Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆச்சரியம்.. தமிழ்நாட்டில் இயல்பை விட 54 சதவீதம் மழை அதிகம்.. சென்னைக்கு கூடுதலாக 77% மழை

தமிழகத்தில் இயல்பை விட 54 சதவீதம் மழை அதிகமாக பொழிந்துள்ளது

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் இயல்பை விட 54 சதவீதம் மழை அதிகமாக பெய்திருக்கிறது. மாநிலம் முழுவதும் பரவலாக தொடர் மழை பெய்து வருவதால், கடந்த 10 நாட்களில் மட்டும் தமிழகத்தில் சராசரியாக 18 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

Recommended Video

    அந்தமானில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி? | Tamilnadu weather | Oneindia Tamil

    கடந்த ஒரு வார காலமாகவே நல்ல மழை பெய்து வருகிறது.. நேற்றைய தினம் வங்கக் கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், சென்னை அருகே மாலையில் கரையைக் கடந்தது.

    கரையை கடக்கும்போது எதிர்பார்த்த அளவுக்கு கனமழை இல்லாவிட்டாலும் காற்றின் தாக்கம் அதிகம் இருந்தது..

     கரையை கடந்தது

    கரையை கடந்தது

    சென்னைக்கு அருகே நேற்று மாலை 5.30 மணி அளவில் கரையை கடக்கத் தொடங்கியது. சுமார் 1 மணி நேரத்தில் கரையை கடந்தது. பிறகு, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலு குறைந்து மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து சென்றது. அப்போது சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இரவு முழுவதும் பலத்த தரைக்காற்று மணிக்கு 30 முதல் 40 கி.மீ. வேகத்தில் வீசியது.

     சென்னை மாநகரம்

    சென்னை மாநகரம்

    தொடர்ந்து, இடைவிடாத பெய்த மழையாலும் சென்னை மாநகரமே தண்ணீரில் தத்தளித்து வருகிறது.. அதேபோல மாநகருக்கான ரெட் அலர்ட்டை வானிலை ஆய்வு மையம் விலக்கி கொண்டுள்ளது. இதனால் மக்கள் ஓரளவு நிம்மதி அடைந்துள்ளனர்... இந்நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டலத் தலைவர் எஸ்.பாலசந்திரன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் சொன்னதாவது:

     தாழ்வு மண்டலம்

    தாழ்வு மண்டலம்

    காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை அருகே கரையைக் கடந்தது. இதன் தாக்கத்தால் 12, 13-ம் தேதிகளில் (இன்றும், நாளையும்) நீலகிரி, கோவை, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும், மற்ற மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

     ரெட் அலர்ட்

    ரெட் அலர்ட்

    சென்னையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப் படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னைக்கு விடப்பட்டிருந்த அதிகன மழைக்கான "ரெட் அலர்ட்" விலக்கிக் கொள்ளப்பட்டது.வடகிழக்கு பருவமழை காலத்தில் தமிழகம், புதுச்சேரியில் கடந்த அக்டோபர் 1 முதல் நவம்பர் 11-ம் தேதி வரை வழக்கமாக 26 செ.மீ. மழை கிடைக்கும்.

     அதிகமான மழைப்பதிவு

    அதிகமான மழைப்பதிவு

    ஆனால், இந்த ஆண்டு 40 செ.மீ. மழை கிடைத்துள்ளது.. இது வழக்கத்தைவிட 54 சதவீதம் அதிகம். சென்னையில் இந்த காலகட்டத்தில் வழக்கமாக 42 செ.மீ. மழை பெய்யும். இந்த ஆண்டு 74 செ.மீ. மழை கிடைத்துள்ளது. இது வழக்கத்தைவிட 77 சதவீதம் அதிகமாகும்.. தமிழகத்தில் பரவலாக தொடர் மழை பெய்து வருவதால், கடந்த 10 நாட்களில் மட்டும் தமிழகத்தில் சராசரியாக 18 செ.மீ. மழை பதிவாகியுள்ளது...

    விடுமுறை

    விடுமுறை

    அதற்கடுத்தபடியாக திருவாரூர் மாவட்டத்தில் 110 சதவீதமும், கோவையில் 103 சதவீதமும், அரியலூரில் 95 சதவீதமும் அதிகமாக மழை பெய்திருக்கிறது... கிருஷ்ணகிரி, மதுரை, விருதுநகர் மாவட்டங்களை தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் இயல்பை விட அதிகமாகவே மழை பெய்து இருக்கிறது" என்றார்... கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கும், விழுப்புரம், கடலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறையும் விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+