முழு லாக்டவுன் நோக்கி தமிழகம்? அவசரப்படுட்டாங்களே மக்கள்! தென்னாப்பிரிக்காவில் நடந்தது மறந்துடுச்சா?
சென்னை: தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய லாக்டவுன் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளது. பல்வேறு தளர்வுகள் இருப்பதை பயன்படுத்திக்கொண்டு மக்கள் அதிகம் வெளியே சுற்றும் போக்கு அதிகரித்துள்ளது.
கொரோன கேஸ்கள் 9 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில் தமிழ்நாட்டில் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு ஊரடங்கு அமலில் இருக்கும் என்று அரசு தெரிவித்துள்ளது.
இந்த நேரத்தில் உணவகம், தியேட்டர் அனுமதிக்கப்படவில்லை. தேவையின்றி வெளியே செல்ல கூடாது. மாறாக பால் விநியோகம், மருத்துவம், பத்திரிக்கை, பாதுகாப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் இரவில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாட்டில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழுஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு லாக்டவுன்
தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய லாக்டவுன் இருந்தாலும் மக்கள் இதை பயன்படுத்திக்கொண்டு அதிக அளவில் வெளியே செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. கூட்டம் கூட்டமாக ஓமிக்ரான் கொரோனாவே இல்லை என்று எண்ணிக்கொண்டு சுற்றும் போக்கு அதிகரித்து உள்ளது. இரவு நேர லாக்டவுன் காரணமாக இரவில் மக்கள் கூட்டம் குறைந்து உள்ளதை ஒப்புக்கொள்ளலாம். ஆனால் பகல் நேரத்தில்.. எனக்கு என்ன கவலை என்று எண்ணிக்கொண்டு மக்கள் அதிக அளவில் வெளியே சுற்றுகிறார்கள்.

இரண்டு அலைகள்
தமிழ்நாட்டில் ஏற்கனவே ஏற்பட்ட இரண்டு அலைகளுக்கு மிக முக்கிய காரணம் பேனிக் பையிங். அதாவது ஞாயிறு லாக்டவுன் காரணமாக சனி, வெள்ளிக்கிழமைகளில் அதிக அளவில் பொருட்களை வாங்குவது. மார்க்கெட்டுகளில் சனிக்கிழமைகளில் குவிந்து பொருட்களை வாங்குவது. இதனால் கூட்டம் அதிகரித்து அதுவே கொரோனா கேஸ்கள் உயர வழி வகுக்கும். சென்னையில் முதல் அலையில் அதிக கேஸ்கள் ஏற்பட கோயம்பேடு மார்க்கெட் முக்கிய ஹாட் ஸ்பாட்டாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

மீண்டும்
மக்கள் மீண்டும் அதே தவறை இந்த முறையும் செய்ய தொடங்கி உள்ளனர். மக்களின் நலன் கருதிதான் லாக்டவுனில் நிறைய கட்டுப்பாடுகளை அரசு தளர்த்தி உள்ளது. மிக குறைவான கட்டுப்பாடுகளுடன்தான் இந்த முறை லாக்டவுன் போடப்பட்டுள்ளது. ஆனால் இதையே பயன்படுத்திக்கொண்டு மக்கள் அதிக அளவில் வெளியே செல்வது கொரோனா உயரும் அபாயத்தை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா நோய்தொற்று பரவலை கட்டுபடுத்த தமிழக அரசு சார்பில் ஞாயிற்றுகிழமைகளில் முழு ஊரடங்கு அமல் படுத்தப்படுகிறது இதன் காரனமாக வழக்கம்போல் ஞாயிற்றுகிழமைகளில் இயங்கி வந்த கோயம்பேடு காய்கறி சந்தை தமிழக அரசின் ஆணைக்கினங்க ஞாயிற்றுகிழமை விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.

செம கூட்டம்
அதன் காரணமாக இன்று அதிகாலை ஐந்து மணிமுதல் மதியம் 1 மணிவரை மட்டுமே இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்று மார்க்கெட்டில் பெருமளவில் கூட்டம் காணப்பட்டது. ஆயிரக்கணக்கானோர் ஒரே இடத்தில் கூடி காய்கறிகளை வாங்கிக்கொண்டு இருந்தனர். மேலும் நாளைய தினம் தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட உள்ள நிலையில் சேலம் மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தைகளில் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான காய்கறிகளை வாங்க அதிகளவில் குவிந்தனர்.

அள்ளும் கூட்டம்
காய்கறிகளின் விலையில் மாற்றம் ஏதும் இல்லாத பட்சத்திலும் கூட பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான காய்கறிகளை வாங்க சமூக இடைவெளியை மறந்து ஒருவரை ஒருவர் முந்தி அடித்ததால் அப்பகுதிகளில் இந்நோய் தொற்று பரவும் சூழல் ஏற்பட்டது. ஆனால் பொதுமக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த மாநகராட்சி அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இதேபோல் இறைச்சி கடைகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதின. இன்னொரு பக்கம் திருச்சி குழுமணி சாலையில் உள்ள காசிவிளங்கி மீன் சந்தையில் மீன், இறைச்சிகள் வாங்க குவிந்தனர்.

காசிமேடு
சமூக இடைவெளி இன்றியும், மாஸ்க் அணியாமலும் பொது மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. உடனடியாக சுகாதார துறை அதிகாரிகள் மேற்பார்வையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கும் நிலைக்கு கூட்டம் அதிகரித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு எதிரொலியாக நாளை இறைச்சி மார்க்கெட்கள் மீன் சந்தை மூடப்படும் என்பதால் இன்று காலையே பொதுமக்கள் காசிமேடு மீன்பிடி சந்தைக்கு படையெடுத்தனர் நோய் தொற்று பரவல் காரணமாக காசிமேடு மீன்பிடி சந்தையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு ஏற்கனவே மீன்வளத்துறை சார்பில், மாநகராட்சி சார்பிலும் சமூக இடைவெளியை பின்பற்றியும் முக கவசங்களை அணியவும் ஒலிபெருக்கிகள் மூலம் எச்சரிக்கை விடுத்து வந்தனர்.

மீன் மார்க்கெட்
இருந்தபோதிலும் இரவு ஊரடங்கு எதிரொலியாக 5 மணி முதலே காசிமேடு மீன்பிடி துறைமுகத்திற்கு வருகைதந்து மீன்களை வாங்கி செல்கின்றனர் குறைந்த அளவிலான விசைப்படகு மட்டும் கடலுக்கு சென்று வந்ததால் மீன்களின் வரத்து கணிசமாக இருந்தாலும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் விலையை சற்று உயர்ந்து காணப்படுகிறது இருந்தபோதிலும் மீன்களின் வரத்து சங்கரா, கொடுவா, பாரை, வவ்வால் , உள்ளிட்ட மீன்கள் அதிகளவில் விற்பனைக்கு வந்துள்ளன.

முழு லாக்டவுன்
மீன்களை வாங்குவதில் அதிகம் நாட்டம் செலுத்திய மீனவர்களும் அசைவ பிரியர்களும் சமூக இடைவெளியை மறந்து மீன்களை வாங்கி சென்றனர். மக்களின் இந்த அவசர போக்கு காரணமாகவும், விதிகளை பின்பற்றாததாலும் மீண்டும் கேஸ்கள் அதிகரிக்குமா என்ற அச்சம் எழுந்துள்ளது. தென்னாப்பிரிக்காவில் ஓமிக்ரான் பரவிய போது கட்டுப்பாடுகள் போடப்பட்டது. இதனால் அங்கு கேஸ்கள் வேகமாக குறைந்து தற்போது தென்னாப்பிரிக்காவில் ஓமிக்ரான் அலை முடிந்து லாக்டவுன் தளர்வுகள் வந்துள்ளது.
Recommended Video

தென்னாப்பிரிக்கா அச்சம்
ஆனால் தென்னாப்பிரிக்காவை எடுத்துக்காட்டாக எடுத்துக்கொண்டு வீட்டிற்குள் இல்லாமல் மக்கள் அதிகமாக வெளியே சுற்றும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவை போல இந்தியாவிலும், தமிழ்நாட்டிலும் இதனால் கேஸ்கள் உச்சம் தொடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. அதோடு தமிழ்நாடு இதனால் கேஸ்கள் அதிகரித்து அரசு முழு லாக்டவுன் என்ற அஸ்திரத்தை எடுக்கும் நிலை ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. முழு லாக்டவுன் கொண்டு வரப்படாமல் இருக்க வேண்டும் என்றால் மக்கள் இப்போதே சுய கட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications