விஜய்- திரிஷா விவகாரம்! இன்னும் சற்று நேரத்தில் பதில் வருதாமே! என்ன சொல்ல போகிறாரோ!
சென்னை: இன்னும் சிறிது நேரத்தில் அனைத்து வதந்திகளுக்கும் பதில் வருகின்றன என தூத்துக்குடி மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் அறிவித்துள்ளது. விஜய் திரிஷா குறித்து வதந்திகள் ரெக்கை கட்டி பறந்து வரும் நிலையில் தூத்துக்குடி மாவட்ட தவெகவின் இந்த போஸ்ட் பரபரப்பை கிளப்பியுள்ளது.


நடிகை திரிஷா விவகாரம் தற்போது தமிழக அரசியல் மற்றும் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது முதலில் பிப்ரவரி 2026-இல் தொடங்கியது.
தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தவெக தலைவர் விஜய் அரசியல் அனுபவமின்மை குறித்து விமர்சிக்கும் போது, "விஜய் முதலில் திரிஷா வீட்டிலிருந்து வெளியே வந்து அரசியல் செய்யட்டும்" என்று கண்ணியக்குறைவான கருத்து தெரிவித்தார். இது சமூக வலைதளங்களில் வைரலானது.
இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. திரிஷா தரப்பில் வழக்கறிஞர் மூலம் அறிக்கை வெளியிட்டு, "இத்தகைய அருவருக்கத்தக்க, தேவையற்ற கருத்துகளை உயர் அரசியல் பதவியில் உள்ளவர் கூறியது ஏற்க முடியாதது. என் பெயரை அரசியல் சர்ச்சைகளில் இழுக்க வேண்டாம்.
நான் எந்த கட்சியுடனும் தொடர்பில்லாதவள். என்னை என் நடிப்பால் மட்டுமே அறிய வேண்டும். அவமதிப்பை எப்போதும் கண்டிப்பேன்" என்று கண்டனம் தெரிவித்தார்.
நயினார் நாகேந்திரன் பின்னர் வருத்தம் தெரிவித்தார். "வாய் தவறி பேசிவிட்டேன். யாரையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை" என்று விளக்கினார். இந்த சம்பவம் அரசியல் கட்சிகளிடையேயும், பெண் தலைவர்களிடையேயும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.
மேலும், பிப்ரவரி 2026-இல் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தை அணுகியது பரபரப்பை அதிகரித்தது. சங்கீதா மனுவில், விஜய் ஒரு நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாகக் குற்றம்சாட்டியதால், பலரும் திரிஷாவுடன் தொடர்புபடுத்தினர்.
இதனிடையே, சென்னையில் ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் விஜயும் திரிஷாவும் ஒரே காரில் வந்து ஜோடியாக பங்கேற்ற வீடியோ வைரலானது. இது ரசிகர்களிடையே அதிருப்தியையும், சர்ச்சையையும் தீவிரப்படுத்தியது. சில நடிகைகள் சங்கீதாவுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
கணவருக்கு நடிகையுடன் தொடர்பு என மனைவி கூறிவிட்டார். அது உண்மையா இல்லையா என்பதை தெளிவுப்படுத்த வேண்டியது விஜய்யின் கடமையாகும். அவர் சினிமா நடிகராக மட்டும் இருந்திருந்தால் இது அவரது தனிப்பட்ட விவகாரம் என கடந்து சென்றுவிடலாம். ஆனால் அவர் அரசியலுக்கு வந்துள்ளார். முதல்வராக ஆசைப்படுகிறார். அவரை நிறைய இளைஞர்கள் அவரை காட்பாதராக நினைக்கிறார்கள். அவர்களுக்கு விஜய் முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்த நிலையில்தான் அனைத்து வதந்திகளுக்கும் விஜய் விளக்கம் அளித்து விரைவில் அறிக்கை வெளியிடுவார் என சொல்லப்படுகிறது. இந்த அறிவிப்பு வந்து 2 மணி நேரமாகிறது. இன்னும் எந்த அறிவிப்பும் வரவில்லை.
-
Mayor பிரியா - தவெக MLA பல்லவி மோதல்.. மேயர் vs எம்எல்ஏவில் பெரியவர் யார்? சட்டம் சொல்வது என்ன? -
விஜய்க்கு பவுன்சர் பாதுகாப்பு ஏன்? எம்ஜிஆர் 5 பேரை வச்சிருந்தாரே! அதிமுக இன்பதுரையை மடக்கிய சரவணன் -
விஜய்க்கு 25 நாள் ஆச்சு.. முதல் ஒப்பந்தம்.. 3 இடத்தில் 3 மெகா திட்டம்.. L&T நிறுவனம் ரூ.18600 கோடி முதலீடு! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
அதிகாலை 7 மணிக்குள் கள ஆய்வு பண்ணுங்க.. விஜய் அசத்தல்! மாநகராட்சி ஆணையர்களுக்கு அரசு உத்தரவு -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
“திருடப்பட்ட ஹார்ட் டிஸ்க்குகள்.. யாரும் தப்பிக்க முடியாது”.. அமைச்சர் CTR நிர்மல்குமார் உறுதி!












Click it and Unblock the Notifications