Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

புதுப் பெயர் பெற்ற "குடிசைமாற்று வாரியம்".. முதல்வர் வெளியிட்ட அறிவிப்பும்.. உருக்கமான பின்னணியும்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: குடிசைமாற்று வாரியம், இனி, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் எனச் செயல்படும் என்று தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார். குடிசை மாற்று வாரியம் இனி புதுப்பொலிவுடன் செயல்படும் என்று அரசு அறிவித்துள்ள நிலையில், இந்த வாரியம் எப்படி தொடங்கப்பட்டது? ஏன் தொடங்கப்பட்டது என்று உருக்கமான பிளாஷ்பேக்!

1967ல் மொத்த இந்தியாவும் தனது அரசியல் பாதையை தேடிக்கொண்டு இருந்த காலம். பல மாநிலங்களில் தேசிய கட்சியான காங்கிரஸ் வலுவாக இருந்த காலம்.. மாநில கட்சிகள் என்றால் என்ன என்று கேட்கும் அளவிற்கு எந்த மாநிலத்திலும் மாநில காட்சிகள் பெரிதாக எழுச்சி பெறாத அந்த நாட்களில் தமிழ்நாடு மட்டும் தனித்து நின்றது. தமிழ்நாட்டில் 1967ல் திராவிட முன்னேற்ற கழக தலைமையில் அறிஞர் அண்ணா முதல்வராக ஆட்சி பொறுப்பேற்றார்.

வடமாநிலங்களில் மத கலவரங்கள் உச்சத்தில் இருந்தது போல தமிழ்நாட்டிலும் ஜாதி ரீதியான மோதல்கள் ஆங்காங்கே இருந்தன. ஜாதி ரீதியான அடக்கு முறைகளுக்கு எதிராக அப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக சட்டங்கள், பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தன.

சென்னை

சென்னை

அந்த காலத்தில் சென்னையில் நடந்த சில சம்பவங்கள்தான் குடிசை மாற்று வாரியம் என்ற இமாலய திட்டத்திற்கு உரம் போட்டது. சென்னையில் குடிசை பகுதிகளில் வசித்து வந்த பிற்படுத்தப்பட்ட மக்கள் பல்வேறு கட்டங்களில் வெவ்வேறு ஜாதி ரீதியான தாக்குதல்களுக்கு ஆளானார்கள். பல குடிசைகள் 1965 தொடங்கி 70 காலகட்டங்களில் கொளுத்தப்பட்டது. குடிசை எரிப்பு நிகழ்வுகள் தமிழ்நாட்டில் மிகப்பெரிய சமூக பிரச்சனையாக இருந்த காலம் அது. திடீர் திடீரென சென்னையில் பல குடிசைகள் பற்றி எரிந்த சோகமான கால காட்டம்.

இயற்கை பேரிடர்

இயற்கை பேரிடர்

அது மட்டுமா.. சென்னையில் ஏற்பட்ட மழை, புயலில் எல்லாம் குடிசை வீடுகள் சேதம் அடைந்து மக்கள் வருடா வருடம் சாலைக்கு செல்லும் நிலை ஏற்பட்டது. ஆட்சிக்கு வந்த அண்ணா இதை பார்த்தார்.. இவர்களுக்கு வீடு கொடுக்க வேண்டுமே என்று திட்டமிட்டு.. ஒவ்வொரு முறை புயல், வெள்ளம், குடிசை எரிப்பில் வீடுகளை இழந்தவர்களுக்கு வெவ்வேறு இடங்களில் வீடுகளை கட்டிக்கொடுத்தார். தமிழ்நாடு வரலாற்றை எடுத்துக்கொண்டால்.. பொதுவாக எந்த சமூக நீதி, வளர்ச்சி திட்டம் இருந்தாலும் முந்தைய அரசு கொண்டாட வருவதை அடுத்த முதல்வர் விரிவுபடுத்துவதே வழக்கம். தமிழ்நாடு வளர்ச்சி திட்டங்கள் தேசிய அளவில் இப்போதும் பேசப்படுவதற்கு தொடர்ச்சியான இந்த மாற்றங்களே காரணம்.

உதாரணம்

உதாரணம்

உதாரணமாக காமராஜர் கொண்டு வந்த சத்துணவு திட்டத்தை எம்ஜிஆர் புதுப்பித்தார். திமுகவின் அரிசி திட்டத்தை அதிமுகவும் விரிவுபடுத்தியது. இப்படி ஒவ்வொரு திராவிட கட்சியும் மாறி மாறி வளர்ச்சி திட்டங்களை விரிவுபடுத்தியது தமிழ்நாட்டில் வரலாறு. அப்படிதான் அண்ணா இப்படி ஒவ்வொரு குடிசைகளுக்கு மாற்று வீடு கொண்டு வந்ததை மிகப்பெரிய இயக்கமாக, திட்டமாக மாற்ற வேண்டும் என்று 1970 அப்போதைய முதல்வர் கருணாநிதி முடிவு எடுத்தார். அண்ணா கொண்டு வந்த சிறிய மாற்றத்தை பெரிய இயக்கமாக மாற்ற கருணாநிதி முடிவு செய்தார். விளைவு... குடிசைகளை ஒழித்து எல்லோருக்கும் கான்கிரீட் வீடுகள் கொடுக்கும் முடிவில் கருணாநிதி உருவாக்கிய திட்டமே தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம்.

தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம்

தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம்

தொடக்க காலத்தில் சென்னையில், முக்கியமாக வடசென்னை பகுதிகளில் இருந்த மீனவர் குடியிருப்பு பகுதிகளில் குடிசைகளுக்கு பதிலாக கட்டிடங்களை ஏற்படுத்தும் திட்டம்தான் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் பணிகளாக இருந்தது. அதன்பின் கொஞ்சம் கொஞ்சமாக சென்னை முழுக்க விரிவுபடுத்தப்பட்டது. சென்னையில் மட்டும் முன்னேற்றினால் போதுமா? 1984 இந்த திட்டம் அதிமுக ஆட்சியின் கீழ் மேலும் விரிவுபடுத்தப்பட்டு அண்டை மாவட்டங்களுக்கும் சென்றது. பின்னர் மீண்டும் அடுத்து வந்த திமுக ஆட்சியில் தமிழ்நாடு முழுக்க மாநகரங்கள், நகரங்கள் மற்றும் பேரூராட்சிகளில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் விரிவுபடுத்தப்பட்டது.

எப்படி மாற்றம்

எப்படி மாற்றம்

குடிசைகளை மாற்றி கான்கிரீட் வீடு கொடுப்பது மட்டும் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் நோக்கம் கிடையாது. நல்ல குடிநீர், மின்சார இணைப்பு, பாதுகாப்பு இவை அனைத்தையும் ஒன்றாக வழங்குவதே தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் நோக்கம். அதோடு குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு பிறகு தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய வீடுகள் மீண்டும் புதுப்பிக்கப்படுவதும், புனரமைக்கப்படுவதும் அல்லது புது வீடுகள் வழங்கப்படுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

சென்னை

சென்னை

சென்னையில் வீடு வாங்குவது என்பது பெரிய கனவு. ஆனால் அதே சென்னையில் குடிசைகளில் வசிக்கும் பூர்வகுடி மக்களுக்கு பல இடங்களில் அடுக்குமாடி குடியிருப்புகளில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் மூலம் இலவச வீடுகள் அளிக்கப்பட்டு பெரிய புரட்சியே மேற்கொள்ளப்பட்டுள்ளது. மும்பை போன்ற நகரங்களில் இன்னும் குடிசைகள் அதிகம் இருக்கும் நிலையில் சென்னை இதில் இருந்து வேகமாக மீண்டு வர தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் ஒருவகையில் முக்கிய காரணம்.

நல்ல விஷயம்

நல்ல விஷயம்

தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்திற்கு ஆதரவாக பல விஷயங்கள் உள்ள போது இதற்கு எதிராகவும் பல விஷயங்கள் உள்ளன. சென்னையின் பூர்வ குடிகளை ஊருக்கு வெளியே குடி அமர்த்துவது, மீனவர்களை கடலில் இருந்து பல கிலோ மீட்டர் தூரத்தில் குடி அமர்த்துவது, உடனடியாக வீடுகள் வழங்காதது, இதிலும் சில முறைகேடுகளை செய்வது, மக்களை ஒரு நகரத்திற்கு உள்ளேயே பெரிய இடப்பெயர்வை மேற்கொள்ள செய்வது என்று தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் சில நடவடிக்கைகளுக்கு எதிராக விமர்சனங்களும் வைக்கப்பட்டு உள்ளன.

விமர்சனம்

விமர்சனம்

இப்படிப்பட்ட நிலையில்தான் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் கேபி பார்க் குடிசை மாற்று வாரிய முறைகேடு காரணமாக சர்ச்சையில் சிக்கியது. அங்கு தரமற்ற வீடுகள் கட்டப்பட்டதாக அதிமுக ஆட்சி மீது புகார் வைக்கப்பட்ட நிலையில் திமுக ஆட்சி தற்போது இதை விசாரிக்க தொடங்கி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் சென்னை பெரம்பூரில் முதல்வர் ஸ்டாலின் தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய கட்டமைப்பை நேரில் சென்று சோதனை செய்யும் அளவிற்கு இந்த விஷயம் பெரிய அளவில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதற்கு மத்தியில்தான் குடிசைமாற்று வாரியம், இனி, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் எனச் செயல்படும் என்று தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார்.

முதல்வர்

முதல்வர்

இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது உரையில், இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் மானிய கோரிக்கைகளில் குடிசை மாற்று வாரியமும் இடம்பெற்று இருப்பதால் அது சம்பந்தமாக அறிவிப்பு ஒன்றை நான் வெளியிட விரும்புகிறேன்.. கோட்டையில் இருந்தாலும் குடிசை வாழ் மக்களின் முன்னேற்றத்தை பற்றி சிந்தித்தவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி.. முதல்முறையாக ஆட்சிக்கு வந்த போது குடிசை பகுதி மக்களின் நன்மைக்காக குடிசை வாரிய திட்டம் என்ற வாரியத்தை தொடங்கினார்.

குடிசை

குடிசை

அதன் மூலம் பல்லாயிரக்கணக்கான குடிசை மக்கள் பயன்பெறும் வகையில் அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டிக்கொடுத்தார். அன்று மத்தியில் அமைச்சராக இருந்த பாபுஜி அந்த திட்டத்தை பாராட்டி புகழ்ந்து பேசினார். இந்த திட்டத்தை நாடு முழுக்க கொண்டு வர வேண்டும் என்று கூறினார். இந்தியாவிற்கே எடுத்துக்காட்டான திட்டம் இது என்று அவர் கூறினார். பல லட்சம் பேர் இந்த திட்டம் மூலம் பயன் அடைந்தனர்.

என்ன சொன்னார்?

என்ன சொன்னார்?

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் எண்ணத்தில் உதித்துச் சிறப்பாகச் செயல்பட்டுவரும் குடிசைமாற்று வாரியம், இனி, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் எனச் செயல்படும்; ஏழை மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும், என்று குறிப்பிட்டார். இந்த புதிய நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் வரும் நாட்களில் 9 மாவட்டங்களில் மொத்தம் 6 ஆயிரம் குடியிருப்புகளை கட்ட ரூ.950 கோடியில் கட்ட இருக்கிறோம்.

 அறிக்கை

அறிக்கை

தென்காசி, திண்டுக்கல், நெல்லை, மதுரை, தஞ்சை, சிவகங்கை, தேனி, நாமக்கல், சேலம் மாவட்டங்களில் புதிய குடியிருப்புகள் வர உள்ளன. சென்னை மற்றும் இதர நகரங்களில் 601 திட்டப் பகுதிகளில் 28,247 அடுக்குமாடி குடியிருப்பு இடிக்கவும், புதிய கட்டுமானங்களை இங்கு மேற்கொள்ளவும் உள்ளோம் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியமாக உருப்பெற்று இருக்கும் குடிசை மாற்று வாரியம் அடுத்தகட்ட கட்டுமான, குடியமர்வு பணிகளில் இறங்கி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+