ஜிஎஸ்டி.. நிர்மலா சீதாராமனை சந்தித்த முதல்வர்! கூடவே வந்த பிடிஆர்! என்ன புத்தகம் கொடுத்தார் தெரியுமா
சென்னை: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு நடத்தினார். பல்வேறு முக்கியமான கோரிக்கைகளை முதல்வர் ஸ்டாலின் இந்த சந்திப்பில் வைத்தார்.
முதல்வர் ஸ்டாலின் டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த 3 நாள் பயணத்தில் அவர் பல்வேறு தலைவர்களை சந்திக்கிறார். நேற்று பிரதமர் மோடியை அவர் சந்தித்தார்.
அதோடு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் முதல்வர் ஸ்டாலின் சிறிய சந்திப்பு ஒன்றையும் நடத்தினார்.

14 கோரிக்கை
முதல்வர் ஸ்டாலின் இந்த சந்திப்பில் நேற்று ஜிஎஸ்டி தொடர்பான 14 முக்கியமான கோரிக்கைளை பிரதமர் மோடியிடம் வைத்தார். முக்கியமாக ஜிஎஸ்டி நிலுவை தொகை குறித்து முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைத்தார். இந்த நிலையில்தான் இன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமானுடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு நடத்தினார். சுமார் 20 நிமிடங்கள் இவர்கள் ஆலோசனை நடத்தினர்.

ஸ்டாலின் நிர்மலா சீதாராமன்
தமிழ்நாடு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இந்த சந்திப்பில் உடன் இருந்தார். இந்த சந்திப்பில் தமிழ்நாடு அரசு சார்பாக கோரிக்கைகள் அடங்கிய முக்கியமான அறிக்கை ஒன்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் அளிக்கப்பட்டது. இந்த சந்திப்பில் தமிழ்நாடு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் உடன் இருந்தார். தமிழ்நாடு நிதி நிலை பற்றி இவர்கள் ஆலோசனை செய்தனர்.

ஜிஎஸ்டி
அதேபோல் பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்தும் இவர்கள் ஆலோசனை செய்தனர். ஜி.எஸ்.டி நிலுவைத் தொகையை உடனடியாக விடுவிக்க கோரி நிர்மலா சீதாரமனிடம் முதல்வர் வலியுறுத்தினார். மத்திய அரசு 38 பிரிவுகளில் கீழ் ரூ.20,287 கோடி நிலுவை தொகையை தமிழ்நாடு அரசுக்கு வழங்க வேண்டும். ஜி.எஸ்.டி நிலுவை தொகை மட்டும் ரூ.9,842.58 கோடி தர வேண்டும். இது குறித்த கோரிக்கையை முதல்வர் ஸ்டாலின் வைத்தார்.

கோரிக்கை ஸ்டாலின்
மேலும் மாநிலங்களுடன் மேல் வரிகள் மற்றும் கூடுதல் கட்டணம் மூலம் வரும் வருவாயைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார். மேலும் இந்த வருடம் ஜூன் மாதத்துடன் ஜிஎஸ்டி இழப்பீடு நிறுத்தப்படுகிறது. அதன்பின் இந்த இழப்பீடு வழங்கப்படாது. ஜுன் 2022-க்குப் பின்பும் ஜி.எஸ்.டி. இழப்பீட்டை தொடர்ந்து வழங்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார் .

புத்தகம்
பொதுவாக தலைவர்களை சந்திக்கும் போது அவர்களிடம் புத்தகங்களை வழங்குவது முதல்வர் ஸ்டாலின் வழக்கம். பொன்னாடை கொடுக்கும் வழக்கத்தை தவிர்த்து புத்தகம் வழங்கி வருகிறார். இந்த நிலையில் இன்று சந்திப்பின்போது பொருநை நாகரிகம் குறித்த புத்தகத்தை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு வழங்கினார் முதல்வர் ஸ்டாலின். தமிழர்களின் வரலாறு, நாகரீகம் பற்றிய புத்தகம் ஆகும் இது.
-
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்?












Click it and Unblock the Notifications