ஆளுநரை மிரட்டி பேசிய திமுக பேச்சாளர்..சென்னை கமிஷனரிடம் கவர்னர் மாளிகை புகார்
சென்னை: திமுக தலைமை கழக பேச்சாளராக இருக்கும் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி ஆளுநர் ஆர்என் ரவி குறித்து சென்னை விருகம்பாக்கத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் ஆளுநர் ஆர்என் ரவி பற்றி அவதூறாகவும் கொச்சையாகவும் பேசினார். ‛செருப்பால் அடிப்பேன்' எனக்கூறியதோடு கொலை மிரட்டல் விடுக்கும் வகையிலும் பேசினார். இந்நிலையில் தான் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை போலீஸ் கமிஷனரிடம் ஆளுநர் மாளிகை சார்பில் பரபரப்பான புகார் அளிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சரும், திமுகவின் முன்னாள் பொதுச்செயலாளராகவும் இருந்தவர் பேராசிரியர் அன்பழகன். இவர் மறைந்த நிலையில் திமுக சார்பில் தமிழ்நாடு முழுவதும் அன்பழகன் நூற்றாண்டு விழா நடத்தப்பட்டு வருகிறது.
சென்னை முதல் கன்னியாகுமரி வரை மாவட்டங்கள் வாரியாக அன்பழகன் நூற்றாண்டு விழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் அமைச்சர்கள், திமுக பேச்சாளர்கள், நிர்வாகிகள் பங்கேற்று பேசி வருகின்றனர்.

திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி
இந்நிலையில் தான் சென்னை விருகம்பாக்கத்தில் நடந்த கூட்டத்தில் திமுக தலைமை கழக பேச்சாளராக இருக்கும் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பங்கேற்று பேசினார். அப்போது அவர் ஆளுநர் ஆர்என் ரவி குறித்து அவதூறாகவும், கொச்சையாகவும் பேசினார். சட்டசபையில் தமிழக அரசு அச்சடித்து வழங்கிய உரையை ஆளுநர் ஆர்என் ரவி விட்டுவிட்டு படித்ததை கூறி அவர் கடும் சொற்களால் விமர்சனம் செய்தார்.

ஆளுநர் மீது விமர்சனம்
இந்த கூட்டத்தில் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேசியதாவது: ‛‛ஆளுநர் ரவி உரை நிகழ்த்தியபோது பேப்பரில் எழுதி கொடுத்தபடி படித்திருந்தால் அவரது காலில் பூப்போட்டு அனுப்பி இருப்போம். ஆனால் தமிழகத்தில் இந்தியாவுக்கு சட்டத்தை எழுதி கொடுத்த எங்கள் முப்பாட்டன் அபம்பேத்கர் பெயரை சொல்ல மாட்டேன் என்று சொன்னால் ஆளுநரை செருப்பால் அடிப்பேன் என சொல்லும் உரிமை எனக்கு இருக்கா? இல்லை. அவரது பெயரை சொல்ல முடியாது என்றால் காஷ்மீர் போகட்டும். நாங்களே தீவிரவாதிகளை அனுப்புகிறோம். சுட்டு கொல்லட்டும்'' என மிரட்டல் விடுத்தார்.

அண்ணாமலை மீது அட்டாக்
மேலும், ‛‛உலகத்தில் ஒரே தலைவர் கருணாநிதி தான். அண்ணாமலை ஐபிஎஸ் பதவியை ராஜினாமா செய்து பாதியில் வந்தார். அவர் தான் தற்போது பாஜக தலைவராக தமிழ்நாட்டுக்கு உள்ளார். பிரான்சில் தயாரித்த வாட்சை இந்தியாவில் கையில் கட்டி இருந்தால் அது தேசபக்தியா'' என அண்ணாமலையையும் விமர்சனம் செய்தார். இந்த பேச்சின்போது இடையிடையே ஆளுநர் ஆர்என் ரவி பற்றி காது கூசும் வார்த்தைகளை கூறி பேசியிருந்தார்.

ஆளுநர் மாளிகை புகார்
இதுதொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் தான் திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆளுநர் மாளிகை சார்பில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது.

புகாரில் இருப்பது என்ன?
ஆளுநர் மளிகையின் துணை செயலாளர் பிரசன்னா ராமசாமி சார்பில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இணையவழியிலும், தபால் மூலமாகவும் புகார் வழங்கப்பட்டுள்ளது. அதில் ஆளுநர் ஆர்என் ரவி பற்றி அவதூறு பரப்பும் வகையில் கொச்சையாகவும், மிரட்டல் விடுக்கும் வகையிலும் திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேசியுள்ளார். அவர் மீது இந்திய தண்டனை சட்டம் 124 (ஆளுநரை பணி செய்ய விடாமல் தடுத்தல்) பிரிவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

நடவடிக்கை எப்போது?
இந்த புகார் பற்றி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் விசாரித்தபோது, ‛‛ஆளுநர் மாளிகை அளித்த புகார் குறித்து சட்ட ஆலோசகர்களுடன் ஆலோசனை நடத்தி அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்'' என தெரிவித்துள்ளார். இந்நிலையில் தான் சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை உடனடியாக போலீசார் கைது செய்ய வேண்டும் என பாஜகவினர் தெரிவித்து வருகின்றனர்.

முன்பு நடந்தது என்ன?
தமிழ்நாட்டில் ஆளுநர் ஆர்என் ரவி மற்றும் தமிழக அரசு இடையே கடும் மோதல் போக்கு உள்ளது. இருதரப்புக்கும் இடையே வார்த்தை போர் நீடித்து வருகிறது. இதற்கிடையே தான் கடந்த திங்கட்கிழமை சட்டசபை துவக்க நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்என் தமிழக அரசின் அச்சிடப்பட்ட உரையை விட்டுவிட்டு படித்ததோடு சில விஷயங்களை கூடுதலாக தெரிவித்தார். இதற்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்ததால் ஆளுநர் ஆர்என் ரவி சட்டசபையில் இருந்து பாதியில் வெளியேறினார். ஆளுநருக்கு அறிவுரை வழங்க வேண்டும் என ஜனாதிபதி திரெளபதி முர்முவிடம் திமுக புகார் அளித்துள்ள நிலையில் ஆர்என் ரவி டெல்லி சென்றுள்ளார். இதற்கிடையே தான் தற்போது திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு எதிராக ஆளுநர் மாளிகை சார்பில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications