காத்திருக்கிறோம்.. விரைவில் பதிலடி கொடுப்போம்.. தமிழக போலீஸாருக்கு பயங்கரவாதிகள் தமிழில் மிரட்டல்
சென்னை: தமிழக கியூ பிரிவு போலீஸாருக்கு பயங்கரவாதிகள் தமிழில் மிரட்டல் விடுத்துள்ளனர். அதில் காத்திருக்கிறோம், விரைவில் பதிலடி கொடுப்போம் என தெரிவித்துள்ளனர்.
பயங்கரவாதிகளுக்கு இந்திய எல்லையில் நம் முப்படையினர் பதிலடி கொடுத்து அவர்களை புறமுதுக்கிட்டு ஓட செய்கின்றனர். அந்த வகையில் தமிழக போலீஸாரும் இந்த பணியை செய்து வருகின்றனர்.
ஆம், தமிழக கியூ பிரிவு போலீஸாரும், சிறப்பு புலனாய்வு துறை போலீஸாரும், பெங்களூர் கிரைம் பிரிவு போலீஸாரும் இணைந்து கடந்த ஜனவரி மாதம் பயங்கரவாத அமைப்புகளை வேட்டையாடினர்.

3 பேர் கைது
இந்த தேடுதல் வேட்டையில் 17 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அது போல் டெல்லியில் தீவிரவாதி காஜாமொய்தீன் கைது செய்யப்பட்டார். பெங்களூருவில் அவரது ஆதரவாளர்கள் 3 பேர் துப்பாக்கிகளுடன் கைது செய்தனர். இதற்கு பயங்கரவாதிகள் உடனடியாக பதிலடி போலீஸாருக்கு கொடுத்தனர்.

தலைமறைவு
அதன்படி கன்னியாகுமரியில் களியக்காவிளை சோதனை சாவடியில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் வில்சன் கடந்த ஜனவரி மாதம் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகள் என கருதப்படும் அப்துல் சமீம், தவ்பீக் ஆகியோரை போலீஸார் கர்நாடக மாநிலத்தில் தலைமறைவாக இருந்த அவர்களை கைது செய்தனர்.

மிரட்டல் கடிதம்
இந்த நிலையில் ட்விட்டரில் ஒரு அதிர்ச்சிகரமான கடிதம் ஒன்று வெளியாகியுள்ளது. அந்த கடிதம் தமிழில் வெளியாகி உள்ளது. அல்ஹந்த் என பயங்கரவாத இயக்கம் இந்த கடிதத்தை உருவாக்கி உள்ளது. அந்த இயக்கமானது டெலிகிராம் செயலி மூலம் முதலில் இந்த கடிதத்தை வெளியிட்டுள்ளது. இதையடுத்து அந்த கடிதம் ட்விட்டரில் போடப்பட்டுள்ளது.

பதிலடி கொடுப்பதாக சூளுரை
2 நவீன துப்பாக்கிகள், கையெறி குண்டுகளுக்கு மத்தியில் தமிழில் அந்த வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. அதில் டெல்லி சிறப்பு பிரிவு, கியூ பிரிவு போலீஸாரை மிகவும் அவதூறான வார்த்தைகளில் குறிப்பிட்டுள்ளனர். மேலும் நாங்கள் காத்திருக்கிறோம். விரைவில் பதிலடி கொடுப்போம் என மிரட்டல் விடுத்துள்ளனர். இதை தமிழ் தெரிந்த பயங்கரவாதிகள் வெளியிட்டிருக்கலாம் என தெரிகிறது. இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications