Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இலவச டவுன் பஸ் டிக்கெட்டில்.. அதுவும் பிங்க் கலர் பயணச் சீட்டில்.. சூப்பர் மாற்றத்தை கவனிச்சீங்களா!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மாநகர பஸ்களில் வழங்கப்படும் பயண சீட்டில் ஒரு மாற்றம் இருப்பதை உன்னிப்பாக கவனித்து இருந்தால் நீங்கள் பார்த்திருக்க முடியும்.

இளஞ்சிவப்பு அதாவது பிங்க் வண்ணத்தில் உள்ள டிக்கெட்டில் தான் புதிய மாற்றம் நடைமுறைக்கு வந்து இருக்கிறது.

ஸ்டாலின் தலைமையில் திமுக அரசு பொறுப்பேற்றதும், முதல் நாளிலேயே, மகளிருக்கு அரசு நகரப் பேருந்துகளில் இலவச பயணம் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

மகளிருக்கு இலவசம்

மகளிருக்கு இலவசம்

இதை அடுத்து மகளிர் இலவசமாக பயணித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர் . இந்த உத்தரவை தொடர்ந்து திருநங்கைகளுக்கும் மாநகராட்சி பேருந்துகளில் இலவச பயணம் செய்ய அனுமதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது . மாற்றுத்திறனாளிகளுக்கும் இதுபோன்று சலுகை கொடுக்கப்பட வேண்டும் என்று பலரும் வலியுறுத்தினர்.

4 வகை பயணிகளுக்கு இலவசம்

4 வகை பயணிகளுக்கு இலவசம்

இதையும் ஏற்றுக் கொண்டது ஸ்டாலின் அரசு. இதையடுத்து மகளிர், மாற்றுதிறனாளிகள், மாற்றுத்திறனாளியின் உதவியாளர், திருநங்கைகள் ஆகிய 4 பிரிவினருக்கு இலவச பயணம் சாத்தியமானது. இவர்களுக்காக, தனித்தனி வண்ணங்களில் டிக்கெட் அச்சடிக்கப்பட்டது. இந்த நான்கு வகை பயணிகளும் இந்த டிக்கெட்டை பெற்றுக்கொண்டு இலவசமாக பயணம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டது.

மூன்றாம் பாலினம் என்றதால் அதிருப்தி

மூன்றாம் பாலினம் என்றதால் அதிருப்தி

இளஞ்சிவப்பு வண்ணத்தில் திருநங்கைகளுக்கு டிக்கெட் வழங்கப்பட்டு வந்தது. அதில் மூன்றாம் பாலினத்தவர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. பெண்களுக்கான டிக்கெட்டில் மகளிர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மாற்றுத்திறனாளி மற்றும் மாற்றுத்திறனாளிகள் உதவியாளர் என்று அவர்களுக்கான டிக்கெட்டுகளில் வார்த்தைகள் அச்சடிக்கப்பட்டு இருந்தன. ஆனால் மூன்றாம் பாலினத்தவர் என்று குறிப்பிடுவதற்கு திருநங்கைகள் தொடர்பான சமூக ஆர்வலர்கள் அதிருப்தி தெரிவித்தனர்.

திருநங்கைகள் டிக்கெட்டில் மாற்றம்

திருநங்கைகள் டிக்கெட்டில் மாற்றம்

இந்த நிலையில்தான் அந்த டிக்கெட்டில் மாற்றம் கொண்டு வந்துள்ளது மாநகர போக்குவரத்து கழகம். தற்போது மூன்றாம் பாலினத்தவர் என்று குறிப்பிடப்பட்ட இடத்தில் திருநங்கை என்று மாற்றி அச்சடிக்கப்பட்டு இருக்கிறது. தற்போது இந்த டிக்கெட் தான் திருநங்கைகளுக்கு வழங்கப்படுகிறது. வார்த்தைகளில் கூட தங்களை காயப்படுத்தி விடக்கூடாது என்ற அரசின் இந்த நடவடிக்கைக்கு திருநங்கைகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+