சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தீர்வு.. ஆன்லைனில் வில்லங்க சான்று பார்ப்பதில் வில்லங்கம்.. இணையதளத்தை சரிசெய்த தமிழக அரசு

Google Oneindia Tamil News

சென்னை: பதிவுத்துறை இணையதளத்தில் சொத்துக்களின் வில்லங்க சான்று விபரங்களை பொதுமக்கள் இலவசமாக பார்க்கும் வசதி திடீரென முடக்கப்பட்டதாக புகார் எழுந்த நிலையில் அதனை தமிழக அரசு சரிசெய்துள்ளது.

தமிழகத்தில் உள்ள சொத்துகளின் முந்தைய பரிமாற்றங்களை அறிய வில்லங்க சான்று அவசியமாகும். வில்லங்க சான்று விபரங்களை ஆன்லைனில் இலவசமாக அறியும் வசதி 2013ல் துவங்கப்பட்டது.

இந்நிலையில் ஆன்லைன் முறையில் கட்டணம் செலுத்தி வில்லங்க சான்று பெறும் வசதி 2019ல் ஜனவரி மாதம் அமலுக்கு வந்தது. இருப்பினும் வில்லங்க சான்று விபரங்களை ஆன்லைனில் இலவசமாக பார்க்கும் வசதியும் செயல்பாட்டில் உள்ளது.

கூண்டோடு சிக்கும் அதிகாரிகள்.. பதிவுத்துறை கூடுதல் ஐ.ஜி மீது வழக்குப்பதிவு.. வளையத்தில் சிவக்குமார்!கூண்டோடு சிக்கும் அதிகாரிகள்.. பதிவுத்துறை கூடுதல் ஐ.ஜி மீது வழக்குப்பதிவு.. வளையத்தில் சிவக்குமார்!

சேவை பாதிப்பு

சேவை பாதிப்பு

இந்நிலையில் சில நாட்களாக பதிவுத்துறை இணையதளத்தில் இலவசமாக வில்லங்க சான்று பெறும் சேவையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. தமிழகத்தில் பதிவு துறையில் சேவையை முறையாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில் சில அதிகாரிகள் வில்லங்க விபரங்களை இலவசமாக பார்க்கும் சேவையை திட்டமிட்டு முடக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் பொதுமக்கள் சேவையை பெற முடியாமல் பாதிக்கப்பட்டனர்.

பிரச்சனைக்கு தீர்வு

பிரச்சனைக்கு தீர்வு

அதாவது புதிதாக சொத்து வாங்குவோர் வில்லங்க விபரங்களை சரிபார்க்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனை தமிழக அரசு சரிசெய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்தது. அதன்படி தற்போது வில்லங்க விபரங்களை பொதுமக்கள் மீண்டும் இலவசமாக பார்க்கும் சேவையில் இருந்த பிரச்சனையை தமிழக அரசு சரிசெய்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.அதில் கூறப்பட்டுள்ளதாவது:

சீர்த்திருத்த நடவடிக்கைகள்

சீர்த்திருத்த நடவடிக்கைகள்

முதல்வர் ஸ்டாலின் வழிக்காட்டலின்பேரில் பதிவுத்துறையின் செயல்பாடுகளை மேம்படுத்துவதற்காக பல சீர்த்திருத்த நடவடிக்கைள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி ஸ்டார் மென்பொருளியில் புதிய அலகுகள் உருவாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. ஆவணங்களை பதிவு செய்வதற்காக பொதுமக்கள் இணையதளத்தில் முன்பதிவு செய்து கொண்டு சார்பதிவாளர் அலுவலகம் வந்த பின்னர் முன்பதிவு செய்ய அதே வரிசையில் வரிசைக்கிரமமாக எந்த விதமாக பாகுபாடுமின்றி ஆவணங்கள் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பிரச்சனை ஏன்?

பிரச்சனை ஏன்?

பொதுவாக மக்கள் நல்லநாள் நல்லநேரம் பார்த்தே ஆவணங்களை தாக்கல் செய்கின்றனர். மங்களகரமான நாட்களில் ஆவணப்பதிவு மேற்கொள்ள விரும்பி ஒரேசமயத்தில் சார்பதிவாளர் அலுவலகத்தில் பொதுமக்கள் அதிக எண்ணிக்கையில் வருவது வழக்கமாக உள்ளது. அவ்வாறு ஒரே சமயத்தில் அனைத்து அலுலலகங்களிலும் ஆவணப்பதிவு மேற்கொள்ளப்படும்போது நெட்வொர்க்கில் அதிக நெரிசல் ஏற்பட்டு மென்பொருளின் செயல்திறன் பாதிக்கப்படுகிறது.

பிரச்சனைக்கு தீர்வு

பிரச்சனைக்கு தீர்வு

பொதுமக்களின் சொத்து குறித்த வில்லங்க விபரங்களை பதிவுத்துறையின் வலைதளத்தில் இருந்து இணையவழியாக இலவசமாக பார்வையிட ஏற்படுத்தியிருந்த வசதியினை பயன்படுத்தி சில கைபேசி செயலிகள் வில்லங்க சான்றுகளை தரவிறக்கம் செய்து வருவது சமீபத்தில் கண்டறியப்பட்டு இதனால் ஏற்பட்ட நெட்வொர்க் பிரச்சனையை நிவர்த்தி செய்து மென்பொருளை மேம்படுத்தும் பணிகள் இரவு, பகலாக நடைபெற்றது. தன்னிச்சையாக பதிவுத்துறை வலைதளத்தில் டேக் செய்யப்பட்டிருந்த அந்த கைபேசி செயலிகளின் இணைப்பு தற்போது துண்டிக்கப்பட்டு நெட்வொர்க் பிரச்சனை சீராக்கப்பட்டுள்ளது.

நேற்று முதல் பார்க்க வசதி

நேற்று முதல் பார்க்க வசதி

பதிவுத்துறையின் யுஆர்எல் எனப்படும் இணைய முகவரியினை குறியாக்கம் செய்தல், இரண்டு நொடிகளுக்கு மேல் காலமெடுக்கும் மிதவேக தரவுதள வினவுகளை மாற்றியமைத்தல், தரவு தளத்தை சுத்தப்படுத்தும் ஆகிய மேம்பாட்டு பணிகள் மூலம் மென்பொருள் சீர் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் 02.09.2022 முதல் பொதுமக்கள் எந்தவிதமாகன இன்னலுமின்றி ஆவணப்பதிவு மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. மென்பொருள் துரிதமாக செயல்படுவது தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டு ஆவணப்பதிவு தங்கு தடையின்றி நடைபெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது'' என கூறப்பட்டுள்ளது.

English summary
The Tamil Nadu government has fixed the complaint that the facility of free viewing of property registration documents on the registration department's website was suddenly disabled.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X