சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழக சட்டசபை தேர்தல்.. வாக்களிக்க போறீங்களா? இதை ஒரு டைம் படிச்சிடுங்க.. ரொம்ப முக்கியம்!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் வாக்களிக்க போகும் நபர்களுக்கு இந்த முறை சில முக்கியமான விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளது . கொரோனா காலம் என்பதால் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகளுக்கு தற்போது ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. காலை 7 மணியில் இருந்து இரவு 7 மணி வரை வாக்கு பதிவு நடக்கிறது. தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

Tamilnadu assembly elections: What are the rules voters should follow at the polling booth?

வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இன்று வாக்களிக்க செல்லும் மக்கள் பின்வரும் விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.

1. வாக்காளர்கள் முகக்கவசம் அணிந்து, தனிநபர் இடைவெளியை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். முக கவசம் இல்லாதவர்களுக்கு அனுமதி இல்லை .

2. வாக்காளர்கள் எல்லோருக்கும் தெர்மல் ஸ்கேன் செய்யப்படும். உடல் வெப்பநிலை அதிகம் இருந்தால் அவர்கள் 6 மணி வரை வாக்களிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

3. வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என்றால் வாக்களிக்க முடியாது.

4. பூத் சிலிப் இல்லை என்றாலும் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தாலே, வாக்காளர் அடையாள அட்டையை காண்பித்து வாக்களிக்கலாம்.

5. வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் மற்ற சில அரசு ஆவணங்களை காண்பித்து வாக்களிக்க முடியும்.

6. ஆவணங்கள் விவரம் - ஆதார், மக்கள் தொகை கணக்கிட்டு ஸ்மார்ட் கார்ட், பாஸ்போட்,புகைப்படத்துடன் வங்கி, அஞ்சலகக் பாஸ்புக், லைசன்ஸ், ரிட்டயர்மெண்ட் அட்டை , மத்திய மாநில அரசு ஊழியர்களின் ஐடி கார்ட், எம்எல்ஏ, எம்பி அடையாள அட்டை, என்ஆர்ஐ வாக்காளர்கள் தங்களின் விசா, தொழிலாளர் நல அமைச்சக மருத்தவ காப்பீடு அட்டை, தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட ஐடி கார்ட் ஆகியவற்றை காண்பித்து வாக்களிக்க முடியும்.

7. போன், டேப், லேப்டாப் எடுத்து செல்ல தடை.

8. வாக்காளர்கள் கட்சி கொடி எடுத்து செல்ல தடை.

9. காலை 7 மணியில் இருந்து இரவு 7 மணி வரை வாக்கு பதிவு நடக்க உள்ளது. கடைசி 1 மணி நேரம் கொரோனாவில் பாதிக்கப்பட்டவர்கள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

English summary
Tamilnadu assembly elections: What are the rules voters should follow at the polling booth today ?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X