ஆளுநருக்கு கோடி கோடியாய் செலவிடும் தமிழ்நாடு.. இந்தியாவில் முதலிடம்! ரிப்போர்டால் “ஸ்டன்” ஆன பிடிஆர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆளுநர் மாளிகைக்கு அதிகம் செலவழிக்கு மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடத்தில் இருப்பதாக வெளியான தகவல் பல்வேறு கேள்விகளை எழுப்புவதாக தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்து உள்ளார்.

பிரபல தனியார் ஆங்கில இதழில் ஆளுநர்கள் மற்றும் ஆளுநர் மாளிகைக்கு அதிகம் செலவிடும் மாநிலங்களின் பட்டியல் முழு விபரத்துடன் வெளியிடப்பட்டு இருக்கிறது.

இதனை படம் எடுத்து பலரும் சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிர்ந்து பல்வேறு கருத்துக்களை வருகிறார்கள். தமிழ்நாடு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை அதை ட்விட்டரில் பதிவிட்டு கருத்து தெரிவித்துள்ளார்.

புள்ளிவிபரம்

புள்ளிவிபரம்

அந்த நாளிதழில் வெளியிட்டு இருக்கும் புள்ளி விபரம் 2 வகையாக பிரிக்கப்பட்டு உள்ளது. ஒன்று, ஆளுநருக்கு அதிகம் செலவழிக்கும் 10 மாநிலங்கள் கண்டறியப்பட்டு ஆரஞ்சு நிறத்திலும், ஆளுநர் மாளிகைக்கு அதிகம் செலவழிக்கும் 10 மாநிலங்கள் நீள நிறத்திலும் குறிப்பிடப்பட்டு, எவ்வளவு செலவிடுகிறார்கள் என்பதும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஆளுநர் மாளிகைக்கு செலவு

ஆளுநர் மாளிகைக்கு செலவு

இதில் ஆளுநர் மாளிகைக்கான செலவில் மாளிகை பராமரிப்பு, புணரமைப்பு, பூங்கா பராமரிப்பு, மின்சாரம், தண்ணீர், மேம்பாடு என அனைத்தும் அடங்கும். இதில் முதல் 10 இடங்களை பிடித்து இருக்கும் மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கிறது. கிண்டியில் உள்ள ராஜ் பவனுக்காக ஆண்டுக்கு ரூ.6.5 கோடி செலவிடப்பட்டு வருகிறது.

முதல் 5 இடம்

முதல் 5 இடம்

இதற்கு அடுத்த இடத்தில், உத்தரப்பிரதேசம் உள்ளது. அந்த மாநிலத்தில் ரூ.3.5 கோடி ஆளுநர் மாளிகைக்காக செலவிடப்பட்டு வருகிறது. 3 வது இடத்தில் ரூ.1.8 கோடி செலவழித்த மகாராஷ்டிரா உள்ளது. ரூ.80.2 லட்சம் செலவு செய்த பீகார் இதில் 4 வது இடத்திலும், ரூ.73.2 லட்சம் செலவழிக்கும் ராஜஸ்தான் இந்த பட்டியலில் 5 வது இடத்திலும் இருக்கிறது.

6 - 10 இடங்கள்

6 - 10 இடங்கள்

இந்த பட்டியலில் ரூ.72.07 லட்சம் செலவு செய்த மேற்கு வங்கம் 6 வது இடத்திலும், ரூ.38.2 லட்சம் செலவழிக்கும் கர்நாடகா இதில் 7 வது இடத்திலும் உள்ளது. ரூ.34.39 லட்சம் செலவு செய்த மேகாலயா இதில் 8 வது இடத்திலும், ரூ.30.75 லட்சம் செலவழித்து வரும் அருணாச்சல பிரதேசம் இந்த பட்டியலில் 9 வது இடத்திலும் இருக்கிறது. 10 வது இடத்தில் இருக்கும் கோவா ரூ.28.5 லட்சம் செலவழித்து உள்ளது.

ஆளுநருக்கான செலவு

ஆளுநருக்கான செலவு

ஆளுநர்களுக்கான செலவை பொறுத்தவரை, அலுவலக செலவு, உணவு, சுற்றுப்பயணம், பொழுதுபோக்கு, பராமரிப்பு என அனைத்தும் அடங்கும். இதற்காக அதிகளவில் செலவழித்த மாநிலங்களின் பட்டியலில் மேற்கு வங்கம் முதலிடத்தில் இருக்கிறது. இதற்காக ஆண்டுக்கு ரூ.1.812 கோடியை அம்மாநிலம் செலவழித்து இருக்கிறது.

தமிழ்நாடு 2வது இடம்

தமிழ்நாடு 2வது இடம்

இதற்கு அடுத்த இடத்தில், தமிழ்நாடு உள்ளது. அந்த மாநிலத்தில் ரூ.1.66 கோடி ஆளுநருக்காக மட்டும் செலவிடப்பட்டு வருகிறது. இதில் 3வது இடத்தில் ரூ.1.62 கோடி செலவு செய்த பீகார் இருக்கிறது. 4 வது இடத்தில் ரூ.1.145 கோடி செலவழித்த மகாராஷ்டிரா உள்ளது. ரூ.1.005 கோடி செலவு செய்த கர்நாடகா இதில் 5 வது இடத்தில் இருக்கிறது.

குஜராத் செலவழிக்கும் தொகை

குஜராத் செலவழிக்கும் தொகை

இந்த பட்டியலில் ரூ.93 லட்சம் செலவு செய்த ராஜஸ்தான் இதில் 6 வது இடத்திலும், ரூ.66 லட்சம் செலவழிக்கும் உத்தரப்பிரதேசம் இதில் 7 வது இடத்திலும் உள்ளது. ரூ.55 லட்சம் செலவு செய்த குஜராத் இதில் 8 வது இடத்திலும், ரூ.54.5 லட்சம் செலவழித்து வரும் அரியானா இந்த பட்டியலில் 9 வது இடத்திலும் இருக்கிறது. 10 வது இடத்தில் இருக்கும் அருணாச்சல பிரதேசம் ரூ.54 லட்சம் செலவழித்து உள்ளது.

அமைச்சர் பிடிஆர்

அமைச்சர் பிடிஆர்

இதனை ட்விட்டரில் பகிர்ந்து இருக்கும் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், "பிரண்ட்லைனில் இந்த தகவல் வெளியாகி இருக்கிறது. இதில் குறித்து மதிப்பிட முயற்சிப்போம். ஆளுநருக்கு அதிகம் செலவிடுவதில் தமிழ்நாடுதான் முதலிடம் பிடித்து இருக்கிறது என்பதை உணரவைல்லை. இது பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+