"நம்பர் 60".. மின்சார வாரியம் முக்கிய முடிவு.. இபி போர்ட் போட்டு தாக்குதே.. வீடுகளில் என்ன நடக்கும்?
சென்னை; தமிழ்நாட்டில் தங்கு தடையின்றி சீரான மின் விநியோகம் வழங்க இபி மின்சார வாரியம் புதிய திட்டம் ஒன்றை வகுத்து உள்ளது.
தமிழ்நாட்டில் மின்சார தேவை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இனி வரும் நாட்களில் அதிக மின் தேவை ஏற்பட்டால் அதை சமாளிக்க தமிழ்நாடு மின்சார வாரியம் தயாராக உள்ளது என்று மின்சார வாரிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன .

அதீத மின் தேவை காரணமாக தமிழ்நாட்டில் அவ்வப்போது மின் தடை ஏற்பட்டு வருகிறது . இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் உடனடியாக சரி செய்ய சென்னையில் 60 பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது என்று அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சென்னையில் இரவு நேரங்களில் ஏற்படும் மின் தடையை உடனுக்குடன் சரி செய்ய 60 பறக்கும் படை களத்தில் இறக்கப்பட்டு உள்ளது, இவர்கள் நேரடியாக மின் தடை ஏற்பட்ட இடங்களுக்கு சென்று உடனுக்குடன் மின்தடை பிரச்னையை சரி செய்வார்கள்.
தமிழ்நாட்டின் மின்சார நுகர்வு புதிய உச்சத்தை நேற்று எட்டி இருக்கிறது. 430.13 மில்லியன் யூனிட் அளவுக்கு மின்சார நுகர்வு உள்ளது..
மின் தேவை உச்சம்; அதீத மின் தேவை காரணமாக கடந்த வருடம் கோடை காலத்தில் மின் தடைகள் அதிகம் இருந்தது. அது ஆளும் திமுக மீது விமர்சனமாக மாறியது.
இந்த ஆண்டு அதேபோல் மழை காலத்தில் எங்கும் மின்தடை ஏற்பட கூடாது என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்., அதேபோல் பள்ளிகளில், கல்லூரிகளில் தேர்வு சீசன் தொடங்கியுள்ள நிலையில், மாநிலம் முழுவதும் தடையில்லா மின்சாரம் வழங்குமாறு டாங்கெட்கோ தனது அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, TANGEDCO ஏற்கனவே மாநிலம் முழுவதும் அவ்வப்போது பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளது, எனவே இந்த காலகட்டத்தில் பராமரிப்புக்காக 'மின் தடை' இருக்காது. அவசரகாலம் தவிர சப்ளையை நிறுத்தக் கூடாது என கள அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மின்சார துறை முக்கிய அறிவிப்பு: இபி தொடர்பான புகார்களை இனி செயலியில் அளிக்கலாம் என்று தமிழ்நாடு மின்வாரியம் அறிவித்துள்ளது. TANGEDCO என்ற செயலியில் இதற்கான வசதி உள்ளது.
TANGEDCO செயலியை பயன்படுத்தி எளிதாக லாக் இன் செய்து உங்கள் புகாரை அளிக்கலாம். இதில் லாகின் செய்த பின் உங்கள் இபி நம்பர் மற்றும் போன் எண்ணை வழங்க வேண்டும். அதன்பின் என்ன மாதிரியான புகார் என்பதை கொடுக்க வேண்டும்.
மின்தடை, மீட்டர் பழுது, கூடுதல் மின்கட்டண வசூல் உள்ளிட்ட புகார்களை இனி செல்ஃபோன் 2 செயலியில் புகாரளிக்கும் வசதியை அறிமுகம் செய்துள்ளது TANGEDCO. மின்னகத்தின் நுகர்வோர் சேவை மைய எண்ணான 94987 94987 என்ற எண்ணிலும் புகார்களை பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பாக இனிமேல் அதிவேகத்தில் மக்கள் குறைகளை தீர்க்க வேண்டும் என்று அரசு சார்பாக உத்தரவிடப்பட்டு உள்ளது.
புகார்கள்: அதன்படி புகார் கொடுத்த 2 மணி நேரத்திற்குள் மின்தடை தொடர்பான புகார்களை சரி செய்ய வேண்டும். மின்சார வயர்கள் தொடர்பான பிரச்சனை 5 மணி நேரத்திற்குள் தீர்க்க வேண்டும். பெரிய பிரச்சனைகள் , டிரான்ஸ்பார்ம் பிரச்சனைகளை 10 மணி நேரத்திற்குள் தீர்க்க வேண்டும்.
புதிய மின்சார இணைப்புகளை ஏற்படுத்த கோரிக்கை வைக்கப்பட்டால் 24 மணி நேரத்திற்குள் அதை மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications