Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

3ஆவது அலை அச்சுறுத்தல்!.. தமிழகத்தில் இன்று 7ஆவது கட்ட கொரோனா மெகா தடுப்பூசி முகாம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் இன்று 7ஆவது கட்ட மெகா கொரோனா தடுப்பூசி முகாம் தொடங்கியது.

தமிழகத்தில் கடந்த செப்டம்பர் 12 ஆம் தேதி முதல் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. இதில் தமிழகத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மையங்களில் தடுப்பூசி போடப்பட்டு வந்தது. 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.

Tamilnadu is conducting its 7 th vaccine camp today

அதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் மெகா கொரோனா தடுப்பூசி முகாமை வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்த தமிழக அரசு முடிவு செய்தது. அதன்படி தமிழகம் முழுவதும் கடந்த செப்டம்பர் 12ம் தேதி 40 ஆயிரம் இடங்களில் 28.91 லட்சம் பேருக்கும், 19ம் தேதி 20 ஆயிரம் இடங்களில் 16.43 லட்சம் பேருக்கும், 26ம் தேதி 23 ஆயிரங்களில் 25.04 லட்சம் பேருக்கும், கடந்த 3ம் தேதி 20 ஆயிரம் இடங்களில் 17.19 லட்சம் பேருக்கும், கடந்த 10ம் தேதி 32 ஆயிரம் இடங்களில் 22.52 லட்சம் பேருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்த முகாமுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கடந்த வாரத்துக்கு முந்தைய வாரம் ஆயுத பூஜை உள்ளிட்ட தொடர் விடுமுறை என்பதால் அந்த வாரம் தடுப்பூசி முகாம் நடத்தப்படவில்லை. அதற்கு பதிலாக கடந்த சனிக்கிழமை நடத்தப்பட்டது. அசைவ பிரியர்கள் மற்றும் மதுப் பிரியர்களுக்காக ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டு வந்த முகாம் கடந்த வாரம் முதல் சனிக்கிழமை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் 7ஆவது கட்ட தடுப்பூசி முகாம் இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. இந்த முகாம் இரவு 7 மணி வரை நடைபெறுகிறது. கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் பொருட்டு 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு இந்த தடுப்பூசி முகாம்கள் நடைபெறுகிறது. தடுப்பூசி போடும் பணி தொடங்கிய முதல் 9 மாதங்களில் 100 கோடி டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இன்றைய தினம் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெறவுள்ளது. இதுவரை முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் 69 சதவீதம் பேர் ஆவார். அது போல் 2ஆவது தவணை தடுப்பூசியை 29 சதவீதம் பேர் செலுத்திக் கொண்டனர்.

தற்போது 44 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. 2ஆவது தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டியவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+