அமைச்சர் செந்தில் பாலாஜியின் ட்விட்டர் கணக்கு ஹேக்.. பெயரும் மாற்றப்பட்டு ட்வீட் வெளியீடு!
சென்னை: தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் ட்விட்டர் கணக்கு திடீரென ஹேக் செய்யப்பட்டுள்ளது. மேலும் அவரது பெயரும் மாற்றப்பட்டு அதில் கிரிப்டோகரன்சி தொடர்பாக பதிவிடப்பட்டிருந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சமூக வலைத்தளில் படு ஆக்டிவாக இருப்பவர். குறிப்பாக ட்விட்டரில் இவர் அவ்வப்போது பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வருகிறார். அதிலும் மின்சாரத்துறை தொடர்பான அல்லது அது சம்பந்தமான ட்வீட் பதிவுகளை பதிவிட்டு வருகிறார்.
இந்த நிலையில், நள்ளிரவில் திடீரென செந்தில் பாலாஜியின் ட்விட்டர் கணக்கில் இருந்து ஒரு பதிவு வெளியானது.

ட்விட்டர் பயனர்கள் மத்தியில் பெரும் குழப்பம்
அதில், ''அனைவருக்கும் வணக்கம், எங்கள் கட்சி அதன் சொந்த கிரிப்டோ வாலட்டை உருவாக்கியுள்ளது. இன்று, முன்னெப்போதையும் விட, ஆற்றல் வளர்ச்சியில் உங்கள் உதவி எங்களுக்குத் தேவை'' என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இது ட்விட்டர் பயனர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. அமைச்சர் செந்தில் பாலாஜியின் அக்கவுண்டில் இருந்து இப்படி திடீரென இப்படியொரு பதிவு வந்திருக்கிறதே என்று பலரும் யோசித்துக்கொண்டிருந்தனர்.

அடுத்தடுத்து பதிவுகள் வெளியீடு
இந்த நிலையில் சிறிது நேரத்தில் அடுத்து ஒரு டிவிட் பதிவு வெளியானது. அதில், ''கோவிட் 19 உடன் போராடும் மக்களுக்கு உதவ $1 மில்லியன் திரட்ட விரும்புகிறோம்!'' என்று இருந்தது. மேலும் கிரிப்டோ முகவரி என ஒன்று பதிவிட்டு இருந்தது. இதேபோல் அவரது டிவிட்டர் பக்கத்தில் உள்ள அவரது பெயரும் மாற்றப்பட்டுள்ளது. அதனை Variorius (@V_Senthilbalaji) என்று மாற்றப்பட்டுள்ளது. இதேபோல் அவரது அக்கவுண்ட் பக்கத்தில் ஏற்கனவே இருந்த மின்சாரத்துறை அமைச்சர், கரூர் மாவட்ட செயலாளர் போன்ற பெயர்களையும் ஹேக்கர்கள் நீக்கியுள்ளனர்.

ஹேக் செய்யப்பட்டது உறுதி
செந்தில் பாலாஜியின் ட்விட்டர் கணக்கு பெயரும் மாற்றப்பட்டு இருந்ததால் அது ஹேக் செய்யப்பட்டு இருப்பது உறுதியானது. தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியின் ட்விட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டு இருப்பது நெட்டிசன்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பிரதமர் மோடியின் இணையதள பக்கத்தின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டது.

உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்
ஹேக் செய்யப்பட்ட பிறகு ''பிட்காயினை இந்தியாவில் சட்டப்பூர்வமாக்குவதாக ஹேக்கர்கள், பிரதமரின் ட்விட்டர் கணக்கில் பதிவிட்டு இருந்தனர்'' சிறிது நேரத்தில் ஹேக் செய்யப்பட்ட்ட அக்கவுண்ட் மீட்கப்பட்டது. பிரபலமான அரசியல் பிரமுகர்களின் ட்விட்டர் கணக்குகளை குறிவைத்து பிட்காயின் சம்பந்தப்பட்டவர்கள் ஹேக்கிங் செய்து வருவது அடிக்கடி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இதை சரி செய்ய ட்விட்டர் நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும் நெட்டிசன்கள் விவாதமாக உள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications