அரசியல் தலைவர்களின் பாதுகாப்பு.. காவல்துறை நடத்திய முக்கிய ஆலோசனை.. விரைவில் மேஜர் முடிவு
சென்னை: அரசியல் தலைவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவது குறித்து பாதுகாப்பு பிரிவு டிஐஜி திருநாவுக்கரசு தலைமையில் தமிழக காவல்துறை அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது. அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் யார் யாருக்கெல்லாம் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருக்கிறது, யாருக்கு எல்லாம் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பை பலப்படுத்துவது தொடர்பாக தமிழக காவல்துறை சார்பில் ஆலோசனை கூட்டம் ஒன்று நடத்தியது. பாதுகாப்பு பிரிவு டிஐஜி திருநாவுக்கரசு தலைமையில் காவல்துறை முக்கிய அதிகாரிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் யார் யாருக்கெல்லாம் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருக்கிறது. இதில் ஏற்கனவே யார் யாருக்கு எல்லாம் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது, மேலும் யாருக்கு எல்லாம் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் இருக்ககூடிய 5 கட்சி தலைவர்கள் மட்டுமின்றி மற்ற துறை சார்ந்த முக்கிய பிரமுகர்கள் யாருக்கும் அச்சுறுத்தல் உள்ளதா என்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. பகுஜன் சமாஜ் கட்சி தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெட்டி படுகொலை செய்யப்பட்டார். ஒரு கட்சியின் மாநில தலைவரான ஆம்ஸ்ட்ராங் படுகொலை சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து இருந்தனர்.
மேலும் ஆம்ஸ்ட்ராங்கிற்கு சரியான பாதுகாப்பு வழங்கப்பட வில்லை என்றும் அரசியல் தலைவர்கள் பலரும் குற்றம் சாட்டி இருந்தனர். மேலும் இதுபோன்ற சம்பவம் இனி நடைபெறாத வண்ணம் பார்த்துக்கொள்ளும் படி தமிழக அரசுக்கு கோரிக்கையும் வைத்திருந்தனர். இந்த சூழலில் தான் தமிழக காவல்துறையில் பாதுகாப்பு டிஐஜி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் என்ன மாதிரியான முடிவுகள் எடுக்கப்பட்டன என்பது அறிக்கையாக தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்படும். இதற்கு பிறகு அரசியல் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் யார் யாருக்கு எல்லாம் பாதுகாப்பு வழங்கப்படும் என்ற தகவல் வெளியாகும்.
-
முதலில் சங்கர் ஜிவால்.. இப்போது சுனில் குமார்.. தமிழக மாஜி டிஜிபிக்கள் அடுத்தடுத்து விலகல்! பின்னணி -
உதயமாகும் "தமிழ்நாடு கரப்பான் பூச்சி ஜனதா கட்சி.." தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய விண்ணப்பம்! -
வாடகை வீட்டில்.. பழுதுபார்ப்பு செலவு யாருடைய பொறுப்பு? தெரிந்துக்கொள்ள வேண்டிய விஷயம்! -
கேள்வி கேட்டா கரண்ட் வருமா? வாய் விட்ட மகேந்திரன்! வறுத்தெடுத்த நெட்டிசன்கள்! இப்போ மன்னிப்பு வீடியோ -
முதியோர் சமூகமாக மாறும் தமிழ்நாடு.. இளைஞர்கள் எண்ணிக்கை சரிவு.. பெரிய சிக்கல்! வெள்ளை அறிக்கை லிஸ்ட் -
நடுக்கடலில் உயிரிழந்த தமிழக மாலுமி.. 3 நாட்களுக்கு பிறகு ஒரு வழியாக மீட்கப்பட்ட உடல்! என்ன நடந்தது? -
"தமிழ்நாட்டின் வருவாயில் 3-ல் 1 ரூபாய் வட்டிக்கு மட்டுமே செல்கிறது.." வெள்ளை அறிக்கை ரிப்போர்ட் -
தமிழக காவல்துறையில் அதிரடி மாற்றம்.. சென்னை, தாம்பரத்தில் 40 டி.எஸ்.பி-க்கள் டிரான்ஸ்பர்! -
தமிழ்நாட்டு தலைக்கு மேல் கத்தி.. ஏடாகூடமான எல் நினோ! கொஞ்சம் பிசகினாலும் போச்சு! பறந்த வார்னிங்! -
4874 EV சார்ஜிங் நிலையங்கள் ரூ.2000 கோடியில்! தமிழகத்தில் எங்கே தெரியுமா? மத்திய அரசின் மாஸ் பிளான் -
மூக்கில் ரத்தம், டிரஸ் இல்ல.. ஹனிமூன் சென்ற இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்! என்ன நடந்தது -
சுழல்கள் நிறைந்த சாலக்குடி ஆற்றின் பாறை இடுக்கில் சிக்கிய தமிழக இளைஞர்! கயிறு கட்டி மீட்ட ராணுவ வீரர்!












Click it and Unblock the Notifications