"ஆ.. கருப்பு-சிவப்பு".. சொல்லி வச்ச மாதிரி வாக்களிக்க வந்த விஜய்-அஜித்.. பின்னணியில் ஏதும் மெசேஜா!
சென்னை: நடிகர் விஜய் மற்றும் அஜித் இருவரும் இன்று வாக்கு செலுத்த வந்த விதம் இணையம் முழுக்க வைரலாகி வருகிறது.. இவர்கள் தங்கள் ரசிகர்களுக்கு மறைமுக மெசேஜ் ஒன்றை அனுப்பியதாக நெட்டிசன்கள் சந்தேகம் அடைந்துள்ளனர்.
தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நடைப்பெற்று வருகிறது. தமிழகத்தில் அனைத்து சட்டசபை தொகுதிகளுக்கு தற்போது ஒரே கட்டமாக தேர்தல் நடைப்பெற்று வருகிறது. . காலை 9 மணி நிலவரப்படி 13.8% வாக்குப்பதிவாகி உள்ளது.
மக்கள் காலையில் இருந்து ஆர்வமுடன் வாக்களித்து வருகிறார்கள். முன்பை விட இந்த முறை அதிக பேர் வாக்களிக்க ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

விஜய்
தமிழக சட்டசபை தேர்தலில் திரைபிரபலங்கள் பலரும் காலையிலேயே வந்து வாக்களித்தனர். நடிகர் அஜித் முதல் ஆளாக வந்து தேர்தலில் வாக்களித்தார். திருவான்மியூர் தொகுதியில் முதல் ஆளாக வாக்களித்தார். லைனில் நின்று வாக்களித்துவிட்டு, ஆர்ப்பாட்டம் இன்றி திரும்பி சென்றார்.

அஜித்
இன்னொரு பக்கம் நடிகர் விஜய்யும் காலை 9 மணி அளவில் நீலாங்கரையில் வாக்களித்தார். நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடிக்கு அவர் சைக்கிளை ஒட்டியபடி வந்து வாக்களித்தார். பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டிக்கும் வகையில் விஜய் இப்படி செய்திருக்கலாம் என்று கூறுகிறார்கள்.

வைரல்
இந்த நிலையையில் விஜய், அஜித் இரண்டு பேருமே வாக்கு பதிவு செய்ய வந்த விதம் பெரிய அளவில் வைரலாகி வருகிறது. நடிகர் அஜித் கருப்பு சிவப்பு மாஸ்க் அணிந்து இருந்தார். அதேபோல் நடிகர் விஜய் கருப்பு சிவப்பு சைக்கிளில் வந்தார். இரண்டு பேருமே கருப்பு சிவப்பை குறியீடு போல பயன்படுத்தியது வைரலாகி உள்ளது.

கலர்
இவர்கள் இருவரும் கருப்பு சிவப்பை முன்னிலைப்படுத்தியதை வைத்து இணையத்தில் பலரும் விவாதம் செய்து வருகிறார்கள். அஜித் மிகவும் சென்ஸிபிளான நபர்.. அவர் கண்டிப்பாக கவனிக்காமல் கருப்பு சிவப்பு மாஸ்க் அணிந்து இருக்க மாட்டார். விஜயும் அரசியல் அறிவு உள்ளவர்.

குறியீடு
அவரும் இப்படி வெறுமனே கருப்பு சிவப்பு சைக்கிளை ஓட்டி வந்து இருக்க மாட்டார் இவர்கள் இருவரும் இப்படி ஒன்றாக கருப்பு சிவப்பில் வந்ததற்கு பின் கண்டிப்பாக ஏதாவது குறியீடு, மெசேஜ் இருக்கும் என்று நெட்டிசன்கள் ட்வீ ட் செய்து வருகிறார்கள். இவர்கள் ஒருவேளை திமுகவிற்கு சப்போர்ட்டோ என்று நெட்டிசன்கள் பலர் கேள்வி எழுப்பி உள்ளனர்.

மெசேஜ்
அதிலும் விஜய் சைக்கிளில் வந்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். பெட்ரோல் விலையை கண்டிக்கும் வகையில் விஜய சைக்கிள் ஒட்டியுள்ளார் என்று கூறப்பட்டு வரும் நிலையில், அவரின் சைக்கிள் கலரும் தற்போது விவாத பொருளாகி உள்ளது. இவர்கள் தங்கள் அரசியல் நிலைப்பாட்டை மறைமுகமாக சொல்வதாக நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள்.