• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

'இளம் தோழர்களே,முதல்வர் தனிப்பிரிவில் குவியும் மனுக்களை கண்டு மனம் கனக்கிறது..' வெ.இறையன்பு உருக்கம்

Google Oneindia Tamil News

சென்னை: மாவட்ட அளவில் மனு அளித்துத் தீர்வு கிடைக்காததால் குக்கிராமங்களில் இருந்து கோட்டையை நோக்கி பொதுமக்கள் புறப்படுவதைக் கண்டால் மனம் கனக்கிறது என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் வெ இறையன்பு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும் மாவட்ட அளவிலான பிரச்சினைகள் மாவட்ட அளவிலேயே தீர்க்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மாவட்ட அளவிலான பிரச்சினைகளை அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் முறையாகத் தீர்க தவறுவதால் முதல்வரின் தனிப்பிரிவுக்குத் தினசரி 10,000க்கும் மேற்பட்ட மனுக்கள் குவிகிறது.

இந்நிலையில், மாவட்ட அளவிலான பிரச்சினைகள் மாவட்ட அளவிலேயே தீர்க்கப்பட வேண்டும் எனத் தலைமைச் செயலர் வெ.இறையன்பு கைப்பட கடிதம் எழுதியுள்ளார்.

'அதிமுக-பாமக கூட்டணி முறிந்தது..' 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டி.. பாமக அறிவிப்பு'அதிமுக-பாமக கூட்டணி முறிந்தது..' 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டி.. பாமக அறிவிப்பு

மனுக்கள் குவிகிறது

மனுக்கள் குவிகிறது

அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் இளம் தோழர்களே எனத் தொடங்கும் வெ இறையன்பு எழுதியுள்ள கடிதத்தில், "அரசின் நடவடிக்கைகளுக்குப் புத்துயிர் பாய்ச்ச வேண்டும் என்ற அடிப்படையில் உங்களை நியமித்திருக்கிறது தமிழ்நாடு அரசு. இன்று முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு மனுக்கள் வந்து குவிந்தவண்ணம் இருப்பதை நான் காண்கிறேன். 'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' என்ற திட்டத்தின் மூலம் பெறப்பட்ட அனைத்து மனுக்கள் மீதும் 100 நாட்களில் எடுத்த நடவடிக்கைகளையும் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கப்பட்ட அணுகுமுறைகளையும் கண்டு மக்கள் அளவுகடந்த நம்பிக்கையின் அடிப்படையில் இங்குக் குவிகிறார்கள்

'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்'

'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்'

'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' என்பது சிறப்புத் திட்டம் போர்க்கால அடிப்படையில் அலுவலர்கள் அந்த மனுக்களை அணுகியதால் அத்தனை மனுக்களுக்கும் விடிவு கிடைத்தது. அதே போன்று அனைத்து நேரங்களிலும் நாம் செயல்படுவது சாத்தியமில்லை. ஒரே நாளில் பத்தாயிரம் மனோ வந்து குவிகின்றன. முத்துக்குளிக்க மூச்சுப்பிடிப்பு அவன் போலவே எல்லா நேரங்களிலும் செயல்பட இயலாது. இந்த மனுக்கள் ஏன் இங்கு வந்து குவிகின்றன என்பதை நாம் சிந்திக்க வேண்டும்

கோட்டையை நோக்கிப் புறப்படுகின்றனர்

கோட்டையை நோக்கிப் புறப்படுகின்றனர்

மாவட்ட அளவில் பிரச்சினைகளைத் தீர்க்காத காரணத்தினால் முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு நாள் ஒன்றுக்கு 10,000க்கும் மேலான மனுக்கள் குவிகின்றன. மாவட்ட அளவில் மனு அளித்துப் பொறுத்துப் பார்த்து குக்கிராமங்களில் இருந்து கோட்டையை நோக்கிப் புறப்படுகின்றனர். பொதுமக்கள் கனவுகள் நிறைந்த கண்களோடும், கவலைகள் நிறைந்த இதயத்தோடும், அவர்கள் காத்திருப்பதைப் பார்க்கும் போது மனம் கனக்கிறது.

பட்டா மாற்றம்

பட்டா மாற்றம்

'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' திட்டத்திலும் மனுக்களின் மீதான நடவடிக்கைகளை முடுக்கி விட்டவர்கள் நீங்கள் தான். 'மூன்று மாதங்களாகப் பட்டா மாற்றம் நடவடிக்கை எடுக்கப்படவில்லை' என்று எனக்கு அனுப்பப்பட்ட குறுஞ்செய்தியைத் தொடர்புடைய மாவட்ட மாவட்ட ஆட்சியரைத் தொடர்பு அனுப்பியதும் படபடவென நடந்தது பட்டா மாற்றம். படித்து பட்டம் பெற்ற போது கூட அவ்வளவு மகிழ்ந்து இருக்க மாட்டார்

  ஒரே வீட்டில் இரண்டு IAS அதிகாரிகள் | Irai Anbu IAS Unknown Facts
  இனிவோடும் பணிவோடும்

  இனிவோடும் பணிவோடும்

  மாவட்ட நிர்வாகம் மக்களுடைய பிரச்சினைகளை மாவட்ட அளவிலேயே துரிதமாகத் தீர்ப்பதற்கு முனைய வேண்டும். முனைப்பாகவும் இனிவோடும் பணிவோடும் செயல்பட்டால் பொதுமக்கள் தலைமைச் செயலகத்தின் கதவுகளைத் தட்ட வேண்டிய தேவை எழாது. இதை மனதில் கொண்டு அனைத்து அலுவலர்களுக்கும் இதுபற்றிய விழிப்புணர்வை நீங்கள் ஏற்படுத்துவதோடு, தலைமைச் செயலர் உடைய கடிதத்தைப் படிக்கிற அதை ஆர்வத்துடன் பொதுமக்கள் அளிக்கும் அந்த மனுவையும் படிப்பதில் நீங்களே முன்மாதிரியாக இருக்கவேண்டும்

  இலக்குகளை எட்டுவது மட்டுமில்லை

  இலக்குகளை எட்டுவது மட்டுமில்லை

  இலக்குகளை அடைவது மட்டுமல்ல மக்கள் இதயங்களைக் குளிர் இருப்பதும் அரசுப் பணியா பணியின் ஓர் அம்சமே. அதிக மனுக்களைத் தீர்த்து வைக்கிற மாவட்ட ஆட்சியருக்குக் கேடயங்கள் வழங்குவதை விடக் குறைவான மனுக்களைத் தலைமைச் செயலகத்திற்கு எந்த மாவட்டத்தில் இருந்து வருகிறதோ அந்த மாவட்டத்திற்கு நடவடிக்கைகளை நடைமுறையைக் கொண்டுவர அளவுக்கு உயர உயரப் பறக்கும் பறவையைப் போல உங்கள் செயல்பாடுகள் இருக்க வேண்டும்" என்று அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்,

  English summary
  Tamilnadu chief secretary irai anbu latest letter to all disctist collectors. irai anbu latest news.
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X