போதை பொருள் கடத்தல்..அழிவுப்பாதையில் செல்லும் தமிழ்நாடு..எடப்பாடி பழனிச்சாமி சராமரி புகார்
சென்னை: தமிழ்நாடு அழிவுப்பாதையில் சென்று கொண்டிருப்பதாக எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டினார். கஞ்சா, கொகைன் போன்ற போதைப்பொருட்கள் அதிக அளவில் தமிழ்நாட்டில் விற்பனை செய்யப்படுவதாகவும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
சட்டசபையில் இருந்து வெளி நடப்பு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிச்சாமி ஆளும் திமுக அரசின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். தமிழ்நாடு போதைப்பொருட்களின் விற்பனை கூடாரமாக மாறி வருவதாக புகார் கூறினார்.

பள்ளிகள், கல்லூரிகள், மாணவர்கள் அதிகம் நடமாடும் இடங்களில் போதைப்பொருட்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் காரணமாக மாணவர்களும் பொதுமக்களும் அதிக அளவில் போதைப்பொருட்களை பயன்படுத்தி சீரழியும் சூழ்நிலை ஏற்படுகிறது. இதனை அரசின் கவனத்திற்கு கொண்டு வந்தோம். அதை பேச அனுமதிக்கவில்லை. ஒருநாள் இரண்டு நாட்கள் அல்ல தினந்தோறும் போதை பொருள் பிடிபடும் செய்திகள் ஊடகங்களில் வெளியாகி வருகின்றன.
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைந்து விட்டது. போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்து விட்டது. இதை எல்லாம் அரசின் கவனத்திற்கு கொண்டு வந்தோம். வேண்டும் என்றே எங்களின் பேச்சை பதிவு செய்ய மறுக்கின்றனர். சபாநாயகர் நடுநிலையோடு செயல்படுகிறேன் என்று சொல்கிறார். ஆனால் அவர் அவ்வாறு இல்லை. நடுநிலையோடு செயல்படும் சபாநாயகரை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றனர் என்றும் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டினார்.

தமிழ்நாட்டில் போதை பொருள் புழக்கம் அதிகரித்து வருவதால் அழிவுப்பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்றும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications