சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"வட்ட கிணறு.. வத்தாத கிணறு சார்.." வாக்குசாவடியை காணவில்லை என புகாரளித்த மக்கள்.. சென்னையில் ஷாக்!

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் வாக்குசாவடியை காணவில்லை என்று வாக்காளர்கள் புகார் வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழக சட்டசபை தேர்தல் விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கிறது. காலை 7 மணியில் இருந்து மக்கள் ஆர்வமாக வாக்களித்து வருகிறார்கள். கடந்த தேர்தலை விட இந்த முறை மக்கள் அதிகாலையிலே கூட்டமாக வந்து வாக்களிக்க லைனில் நின்றனர்.

வீட்டிலிருந்து நீலாங்கரை வாக்குச் சாவடிக்கு சைக்கிளில் வந்து வாக்களித்த நடிகர் விஜய்! வீட்டிலிருந்து நீலாங்கரை வாக்குச் சாவடிக்கு சைக்கிளில் வந்து வாக்களித்த நடிகர் விஜய்!

போக போக வெயில் வரும் என்பதால் அதிகாலையிலேயே வாக்களிக்க மக்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். அதே சமயம் பல்வேறு வாக்கு சாவடிகளில் மக்கள் பல்வேறு காரணங்களால் வாக்களிக்க முடியாமல் கஷ்டப்பட்டு வருகிறார்கள்.

அறிகுறி

அறிகுறி

இன்று காலையில் இருந்து கொரோனா அறிகுறி இருந்த பலர் வாக்களிக்க அனுமதிக்கப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டனர். உடல் வெப்பநிலை சோதனை செய்யப்பட்ட பின்பே மக்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படுகிறார்கள். உடல் வெப்பநிலை அதிகமாக இருக்கும் மக்கள் பலர் காலையில் இருந்து வாக்களிக்க அனுமதிக்கப்படாமல் திருப்பி அனுப்பப்படுகிறார்கள்.

பூத் சிலிப்

பூத் சிலிப்

அதேபோல் சில தொகுதிகளில் பூத் சிலிப் இல்லாத நபர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படவில்லை. பூத் சிலிப் இல்லை என்றாலும் வாக்களிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் கூறி இருந்தது. ஆனாலும் சில தொகுதிகளில் பூத் ஸ்லிப் இல்லாதவர்களுக்கு வாக்களிக்க அனுமதி அளிக்கப்படாதால் சர்ச்சை எழுந்தது.

காணவில்லை

காணவில்லை

இப்படி பல பிரச்சனைகள் நிலவி வரும் நிலையில் சென்னையில் ஒரு வாக்குசாவடியையே காணவில்லை என்று மக்கள் புகார் வைத்துள்ளனர். சோழிங்கநல்லூர் தொகுதியில் வாக்குச்சாவடி 266ஐ காணவில்லை. சோழிங்கநல்லூர் ஜார்ஜ் பள்ளியில் அமைய வேண்டிய வாக்குச்சாவடி 266ஐ காணவில்லை என்று வாக்காளர்கள் புகார் வைத்துள்ளனர்.

புகார்

புகார்

இங்கு அமைய வேண்டிய வாக்குச்சாவடி எதோ சில காரணங்களாக அமைக்கப்படவில்லை. இதனால் இங்கு வாக்களிக்க வந்த மக்கள் ஏமாற்றத்தோடு திரும்பி சென்றனர். மாறாக வாக்குச்சாவடி எண் 266 இடம்மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஒக்கியம் துரைப்பாக்கம் அரசு பள்ளியில் இந்த வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

English summary
Tamilnadu assembly elections: Chennai people complaints Election commission on a missing polling booth,.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X