சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இது என்ன புதுசா.. இதுவரைக்கும் இப்படி நடந்ததே இல்லையே? ஆர்.என் ரவி செய்த சம்பவம்.. ஒரே குழப்பம்!

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற சம்பவம் ஒன்று பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.

இந்துத்துவா குறித்தும், சனாதனம் குறித்தும் ஆளுநர் ஆர். என் ரவி பேசுவது தமிழ்நாடு அரசியலில் புயலை கிளப்பி உள்ளது. சமீப நாட்களாக தமிழ்நாடு ஆளுநர் ஆர். என் ரவி பல்வேறு மேடைகளில் தமிழ்நாடு வரலாற்று, கலாச்சாரம், பழமை, இந்துத்துவா, சனாதன தர்மம் என்று பல விஷயங்கள் பற்றி பேசி வருகிறார்.

வரலாற்று ரீதியாக சில தவறான விஷயங்களை இவர் பேசுவதாக புகார்கள் வைக்கப்பட்டு வருகின்றன. இதுதான் சனாதன தர்மம். . இந்தியா முழுக்க நதிகளை வணங்கும் வழக்கம் உள்ளது. அது தமிழ்நாட்டில் உள்ளது. இதுதான் நம்முடைய கலாச்சாரம். இதுதான் சனாதன கலாச்சாரம் என்றெல்லாம் குறிப்பிட்டு வருகிறார்.

அவசர சட்டம் காலாவதியானது.. நிலுவையில் உள்ள மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிப்பாரா?அவசர சட்டம் காலாவதியானது.. நிலுவையில் உள்ள மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிப்பாரா?

விமர்சனம்

விமர்சனம்


இந்திய என்பது மதசார்பற்ற நாடு. ஆனால் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் பதவி ஏற்று இருக்கும் ஆளுநர் ஒருவர் மத ரீதியாக பேச கூடாது. மத ரீதியாக கருத்துக்களை வைக்க கூடாது. ஆனால் ஆளுநர் ஆர். என் ரவி மதம் தொடர்பாக பல்வேறு கருத்துக்களை வைத்து வருகிறார். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், நதிகளை வழிபடுவது இந்த பாரதம் முழுக்க இருக்கும் வழக்கம். நாடு முழுக்க இந்த பழக்கம் உள்ளது. சில நதிகளை நாம் தினமும் பிரார்த்தனை செய்கிறோம். இது ஒன்றும் புதிது அல்ல. இது பாரதத்தில் பழங்காலமாக இருக்கும் பாரம்பரியம்.நண்பர்களே தமிழ் மிகவும் பழமையான மொழி.

தமிழ்

தமிழ்

தமிழ் அழகான மொழி. தமிழ் மிகவும் சக்திவாய்ந்த மொழி. தமிழ் மக்கள் போல தமிழ் பேச வேண்டும் என்பது எனது விருப்பம் ஆகும். ஒருநாள் அவர்களை போல தமிழ் பேச வேண்டும். அவர்களை போல உச்சரிக்க வேண்டும். நாம் பாலாற்றை வணங்க இங்கே வந்து இருக்கிறோம். இந்தியா முழுக்க நதிகளை வணங்கும் வழக்கம் உள்ளது. அது இங்கும் உள்ளது. இதுதான் நம்முடைய கலாச்சாரம். இதுதான் சனாதன கலாச்சாரம், என்று ஆளுநர் ரவி தனது உரையில் குறிப்பிட்டார். அவரின் இந்த பேச்சு கடுமையான விமர்சனங்களை சந்தித்தது.

பிறந்தநாள்

பிறந்தநாள்

அரசியலமைப்பு பதவியில் இருக்கும் ஒருவர் இப்படி பேசுவது கடும் விமர்சனங்களை சந்தித்தது. இந்த நிலையில்தான் சென்னையில் ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற சம்பவம் ஒன்று பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. அதன்படி மகாகவி பாரதியாரின் பிறந்தநாளை ஆளுநர் ரவி கொண்டாடி இருக்கிறார். இதில் என்ன இருக்கிறது என்று கேட்கலாம். ஆனால் ஆளுநர் ரவி மகாகவி பாரதியாரின் கார்த்திகை மாதம் மூல நட்சத்திர பிறந்தநாளை கொண்டாடி இருக்கிறார்.

ஆளுநர் ரவி

ஆளுநர் ரவி

டிசம்பர் 11-ம் தேதியன்று மகாகவி பாரதியாரின் பிறந்தநாள். ஆனால், நவம்பர் 27-ம் தேதி ராஜ்பவனில், பாரதியாரின் நட்சத்திரப் பிறந்தநாளைக் கொண்டாடியிருக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி. இதுவரை இப்படி எந்த ஆளுநரும் செய்தது இல்லை. ஆளுநர் மாளிகையில் இப்படி எல்லாம் நடந்ததே இல்லை. அரசியல் தலைவர்களும் செய்தது இல்லை. தீவிர இந்துத்துவா தலைவர்களும் இப்படி கொண்டாடியது இல்லை. ஆனால் வழக்கத்துக்கு மாறாக நட்சத்திர பிறந்தநாளை கொண்டாடியிருக்கிறார் ஆளுநர் ரவி.

 குழப்பம்

குழப்பம்

இதுதான் தற்போது விமர்சனங்களை சந்தித்துள்ளது. இந்துக்களில் சிலர் இப்படி நட்சத்திர நாளை வைத்து பிறந்தநாள் கொண்டாடுவது வழக்கம். ஆளுநர் ரவி இப்படி செய்து இருப்பது விமர்சனங்களை சந்தித்து உள்ளது. இது தொடர்பாக ஆளுநர் மாளிகை செய்துள்ள ட்விட்டில், மகாகவி பாரதியாரின் கார்த்திகை மாதம் மூல நட்சத்திர பிறந்தநாளான இன்று அவரது திருஉருவப்படத்திற்கு ஆளுநர் ரவி மலர் தூவி மரியாதை செலுத்தினார். பாரத மாதாவின் மகத்தான மகன் நம்மை என்றும் ஊக்குவிப்பான். , என்று குறிப்பிட்டு உள்ளார்.

English summary
Tamilnadu Governor R N Ravi celebrates Bharathiyar Nachathira birthday in Raj Bhavan.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X