ஊழியர்களுக்கு டீ காபி செலவு, காலை டிபன், மதிய சாப்பாடு தொகை மற்றும் வந்து பணிகளை சிறப்பாக செய்து கொடுத்ததாக தனி ஸ்பெசல் தொகை என முதல்முறையாக மின் இணைப்பு பெறுவோர் குறைந்தபட்சம் தனியாக ரூ.25 ஆயிரம் வரை செலவு செய்ய வேண்டும். இந்த தொகை வீடுகளுக்கு மட்டும் தான்.
இதே இது, விளைநிலங்களுக்கு என்றால் பணம் வேறுமாதிரி செலவு ஆகும். விவசாயிகள் தங்கள் விளைநிலத்தில் மின் இணைப்பு பெற நிர்வாக ரீதியான கட்டணங்களை செலுத்தினாலும், வாகன வாடகை முதல், குழி தோண்ட பொக்லைன் செலவு, மின் இணைப்பு வழங்க வரும் ஊழியர்களுக்கு டீ காபி செலவு, காலை டிபன், மதிய சாப்பாடு தொகை என வீடுகளை விட விவசாய நிலங்களுக்கு டபுள் மடங்கு செலவு செய்தாக வேண்டும். இதுதான் எதார்த்தமான நடைமுறையாக உள்ளது.
இது ஒரு புறம் எனில், மும்முனை இணைப்பு பெற்ற விவசாயிகள் அவரது பகுதியில் இயங்கி வந்த மின்மாற்றி இயற்கை சீற்றங்களாலோ அல்லது பழதானாலோ அதை மாற்றும் செலவும் விவசாயிகள் தான் ஏற்க வேண்டும்.
இந்த சூழலில் மின் கம்பங்களை ஏற்றி இறக்க கூலி மற்றும் ஸ்பெசல் ஊக்க தொகைகளை கேட்க வேண்டாம் என்று மின்வாரிய ஊழியர்கள் தெரிவித்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளனர். மின் இணைப்பு பெற வரும் நுகர்வோருக்கான தளவாட பொருட்கள் அனைத்தும் மின் வாரியம் தான் வழங்க வேண்டும் என்றும் நுகர்வோரிடம் கூடுதல் தொகை கேட்பதை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக குறைகள் ஏதேனும் இருந்தால் என்ன செய்வது என்பது குறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறும் போது, தமிழ்நாட்டில் மின் வாரியம் 9 மண்டலங்கள், 37 மின் பகிர்மான வட்டங்களுடன் செயல்படுகிறது. மின்சார சட்டப்படி மின் நுகர்வோர் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண மின் நுகர்வோர் குறைதீர் மன்றம், மின் குறைகள் தீர்ப்பாளர் போன்ற அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.
மின் குறை தீர்ப்பாளர், மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தைச் சேர்ந்தவர். மின் நுகர்வோர் குறைதீர் மன்றம் ஒரு தலைவர் மற்றும் இரு உறுப்பினர்களுடன் செயல்படுகிறது. இதன் தலைவராக மேற்பார்வை பொறியாளர் செயல்படுகிறார் அங்கு குறைகளை தெரிவிக்கலாம்.
இதேபோல் உங்கள் பகுதியில் மின்தடை ஏற்பட்டால் மின்னகம் எனும் புகார் மையம் உள்ளது. இதற்கு 9498794987 என்ற எண்ணில் புகார் செய் தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். நுகர்வோரிடம் கூடுதல் பணம் கேட்பதை தவிர்க்க கூறியுள்ளோம். நுகர்வோரும் கூடுதல் பணம் கொடுப்பதை நிறுத்த வேண்டும் என்று அதிகாரி கூறினார்.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications